BREAKING NEWS
Search

சென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை?

கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் சீமான்… இனி வெளிநாடு செல்ல தடை?

டொரன்டோ: தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மற்றும் seeman-torontoமாவீரர் தின நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான், சட்ட விரோதமாகப் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

கனடாவில் டொரன்டோ நகரில், மாவீரர் தினத்துக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “பிரபாகரனை நான் அண்ணன் என்று கூறினால் என்னை புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள்.

கற்பழித்தவன், கொலை செய்தவன் எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத, கொலை செய்யாத, போர்க் கைதிகளை பாதுகாத்த, புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னவென்று கூறுவது…” என்றார்.

சீமானின் இந்தப் பேச்சு சட்ட விரோதம் என்று கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்குப் பிறகு, அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கனடா நாட்டுப் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

சீமானும் கனடாவை விட்டு வெளியே விரும்புவதாக விசாரணையின்போதே கூறியதால், அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீமானின் வழக்கறிஞர் ஹதயாத் நஸாமி கூறுகையில், “பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத்துறை தீர்மானித்தது. இருப்பினும் தானே செல்வதாக சீமான் கூறினார்” என்றார்.

இதைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் நேற்று முன்தினம் நள்ளிரவு டொரண்டோ நகரில் இருந்து சென்னை புறப்பட்டார். டொரன்டோ விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

“தமிழ் இன விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டும் என்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது.

அதனால், போராடும் எங்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விட்டிருக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர்கள் கொடுத்த கடும் நெருக்கடியின் விளைவாக, நான் நிகழ்த்த இருந்த மாவீரர் தின உரையைத் தடுத்து நிறுத்திய கனடா அரசாங்கம், என்னை நாட்டை விட்டுச் செல்லும்படி பணித்துள்ளது.

இதனால் நான் தமிழ்நாடு திரும்புகிறேன். சிங்கள அரசுக்கு கனடா அரசு பணியலாம். ஆனால் தமிழர்களுக்காக போராடுவதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனது போராட்டம் தொடரும்…” என்றார்.

இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீமானை  வரவேற்க அவரது இக்கத்தினர் திரண்டு வந்திருந்தனர்.

வேறு நாடுகளுக்குச் செல்வதையும்…

கனடா சம்பவம் மூலம், சீமான் சட்ட விரோதமாகப் பேசுபவர் என்ற தோற்றம் அவரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இதையே காரணமாக வைத்து, அவர் வேறு நாடுகளுக்கு செல்லவோ, புலம்பெயர்த் தமிழர் நிகழ்வுகளில் பங்கேற்கவோ முடியாத அளவு முடக்கப்படக் கூடும் என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
One thought on “சென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை?

  1. sam

    தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு ,காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது இங்கிலாந்து எதிர்ப்பு, இவர்களுக்கு இருக்கிற ஒரு பண்பு கூட இந்திய அரசுக்கு இல்லையே……………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *