BREAKING NEWS
Search

சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்!

சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்!

சென்னை சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சில திரையரங்குகளுள் கமலாவும் ஒன்று. வடபழனியின் முக்கிய அடையாளம் இது என்று கூடச் சொல்லலாம்.13kamal

1970-ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 1000 இருக்கைகளுடன் இயங்கி வந்த இத் திரையரங்கம் கடந்த சில தினங்களாக நவீனப்படுத்தல் மற்றும் மேலும் ஒரு மினி திரையரங்கை அமைப்பதற்காக மூடப்பட்டிருந்தது.

இப்போது கமலா ஸ்க்ரீன்ஸ் என்ற புதிய பெயரில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக மாற்றம் பெற்றுள்ளது கமலா.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் மத்திய இணையமைச்சர் நெப்போலியன் ஆகியோர் திரையரங்குகளைத் திறந்து வைத்தனர். நடிகர்கள் விஜய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இதுகுறித்து கமலா திரையரங்க உரிமையாளர் விஎன் சிதம்பரம் கூறியதாவது:

இந்தத் திரையரங்கை 1970-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், அஜீத், விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களைத் திரையிட்டு வந்துள்ளோம். பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடி ராசியான திரையரங்கு என்ற பெயரைப் பெற்றுள்ளோம். ரசிகர்களின் ரசனையை அறிந்துகொள்ள எங்கள் திரையரங்குக்கு வராத நடிகர், நடிகைகளே இல்லை.

994 இருக்கைகள் கொண்ட அரங்கு -தற்போது கமலா ஸ்கிரீன் 1 (70எம்எம் -588 இருக்கைகள்), கமலா ஸ்கிரீன் 2 (366 இருக்கைகள்) என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய அரங்குகளை அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறோம்.

ஃபிலிம் மூலம் திரையிடுவதில் உள்ள துல்லியம் டிஜிட்டில் திரையீட்டில் இல்லை என்பதால் எங்களது திரையரங்குகிளில் ஃபிலிம் புரொஜக்டரையே பயன்படுத்துகிறோம். இந்தியாவில் முதல்முறையாக ஒலியமைப்பில் “ஃபோர் வே சவுண்டு சிஸ்டம்’ முறையைப் பயன்படுத்தியருக்கிறோம். அதிக ஒலியினால் நம் உடலில் அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படாமல் இருக்க சுவர்களில் சிறப்பு சீலிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. லிஃப்ட் வசதிக்கான பணி நடைபெற்று வருகிறது.

உயர்தரமான ஏ.சி. வசதி, புஷ் பேக் இருக்கை வசதிகள், திரையரங்கின் இருபுறமும் கார், டூ வீலர், சைக்கிள்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதி, தரமான கேன்டீன், ஆன் லைன் டிக்கெட் புக்கிங் வசதி, சுகாதாரத்துடன் கூடிய நவீன டாய்லெட் வசதி, கனிவான பணியாளர்கள் என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கேயுரிய அனைத்து சிறப்பம்சங்களும் இங்கு உள்ளன. ஆனாலும் எல்லா தரப்பு மக்களும் வந்து செல்லக் கூடிய அளவில் நியாயமான டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நிர்ணயித்துள்ளோம்.

பழைய திரையரங்குகளெல்லாம் திருமண மண்டபங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறி வரும் சூழ்நிலையில் எங்கள் திரையரங்கை மீண்டும் நவீனப்படுத்தியுள்ளோம். ரசிகர்களின் ஆதரவும் அரசின் சாதகமான அணுகுமுறையும்தான் இதற்குக் காரணம், என்றார்.
4 thoughts on “சென்னையில் மேலும் ஒரு மல்டிபிளெக்ஸ்!

 1. R.Gopi

  //1070-ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 1000 இருக்கைகளுடன் இயங்கி வந்த இத் திரையரங்கம் கடந்த சில தினங்களாக நவீனப்படுத்தல் மற்றும் மேலும் ஒரு மினி திரையரங்கை அமைப்பதற்காக மூடப்பட்டிருந்தது.//

  *****************

  1070-ம் ஆண்டிலிருந்து????

  Is it 1970 ????
  —————–
  Thanks… corrected

 2. கிரி

  நம்ம ஆளுங்க புளிச் புளிச் னு கண்ட எடத்துல எச்சை துப்பாம இருந்தா சரி

 3. simbhu

  எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், அஜீத், விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் . others are famous actors .why they are including simbhu……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *