BREAKING NEWS
Search

சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.

இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

ரஜினிகாந்த்-

அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !

அபூர்வ ராகங்கள் தொடங்கி எந்திரன் வரை அவரது ஒவ்வொரு படமும் சிகரம் தொட்டவை. அவரது ஒவ்வொரு மெகா வெற்றிக்கும் அவரே போட்டியாளர். வேறு எவராலும் நெருங்க முடியாத உச்ச நட்சத்திரம்.

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற சாதாரண நபர், ரஜினிகாந்த்தாக மாறிய பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். ஆனால் அந்த சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ரஜினி என்ற அற்புத கலைஞனின் கடின உழைப்பும் இமாலய ஈடுபாடும் அளப்பரிய மனிதாபிமானமும் மட்டுமே அதில் நிறைந்திருப்பதைக் காணமுடியும்.

முன்பு உலக சந்தைக்குள் இந்திய சினிமா கால் பதித்ததற்கும், இன்று எந்திரன் மூலம் உலக சினிமாவை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததற்கும் காரணகர்த்தா இந்த சூப்பர் ஸ்டார்தான்!

மக்கள் மனங்களில் குடிகொண்டுள்ள (The Messiah of Masses) அந்த மாபெரும் கலைஞனை கவுரவிக்க ஏஜிஎஸ் சினிமா ஒரு திரைத் திருவிழாவை நடத்துகிறது.

ஒரு வார காலம் நடக்கும் இந்த திரைத் திருவிழாவில் இடம்பெறும் படங்கள்:

செப் 24. வெள்ளிக்கிழமை: அண்ணாமலை

செப் 25. சனிக்கிழமை: மன்னன்

செப் 26. ஞாயிற்றுக்கிழமை: தளபதி

செப் 27. திங்கள்கிழமை: குருசிஷ்யன்

செப் 28. செவ்வாய்க்கிழமை: முரட்டுக்காளை

செப் 29. புதன்கிழமை: முத்து

செப் 30. வியாழக்கிழமை: சந்திரமுகி

சூப்பர் ஸ்டாரின் இந்த ஒருவார கால திரைவிழாவை சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா நாளை (வெள்ளிக்கிழமை) துவக்கி வைக்கிறார்.

எங்கிருக்கிறது ஏஜிஎஸ்?

திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மதராஸபட்டினம் என அடுத்தடுத்து ஹிட் படங்களைத் தந்து இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராகத் திகழும் கல்பாத்தி அகோரத்துக்குச் சொந்தமானது இந்த ஏஜிஎஸ் சினிமாஸ்.

முன்பு வில்லிவாக்கம் ராயல் என்ற பெயரில் இயங்கிய திரையரங்கை விலைக்கு வாங்கிய கல்பாத்தி அகோரம், அதனை முழுமையாக இடித்துவிட்டு, 5 திரையரங்குகளை உள்ளடக்கிய அதிநவீன மல்டிப்ளெக்ஸாக மாற்றியுள்ளார்.

அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து 5 நிமிடம் பயணம் செய்தால் ஏஜிஎஸ் ராயல் வந்துவிடும் (மேப் இணைக்கப்பட்டுள்ளது).

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

 1. Laxman

  சூப்பர் சூப்பர் சூப்பர்

  சென்னை – செப்டம்பர் 30 இரவு காட்சி / அக்டோபர் 1 காலை காட்சி டிக்கெட்ஸ் எக்ஸ்ட்ரா இருந்தால் – தயவு செய்து தகவல் தரவும். 2 டிக்கெட்ஸ் தேவை.
  lax
  893911441

 2. rajnianifa

  The ‘Enthiran’ storm has started blowing USA. The Rajinikanth-Aishwarya starer has set new North American record in the advance booking arena.

  ‘Enthiran‘ is opening on October 1 all over the world including USA. But the tickets for the first week were a sell out within ten minutes of the advance booking counter opening.

  The record breaking event happened at the Jackson Heights in New York. Usually the advance booking starts for a Hollywood film only a week before the release of the film. But the advance booking for ‘Enthiran’ started two weeks before and even then it was a record sell out.

  ‘Enthiran’ is the Indian film of the year which generated unprecedented pre-release expectations. The magnum opus of Sun Pictures is releasing on October 1 in over 3000 screens around the world. ‘Enthiran- The Robot’ is releasing in India, USA, UK, Europe, Malaysia, Singapore& Australia in Tamil, Telugu and Hindi languages.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *