BREAKING NEWS
Search

சென்னைப் போலீசாருக்கு சூப்பர் ஸ்டார் தந்த அசத்தல் தீபாவளிப் பரிசு!

சூப்பர் ஸ்டார் தந்த தீபாவளிப் பரிசு!

ந்திரன் க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில், ‘ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்’ என துப்பாக்கி புல்லட்டுகளை போலீசாருக்கு தீபாவளிப் பரிசாகத் தந்தார் சிட்டியாக தோன்றிய ரஜினி. ஆனால் நிஜத்தில் ‘ஹேப்பி தீபாவளி காப்ஸ்’ என்று சென்னையின் இரு முக்கிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அனைத்துப் போலீசாருக்கு அட்டகாசமான தீபாவளிப் பரிசுகளை தந்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம், தேனாம்பேட்டை காவல் நிலையங்களில் உள்ள அனைத்துப் போலீசாருக்கும் ஒரு ரெடிமேட் சட்டை ,  ஒரு கிலோ இனிப்பு மற்றும் பெரிய பட்டாசு கிப்ட் பாக்ஸ் அடங்கிய பரிசுப் பார்சல் அது!

இந்த இரு காவல் நிலைய போலீசாரும், ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம், ராகவேந்திரா மண்டபம் மற்றும் ரஜினி பணியாற்றும் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள்.  .

தனக்காக இரவு பகல் பாராமல் பணியிலிருக்கும் போலீசார், தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட ஒரு சிறிய பரிசு இது என்றும் அவர் குறிப்பு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிடவேண்டாம் என்று கூறிவிட்டு பேசிய அவர், “இந்த பரிசு தகவல் வெளியில் தெரிய வேண்டாம் என்றுதான் ரஜினி சாரிடமிருந்து குறிப்பு வந்திருந்தது. ஆனால் எப்படியோ மீடியாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது…”, என்றவர், சொன்னதுதான் பாட்ஷா லெவல் பஞ்ச்:

“தமிழகத்தின் அனைத்துப் போலீஸ் நிலைய காவலர்களும் இப்படி ரஜினியிடம் ‘பரிசு’ வாங்க ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு ‘மனசு வைப்பாரா’ ரஜினி?” என்றார் ஒரு கண்சிமிட்டலோடு!




8 thoughts on “சென்னைப் போலீசாருக்கு சூப்பர் ஸ்டார் தந்த அசத்தல் தீபாவளிப் பரிசு!

  1. rajnibabu

    தலைவா நீ நலமுடன் வாழ்க…. என் உயிரே உங்களுக்கு தான் .. தீபாவளி வாழ்த்துகள்.. உங்களை எதிர்ப்பவன் காணாமல் போய்விடுவான்…

  2. KICHA

    “தமிழகத்தின் அனைத்துப் போலீஸ்
    நிலைய காவலர்களும்
    இப்படி ரஜினியிடம் ‘பரிசு’ வாங்க
    ஆவலாக இருக்கிறார்கள் .
    அதற்கு ‘மனசு வைப்பாரா’ ரஜினி?”
    என்றார் ஒரு கண்சிமிட்டலோடு !

    Hahaha
    seekirama nadakum

  3. எப்பூடி

    //“இந்த பரிசு தகவல் வெளியில் தெரிய வேண்டாம் என்றுதான் ரஜினி சாரிடமிருந்து குறிப்பு வந்திருந்தது. ஆனால் எப்படியோ மீடியாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது…”,//

    இது தெரிந்தது, தெரியாதது எத்தனையோ…………………?

  4. Raja

    //“தமிழகத்தின் அனைத்துப் போலீஸ் நிலைய காவலர்களும் இப்படி ரஜினியிடம் ‘பரிசு’ வாங்க ஆவலாக இருக்கிறார்கள்

    ரஜினி அரசாங்காம் தான் அவங்களுக்கு சீக்கிரம் சம்பளமே கொடுக்க போகுது.

  5. Shriram

    Rajinikanth has done so many charities without any whisper. He is a true philontherapist in that sense, by which, whatever one does with the right hand, the other hand should not know. in this commercial as well as publicity world, where even a tube light contribution is held with much fanfare, its greally nice to see such a person being so humble. We have to learn such good things from this great man.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *