Breaking News

‘சூப்பர் ஸ்டார்’ பெயரில் தமிழ் சினிமா கிரிக்கெட் அணி… ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் தொடர்!

Tuesday, December 21, 2010 at 2:24 pm | 1,943 views

‘சூப்பர் ஸ்டார்’ பெயரில் தமிழ் சினிமா கிரிக்கெட் அணி… ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் தொடர்!

மிழ் சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியைக் குறிக்கும் விதத்தில் இந்தப் பெயர் வைக்கப்பட்டதாக அணியின் அமைப்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றும் இந்த மெகா கிரிக்கெட் போட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி முன்னிலையில் வரும் ஐனவரி மாதம் நடக்கிறது.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.

இவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடினால் அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வருவாயை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தும் நோக்கிலும் பிரபலங்களின் கிரிக்கெட் அமைப்பு ஒன்றை செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பின் அறிமுக விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது.

கிரிக்கெட் அமைப்பினை அறிமுகப்படுத்தி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியதாவது:

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செல¤ப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. இதற்காக தமிழ் நடிகர்களைக் கொண்ட அணி அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பேச்சு நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டதும் அறிவிப்போம்.

இவர்களைத் தவிர ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, கார்த்தி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அழைத்தோம். அவரும் கண்டிப்பாக வருவதாகவும், அணியை உற்சாகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அவர் முன்னிலையில் இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தெலுங்கு அணியில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி தொழில்முறையிலான ஆட்டமாக இருக்கும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டிகள் நடக்கும்.

சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். போட்டிக்கென பிரத்யேக கோப்பை, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு கலரில் ஆடை ஆகியவை தயாராகிறது. ராடன் மீடியா, ஸ்பிரின்ட் அண்ட் ரிதம் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

ஜெயிக்கும் அணிக்கு ரூ 25 லட்சம் பரிசு அளிக்கப்படும். இந்தத் தொகையின் ஒரு பகுதி நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும்”, என்றார் சரத்குமார்.


சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்!

அணியின் பெயர் என்ன என்ற கேள்விக்கு, இந்த சிசிஎல்லின் இயக்குநர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் கூறியது:

“மும்பை அணிக்கு மும்பை ஹீரோஸ் என்று வைத்துள்ளனர். கன்னட அணிக்க கன்னட ராயல்ஸ் என்று வைத்துள்ளனர். தெலுங்கு அணிக்கு தெலுங்கு டைகர்ஸ் என்று வைத்துள்ளனர். தமிழ் டைகர்ஸ் என்று நாம் வைக்க முடியாது. விட மாட்டார்கள். அதனால், நம் எல்லோருக்கும் பிடித்த, ஒரே ஸ்டார்… சூப்பர் ஸ்டார் பெயரில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என்று வைத்துள்ளோம்”, என்றார்.

ரஜினி இந்த போட்டிகளில் பங்கேற்பாரா? என்று கேட்டபோது, “ரஜினி சார்கிட்ட இந்த விஷயம் குறித்துப் பேசியதும் உற்சாகமாக எங்களை வாழ்த்தினார். அப்போது, ‘நான் வந்து கிரிக்கெட் ஆடறது சரியா வராது. எந்த குறிப்பிட்ட அணிக்காகவும் ஆட முடியாது (காரணம் எல்லா மொழியிலும் அவர்தான் சூப்பர் ஸ்டார்!). வேண்டுமானால் நான் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வீரர்களுக்கு கூல்டிரிங்கஸ் கொடுக்கச் சொன்னா கூட ஓகேதான்… நான் வர்றேன் கவலைப்படாதீங்க”, என்றார் தமாஷாக. எப்படியோ நீங்கள் வந்தா போதும் என்று கூறியுள்ளோம்,” என்றார்.

போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ராதிகாவின் ராடான் டெலிவிஷன் பெற்றுள்ளது.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

5 Responses to “‘சூப்பர் ஸ்டார்’ பெயரில் தமிழ் சினிமா கிரிக்கெட் அணி… ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் தொடர்!”
 1. arulselvan says:

  vino, good news.also please read

  விருதகிரி விமர்சனம் (Virudhagiri review)
  விருதகிரி நடந்தது என்ன?
  in
  http://www.arulselvan.com/2010/12/virudhagiri-review.html
  ______

  Sure…

 2. தலைவர் எந்த அணிக்கு ஆடினாலும் அடுத்த அணிக்கு ஆபத்துதான், ஏன்னா தலைவர்தான் ஒரு ரன் அடிச்சா நூறு ரன்ஸ் கணக்கில வந்திடுமே :-)

 3. KICHA says:

  Good news. Thanks vino.

 4. Anand says:

  உலகளாவிய சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் தலைமையில்
  சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி! வெற்றி பெற வாழ்த்துக்கள்…..

 5. prasanna says:

  Thanks for the update vino……………!!!!!!
  அதனால், நம் எல்லோருக்கும் பிடித்த, ஒரே ஸ்டார்… சூப்பர் ஸ்டார் பெயரில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என்று வைத்துள்ளோம்”, என்றார் ….Raadhika …Super
  Nalla vela Supreme starnu peru veikala Raadhika………………:))
  Andha pottiku thalaivar vandha neriya peru avar paakathan varuvaanga……!!!!!!!!!

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)