BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார்… சுப்ரீம் ஸ்டார்… ராஜா கிளப்பிய பரபரப்பு!


சூப்பர் ஸ்டார்… சுப்ரீம் ஸ்டார்… ராஜா கிளப்பிய பரபரப்பு!

குசேலன் படத்தின் ஒரு காட்சியில், ‘படம் நல்லாருந்தாத்தான் ஜனங்க பாப்பாங்க. இல்லன்னா இந்த அசோக்குமார் நடிச்சிருந்தா கூட பார்க்க வரமாட்டாங்க!’ என்பார் ரஜினி.

melody_raja

சின்னச் சின்ன நடிகர்கள் கூட ஒப்புக் கொள்ளத் தயங்குகிற இந்த வசனத்தை, படத்தில் மட்டுமல்ல எந்த மேடையிலும் தைரியமாகப் பேசுபவர் ரஜினி.

இதே மாதிரி இயல்பு கொண்ட இன்னொருவர் இளையராஜா. தன்னை பெரிய இசைமேதை என்று அவர் எங்கும் சொல்லிக் கொண்டதில்லை. ‘பாட்டு நல்லாருந்தாத்தான்யா இசையமைப்பாளன்… இல்லன்னா சும்மா’ என்பார்.

எந்த விழாவாக இருந்தாலும் மனதுக்குத் தோன்றியதை மேடைகளில் பேசிவிட்டுச் செல்வது அவர் வழக்கம். அதன் பின்விளைவுகள் பற்றி யோசிக்கும் ரகமில்லை அவர்.

பொதுவாக பட விழாக்களில் பங்கேற்பதில்லை இளையராஜா. வெகு அரிதாகத்தான் சில நிகழ்ச்சிகளுக்கு வருவார். அவர் வந்தால் நிச்சயம் அன்று காரமாகவோ கலகலப்பாகவோ பேசிவிட்டுப் போய்விடுவார்.

சமீபத்தில் பழஸிராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ராஜா, அந்தப் படத்தில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் படத்துக்கு தான் இசையமைத்தபோது, ஒரு கவிஞர் உணர்ச்சியற்ற வரிகளை எழுதிக் கொடுக்க, அதை தனது இசையால் எப்படி உணர்வுப்பூர்வமாகக் காட்டினார் என்பதை விரிவாகச் சொல்ல, வந்திருந்தவர்கள் பரவசமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இந்தப் படத்தில் சரத்குமார் நல்லா நடிச்சிருந்தார். அதுக்காக மம்முட்டி சரியா நடிக்கலன்னு நான் சொன்னதா எடுத்துக்காதீங்க. அவர் அற்புதமான நடிகர். அவர் நல்லா நடிச்சார் என்று சொல்வதில் ஒரு விசேஷமும் இல்லை. அந்த பழஸிராஜாவாகவே மாறிட்டார்…” என்றார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான கதை வசனகர்த்தா எம்டி வாசுதேவன் நாயர் பற்றி பேசியபோது, இப்படிச் சொன்னார்:

“படத்துக்கு கதைதான் முக்கியம். நல்ல கதைகள்தான் நல்ல ஹீரோக்களை உருவாக்குது. நல்ல கதை இல்லன்னா சூப்பர் ஸ்டாரும் இல்லை… சுப்ரீம் ஸ்டாரும் இல்லை…” என்று சிரித்தபடியே கமெண்ட் அடிக்க, அதை மேடையிலிருந்த சரத்குமார் மட்டுமல்ல, அனைவருமே ரசித்தனர்.

-நிருபன்
6 thoughts on “சூப்பர் ஸ்டார்… சுப்ரீம் ஸ்டார்… ராஜா கிளப்பிய பரபரப்பு!

 1. rasigan

  ஒரு கவிஞர் உணர்ச்சியற்ற வரிகளை எழுதிக் கொடுக்க, அதை தனது இசையால் எப்படி உணர்வுப்பூர்வமாகக் காட்டினார் என்பதை விரிவாகச் சொல்ல, வந்திருந்தவர்கள் பரவசமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

  இளையராஜா. தன்னை பெரிய இசைமேதை என்று அவர் எங்கும் சொல்லிக் கொண்டதில்லை.

  ஒண்ணுமே புரியலையே…. எங்கேயோ இடிக்குது..

 2. rasigan

  நரேன் செய்தியின் இரண்டு பகுதிகளை பாருங்க..
  தான் இசை மேதை என்று சொல்லமாட்டாராம் ஆனா தனது இசையால் உணர்ச்சி இல்லாத வரிகளை உணர்வுப்பூர்வமாகக் காட்டுவாராம்..
  அத தான் சொன்னேன்..

 3. Anbu

  நண்பர்களே,
  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நம் தலைவருக்கு வோடே போடுங்கள் நம் தலைவர் 8ஆவது இடத்தில இருக்கிறார்
  http://www.whopopular.com/Rajinikanth
  nandri

 4. Adango

  அன்பு

  பாலகிருஷ்ணா world No.1 நடிகராம். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

  அதுல போய் vote போட சொல்றீங்களே. உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலே?

  ஹையோ! ஹையோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *