BREAKING NEWS
Search

சுறா – சினிமா விமர்சனம்

சுறா – விமர்சனம்

நடிகர்கள்: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்

இசை: மணிஷர்மா

ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு

பிஆர்ஓ: பிடி செல்வகுமார்

தயாரிப்பு: சங்கிலி முருகன்

இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்

மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சில ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர். குருவி, வில்லு, வேட்டைக்காரன் வரிசையில், இதோ அவரது அடுத்த ‘மெகா படம்’ சுறா!

ரசிகர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல… எனக்கு தயாரிப்பாளர் இருக்கிறார். எத்தனை மட்டமாக படம் எடுத்தாலும் அதைக் கொண்டுபோய் சேர்க்கும் ஊடக பலம் இருக்கிறது… இதுதான் என் பாணி என்பது விஜய்யின் பாலிஸி. எனவே இதில் யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சி ஒன்றே போதும், படம் எப்படிப்பட்டது என்பதை விளக்க…

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது கடலோர காவல்படை. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை. அது சுறா. உடனே ஊர்மக்கள், ‘அடடா அந்த தம்பிய போல வருமா… அய்யோ எங்க உயிரே அவர்தானே..’ என்கிற ரேஞ்சுக்கு புலம்பிக் கொண்டிருக்க, அப்படியே கடலுக்குள்ளிருந்து மேல் நோக்கி சீறிக் கிளம்பி வருகிறார் சுறா… அதாது ஹீரோ விஜய்! அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!

அந்தக் காட்சியிலேயே சினிமா ரசிகர்களை அடித்து வீழ்த்தி விடுகிறார் விஜய். அப்போது விழுந்த திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை நொண்டியடித்துக் கொண்டே இருக்கிறது…

சுறாவின் கதை?

அரதப் பழசான பாகவதர் காலத்து சமாச்சாரம் அது.

யாழ்நகர் (புலம்பெயர்ந்த தமிழ் ரசிகர்களை அத்தனை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களோ! ) என்ற மீனவ கிராமத்துக்கே சுறா (விஜய்) தான் செல்லப் பிள்ளை. இவரில்லையென்றால் ஊர் இல்லை… ஊர் இல்லையென்றால் இவர் இல்லை.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் காதலியாகி, வித விதமான லொக்கேஷன்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ்கில் தீம் பார்க் அமைக்க அந்த மீனவ கிராமத்தைக் காலி பண்ண முயல்கிறார். கிராமத்தையும் மக்களையும் காக்கும் பெரும்பொறுப்பு சுறாவின் சின்ன தோள்களில் விழுகிறது. எனவே சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் வில்லன். ஆனால் திடீரென்று கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார் சுறா.

இந்த போராட்டத்தில் தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் விருப்பமிருந்தால் நீங்கள் பார்க்க வேண்டிய க்ளைமாக்ஸ் பகுதி.

வழக்கம் போல இந்தப் படத்திலும் தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டுகிறார் விஜய். விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்…

கனல் கண்ணன் சொல்லிக் கொடுத்த சண்டையை வஞ்சனையில்லாமல் போடுகிறார். நின்றால் நடந்தால் ஒரு பஞ்ச் டயலாக் என பயமுறுத்துகிறார்.

மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சினையெல்லாம் தொடுகிறார்… ஆனால் எதற்கும் சரியான காரணம் வேண்டுமல்லவா… தைரியமிருந்தால் நேரடியாக இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படமெடுத்து இந்த வசனங்களை வைக்கலாமே!

க்ளைமாக்ஸ் காட்சியில், ‘இது புலிக்குப் பிறந்தது’ என்று தன்னைப் பற்றி தானே அவர் பஞ்ச் அடிக்க, ‘கொட்டை எடுத்ததா எடுக்காததா’ என கவுண்டர் ரேஞ்சுக்கு டரியலாக்குகிறார்கள் பார்வையாளர்கள்!

நடை, உடை, ஹெலிகாப்டரிலிருந்து இறங்குதல் என எந்தக் காட்சியிலும் சொந்த முயற்சி இல்லை. பாடி லாங்குவேஜுக்குக் கூட அடுத்தவரை நம்பியிருப்பது நல்லதல்ல விஜய்!

இனி வடிவேலு நடிக்கும் படங்களில் அவரும் ஒரு ஹீரோதான் என்று தயக்கமின்றி சொல்லிவிடலாம். இந்தப் படத்திலும் மெயின் ஹீரோவை பல காட்சிகளில் அனாயாசமாக ஓரம் கட்டுகிறார் வடிவேலு. இடைவேளைக்குப் பின் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் அந்த காமெடி ட்ராக் அட்டகாசம்.

ஹீரோயின் தமன்னாவாம். பாடல்களில் மட்டும் அது தெரிகிறது. மற்றபடி படத்தில் அவருக்கு வேலையேதுமில்லை.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஏகாம்பரம் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு முதல் தரம்.

தெலுங்கு தேச இறக்குமதியான மணிசர்மாவின் பாடல்களில் ஒன்றிரண்டு தேறுகின்றன. ஆனாலும் கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

விஜய் படங்களில் இனி தரத்தை எதிர்ப்பார்ப்பது வீண்தானோ!

-என்வழி
68 thoughts on “சுறா – சினிமா விமர்சனம்

 1. palPalani

  கொழம்பு கொதிக்கிறத பத்தி ஒரு வார்த்த கூட காணோம்! இந்த விமர்சனம் ஒரு தலை பட்சமானது!

 2. Nattu

  சூப்பர் விமர்சனம் ! நன்றி ! நன்றி ! நன்றி 🙂

 3. M.Mariappan

  இந்த படத்துக்கு விமர்சனம் தேவை இல்லை இப்ப வருகிற விஜய் படங்களை வால் போஸ்டர் பார்த்தே கதையை சொல்லி விடலாம் இவன் படத்தை சன் டிவி மட்டும் எடுக்க வில்லை என்றால் குருவியை விட மிகவும் மோசமாக போய் இருக்கும் இவன் திருந்தவே மாட்டான் நல்ல வேலை தியேட்டருக்கு போய் படம் பார்க்காமல் காப்பாத்தி விட்டீர்கள் நன்றி mr வினோ .

 4. palPalani

  ஆமாம், உங்கள் விமர்சனம் ஒரு தலை பட்சமானது! கொழம்பு கொதிக்கிறத பத்தி ஒரு வார்த்த கூட காணோம்!

 5. thillainathan

  நான் விஜய் ரசிகன் அல்ல. aanaalum enaku சுறா pidithirukkirathu.

 6. Senthil

  ‘என்வழி ‘ நான் தினமும் பார்க்கும் வெப்சைட்.விஜய் பற்றி தவறாக சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.நான் oru தீவிர rajini rasigan.

 7. Siva

  தவறுகளை தோலுரிப்பது தான் என்வழியின் வேலை..நடுநிலையான விமர்சனம் வினோ.

 8. sshathiesh

  என்வழி தளத்துக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் தளம் ரஜினி புகழ் பாடுவதை விடுத்து இப்போது விஜயை தாக்கும் தளமாக மாறிவிட்டதோ? பலர் சொல்வதுபோல இது ஒருதலைப்பட்சமானதா? உங்கள் ஸ்டைலில் சொன்னால் என் வழியில் நேர்மையான விமர்சனம் எதிர்பார்ப்பது தப்பென்றே சொல்லத் தோன்றுகின்றது. கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் பல வாசகர்களை இழப்பீர்கள். நிச்சயம் இந்த படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் பாருங்களேன்.

 9. alagan.rajkumar

  நான் தான் முன்னாடியே சொன்னன்ல இவன் திருந்தவே மாட்டான் என்று.

 10. kiri

  இது ஒருதலை பட்சமான விமர்சனம். சத்தியமாக சந்திரமுகி & குசேலன் படங்களை விட நல்ல பொழுது போக்கான படம்.

  ரஜினியை மட்டும் புகழ்ந்து தள்ளும் இந்த வேப்சிடேக்கு நான் வரும் ஒரே கரணம் நீங்கா எனது மறத் தலைவன் பிரபாகரனை அதரிபதட்ககதான்.

  நன்றி.
  கிரி

 11. mullaimainthan

  நான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் kiri

 12. பஹ்ரைன் பாபா

  இன்றுதான் படம் பார்த்தேன்.. சரியான விமர்சனம்.. விஜய் இன்னும் பத்து தோல்வி படங்கள் குடுத்தாலும் மாறப்போவதில்லை.. இதே பாணியில்தான் அடுத்து வரும் படங்கள் எல்லாமே இருக்கும்.. படம் பரவா இல்லை ரகம்.. இவரது முந்தைய படங்களை பார்க்கும்போது.. ஆனால் இது பத்து வருடங்களுக்கு முன்னாள் வர வேண்டிய படம்.. அப்போது இது போன்ற மசாலா படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது..
  இப்போது சுத்தமாக இல்லை.. சந்திரமுகியை இந்த படங்களோடு ஒப்பிட்டு ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருக்கிறார்.. என்ன கொடுமை சார் இது…

  படம் பார்த்ததால் சொல்கிறேன்.. உங்கள் விமர்சனத்தில் எந்த குறைகளும் இல்லை.. நேர்மைதான் இருக்கிறது.. உண்மையிலேயே இந்த படத்தில் விஜய் நடனம் நன்றாகத்தான் இருந்தது.. அதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..

 13. eelam tamilan

  I’m not fan on any actors and only support for good story films.. I have not watch this film. but, can understand the film story as it is common story.. but, i accept that Vino is one side person such as total rajani fan and blindly wrote for him as he is the one great for any thing and wrote from his house small function and any sick also as big story… it is your site, you are free to write.. i can not do any thing on that. I visit your site only reason you wrote abt eelam tamil issue without any censorship or not go behind any TN politicians hand..

 14. கிருபா

  எப்பொழுதும் விஜயை பற்றி தவறாக எழுதுவதுதான் என்வழின் வேலை

 15. simple fan of superstar!

  இங்கே கருத்து தெரிவித்துள்ள சிலர் கூறியிருப்பதுதான் ஒருதலைாப் பட்சமாக உள்ளது. என்வழி ரஜிநி ரசிகர்களின் தளம் என்பதாலேயே இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள்.

  முதலில் அந்த கன்றாவி படத்தைப் பாருங்கள். பின்னர் கருத்து சொல்லுங்கள். நிச்சயம் இது ஒருதலைப்பட்சமான விமர்சனம் அல்ல என்பது புரியும். ரஜினி ரசிகன் என்றால் மற்ற படங்கள் பற்றி விமர்சனம் எழுதக் கூடாதா. குப்பை படங்களைக் கூட தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமா?

  இதே சுறாவை தட்ஸ் தமிழும் பிகைன்வுட்ஸும் கிழித்து தொங்கவிட்டிருப்பதைப் படித்துவிட்டு வாங்க. காசுகொடுத்து படம் பார்த்து நொந்துபோன மற்றவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  என்வழி சரியான விமர்சனத்தையே முன்வைத்துள்ளது. அதை சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்.

 16. r.v.saravanan

  ஒரே கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை விட்டு விஜய்
  வித்தியாசமான கதைகளில் நடிக்கலாமே

 17. maalan

  என் சேமிப்பு ரூபா ஐம்பது. நன்றி. ( இவன் படத்தை நன்றாக இருப்பதாக தப்பி தவறி யார் சொன்னாலும் பார்க்க மாட்டேன் என்பது வேறு விஷயம்..) ஹி ஹீ

 18. vasu

  சுறாவை மோசமான படம் என்று எல்லா இணையதளங்களும் பத்திரிக்கை ஊடகங்களும் கூறிவிட்டன வினோ எழுதிய விமர்சனத்தை மட்டும் ஒரு தலை பட்சமானது என்று ஒரு சிலர் குறை கூறுவது நல்லதல்ல.
  http://www.kollywoodtoday.com/reviews/review-sura/
  மேல் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று விமரசனத்தை படியுங்கள் என்னை வயரு குலுங்க சிரிக்க வைத்தது..இந்த படத்தை சன் டிவி கூட காப்பற்ற முடியாதுன்னு நினைக்கிறன்..விஜய் மட்டும் திருந்தினால் பத்தாது விஜய் ரசிகர்களும் திருந்தனும்..

 19. madhumidha

  எஸ் நானும் படம் பார்த்தேன்…. மொக்கை தான்… ஆனால் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடிப்பு மொக்கை என்று நீங்க சொல்லும் போதே தெரிஞ்சு போச்சு. உங்கள் ஆதரவு ரஜினிkku மட்டும் என்று.

  நானும் ரஜினி ரசிகை தான். அதற்காக ஒரு தலை பட்சமாக பேச கூடாது

  ரஜினிக்கு அடுத்த படியாக மாஸ் இருப்பது விஜய்க்கு தான். ரஜினியுடன் ஒப்பிடும் அளவிற்கு விஜய் வளர வில்லை என்பதும் என்னுடைய வாதம்.

  எனி வே ஒரு மொக்கை படத்துக்கு இவளவு பெரிய பில்ட் அப் ஓவர் தான்.

  நல்ல நடிகர் சூர்யாவின் சிங்கம் படத்திற்கு வெயிட் பண்றேன்.

  மதுமிதா
  madhumidha1@yahoo.com

 20. naren

  விஜய் – ‘ குரலி வித்தை’ காட்டி cm post வாங்க ட்ரை பண்றாங்க.. (ஹி ஹி) … இவன் ரஜினி ஸ்டைல் COPY அடிச்சி பாஸ் பண்றான்.. சொந்தமா ஒன்னும் TRY பண்ண மாறி தெரியல..

  ATLEAST பறக்குறத நிப்பாட்ட சொல்லுங்கப்பா…
  குருவி >>>>> சுறா…..

 21. Santhosh

  Mr.Vino is doing a great job. People criticizing him, should be unaware of the fact that his recent review about “Angadi Theru” has been printed on the film’s AD.
  Mr.Kiri amused me by comparing sura with chandramukhi and kuselan…actually Ramarajan, Pandiyarajan, Bhagyaraj, Sotharaj, TR were more successful comparing vijay..he has to break their records first….anyways, good luck for all hardcore Vijay fans, hope your hero would please you guys with at least one good/hit film before he quits…..

 22. eelam tamilan

  please dont put me to vijay fan or any such. i am not fan of any of thee actors or not going to watch this film.
  what i mentioned was there is no difference when vijay fans support for him even film is good or bad with vino supporting for rajani for any thing with any cost… 🙂
  Hope people with neutral mind set accept my point..

 23. siva

  நானும் எந்த படத்த first நாளா பார்த்தன்…விஜய் இந்த படத்துக்கு கதை katara எப்படி ….அட்லீஸ்ட் அவருக்கு preview ஷோ பார்க்கும் போத தெரிஞ்சிரிகும் …படம் எப்படின்னு ………….

 24. Tamil Cinema Rasigan

  இந்த போராட்டத்தில் தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் விருப்பமிருந்தால் நீங்கள் பார்க்க வேண்டிய க்ளைமாக்ஸ் பகுதி.

  —————————————————————————
  சத்தியமா இல்லை சார்
  —————————————————————————-
  க்ளைமாக்ஸ் காட்சியில், ‘இது புலிக்குப் பிறந்தது’ என்று தன்னைப் பற்றி தானே அவர் பஞ்ச் அடிக்க, ‘கொட்டை எடுத்ததா எடுக்காததா’ என கவுண்டர் ரேஞ்சுக்கு டரியலாக்குகிறார்கள் பார்வையாளர்கள்!

  ஹா ஹா…
  இந்த மாதிரி டயலாக் பேசினா காசு குடுத்து டிக்கெட் வாங்குனவன் இப்டி கமெண்ட் அடிக்காம என்ன பன்னுவனம்

  குருவி, வில்லு, வேட்டைக்காரன்,சுறா
  இந்த நாலு படத்துலயும் ஹீரோ யின் லோகாசன் தவிர 2 வித்யாசம் கண்டு பிடிச்ச 2 கோடி ருபாய் பரிசு !
  எங்க கண்டு பிடிங்க பாக்கலாம்…..

 25. joly

  மிகச் சரியான விமர்சனம். தமிழ் இணையதளங்கள் எல்லாவற்றிலுமே இதே மாதிரிதான் சுறா விமர்சனம் உள்ளது. இதில் யாரும் பாகுபாடு காட்டவில்லை. என்ன பண்ண தமிழ் சினிமா ரசிகர்களின் தலையெழுத்து இதுதான்னு நினைத்து மனதைத் தேத்த வேண்டியதுதான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு ஒரு பழ மொழி உண்டு. ஆனா…
  குருவி, வில்லு, வேட்டைக்காரன்… பல சூடுகள் பட்டாச்சு இனியும் …???

 26. Rajan

  Yes, This artical is absolutly right.

  There is no difference between the current Vijay movies and Rajini movies in 1980’s, 1990’s. Vijay is just following what Rajini did? So this useless trend was initially started by Rajini along with RMV, Muthuraman, etc.

  The useless ponch dialog was also introduced by Rajini, I dont see any difference between ponch dialogs of Vijay & Rajni. These people have to see & learn from Kamal hasan and others.

 27. devraj

  this is unfortunately a poor movie. Vijay should choose good story lines. This movie has a feel of a old movie, except for some comedy scenes. The site has been impartial in its review.

 28. Ganesh

  இவன் திருந்த மாட்டான் நண்பா ……

  தன் படத்தை காப்பி அடித்து இனொரு படம் எடுக்கும் அறிவுகெட்டவன் இவன்…..

  இவன் எல்லாம் அரசியலக்கு வந்து ……

 29. maalan

  இந்த புறம்போக்கு படத்தை TV இல் கூட பார்த்ததில்லை. . இனியும் பார்க்க போவதும் இல்லை.

 30. mukesh

  come on Rajan. Don’t compare Rajini with Vijay. Yes Rajini has did masala movies. But it has not stopped him giving several class movies in between these masala movies. If you have not seen those movies please try to get the list of his movies. Let Vijay to start give some different kind of movies in between these masala movies.

  What is there to learn from Kamalahassan? His style of acting is something different. That is all. Prior to Nayagan, barring few films, kamal also acted so many masala films. You try to get that list also.

 31. Santhosh

  DONOT compare rajni’s earlier movies with vijay’s current movies…all the films form our beloved superstar during 80’s were super duper hits..Rajni’s movies will have a story with right mixture of sentiments, humor, action etc…His punch dialogs would be relevant for the scene, he does speak for a sake of uttering a punch. I request the great fans who dare to compare illaya thollllapathy with our only supertar to watch rajni’s old movies especially released during 80’s & then comment.
  Moreover our thalaivar is a versatile actor with a unique style, comparing him with this flop star is a shame for both rajni & his fans… off course vijay is also a excellent actor (not on-screen but off- screen).

  The fact is, initially kamal tried some masala movie but unable to compete with rajni, where as Rajni has done lots of performance oriented films initially & proved his acting caliber & even those films were successful…

  DASAVATHARAM – 10 Kamal – 30DAYS
  CHANDRAMUKHI – 1 Rajni – 880DAYS

  Above, just a small example to differentiate the stature of Rajni & Kamal..

 32. கிருஷ் சிவா

  தாய் குரங்கு : நம்ம தாத்தா எப்படி தலைவர் ஆனாரு தெரியுமா
  பிள்ளை குரங்கு : தெரில மா

  தாய் குரங்கு : ஒரே தாவுல பத்து அடி தாண்டினாறு அதுனால அவர தான் நம் இனத்தின் (முதல்வர்) தலைவர் ஆகிட்டார்
  பிள்ளை குரங்கு : ஆனா இப்ப கஷ்டமா இப்ப விஜய் நு ஒருத்தர் மலைய தான்றார் அதுவும் நாமெலாம் என்ன எதாவது கிளை இருந்தா அத வாளால புடிசுகிட்டு தாண்டுவோம் …அவர் கிளை கு வழியே இல்லாத கடல் இல் இருந்து ஜொயின்நு …தான்றார்

 33. karthick

  ஒரு நல்ல ரசிகன், அவர் தலைவனை பிரதிபலிப்பவன். இந்த விமர்சனம் எழுதிய நீர் ஒரு ரசிகன் ஆ. உங்கள் விமர்சனத்தில் ரஜினி வெறி தன தெரிகிறது. உங்கள் தலைவனின் ஒரு சின பிரதிபலிப்பும் இல்லை. தங்களின் கவனத்திற்கு நான் ஒரு விஜய் ரசிகன் இல்லை.

 34. Senthil

  NOTE : I m Die Hard Fan of Rajinikanth.
  *We r not comparing Vijay to Rajini.
  *v know that Vijay is far behind Rajni.
  *what v r saying is Vijay has lot of fans after rajni.He gets great openings after rajni.
  *This film will satisy his fans [ A PURE COMMERCIAL ENTERTAINER ].
  *Even RAjni himself said that he can see Vijay as his replica in that GHILLLI Silver Jubilee Function.
  *Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this achievement

 35. Srinivas

  //madhumidha says:
  May 1, 2010 at 4:26 pm
  எஸ் நானும் படம் பார்த்தேன்…. மொக்கை தான்… ஆனால் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடிப்பு மொக்கை என்று நீங்க சொல்லும் போதே தெரிஞ்சு போச்சு. உங்கள் ஆதரவு ரஜினிkku மட்டும் என்று.

  //

  வி டி வி ல சிலம்பரசன் நடிப்பு மொக்கை தான் …இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு??? கேரக்டர் மற்றும் ஸ்டோரி கு சிலம்பரசன் பொருத்தமாக இருந்தாலும், நடிப்பு !!!! கண்டிப்பாக சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை … வேறு யாராவது நடித்திருந்தால் இன்னும் அட்டகாசமாய் இருந்திருக்கும்..

  சுறா படத்துக்கு போற கும்ப்ள விட இந்த பதிவ படிக்க நெறைய கும்பல் வருதே!!!

  சரி…அங்க தான் ஒடரதில்ல… இங்கயாவது ஓடிட்டு போகட்டும்…

 36. Manoharan

  இனிமேல் இப்படி செய்யலாம் :

  இந்தியாவின் மிக மோசமான நடிகன் என்று ஒரு விருதை உருவாக்கலாம்.கடந்த நான்கு வருடத்திற்க்கும் சேர்த்து அதை விஜய்க்கு கொடுக்கலாம்.

  விஜய் படம் எல்லாமே முட்டாள்கள் மட்டுமே பார்க்கத் தகுந்த படம் என்பதால், சென்சாரில் புதிதாக “M” சர்ட்டிபிகேட் உருவாக்கி அதை இனிவரும் எல்லா விஜய் படங்களுக்கும் கொடுக்கலாம்.

  விஜய் படத் தயாரிப்பாளர்கள் இனிமேல் கதாசிரியர்,இயக்குநர்களை தேடி அலையவேண்டியதில்லை. நேராக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று,அங்குள்ள பைத்தியங்கள் சொல்வதை அப்படியே விஜையை வைத்து எடுக்கலாம்.

  சினிமா விரும்பிகள் எல்லாம் விஜய் அரசியலுக்கு வந்தால் நாடே நன்றாக இருக்கும் என்று விஜயின் அப்பாவிடம் தினமும் நூறுதடவை சொல்லிக்கொண்டே இருந்தால் அவர் அரசியலுக்கு வருவார். தமிழ் சினிமாவை காக்க இதுதான் ஒரே வழி. அப்புறம் அவர் அரசியலுக்கு வந்தால் ராணுவத்தில் சேர்த்து விட்டுவிடலாம். அதுவும் பாகிஸ்தான் பார்டரில்.

  விஜய் படம் ஓடும் ? தியேட்டர் வாசல்களில் சிறு சேமிப்பு விளம்பரங்கள் வைக்கலாம். படம் முடிந்து..அல்லது இடையிலேயே ஓடி வருபவர்கள் சேமிப்பின் அருமையை தெரிந்து கொள்ள இதைவிட வேறு இடம் கிடையாது.

  இன்னும் வரும்……….

 37. Santhosh

  Senthil says:
  May 4, 2010 at 12:03 pm

  /////NOTE : I m Die Hard Fan of Rajinikanth.
  *Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this அசிஎவேமென்ட் ///

  ஹஹஅஹஹா..நண்பர் செந்தில் ஒரு அருமையான காமெடியன்…….

 38. Manoharan

  Senthil says:
  May 4, 2010 at 12:03 pm

  /////NOTE : I m Die Hard Fan of Rajinikanth.
  *Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this அசிஎவேமென்ட் ///

  அன்னிக்கு விழுந்த அடிதான். மவனே இன்னிக்கு வரைக்கும் விஜய்னால் எந்திருக்கவே முடியவில்லை. யார் யாருடன் மோதுவது. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதைதான் விஜயுடையது.

 39. Senthil

  Hi Santhosh,
  U dont have any answers to my questions.
  But u r saying me as an comedian.
  First Answer My questions.
  ////
  what v r saying is Vijay has lot of fans after rajni.He gets great openings after rajni.
  *This film will satisy his fans [ A PURE COMMERCIAL ENTERTAINER ].
  *Even RAjni himself said that he can see Vijay as his replica in that GHILLLI Silver Jubilee Function.
  *Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this achievement
  /////

 40. Senthil

  Hi Manohar,
  3 Films Chandramukhi,Sachin,Mumbai Express released on same day.
  U could have seen the result.
  CHANDRAMUKHI got the Biggest Opening.
  SACHIN got the next Opening
  ANd MUMBAI EXPRESS ……..

 41. Anand.ji

  மொக்க படம் சன் நெட்வொர்க் மக்களை ஏமாற்றி வருகிறது.
  சன் நெட்வொர்க் நல்ல படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என தமிழ் நாட்டு மக்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்………..

 42. Srinivas

  Senthil says:
  First Answer My questions.
  ////
  what v r saying is Vijay has lot of fans after rajni.He gets great openings after rajni.//
  இன்னும் எவ்ளோ நாள் இதே கதைய சொல்ல போறீங்க??? முதல் பத்து நாட்கள் பெரிய நடிகர்கள் படம் நன்றாக தான் ஓடும்… ரஜினிக்கு பிறகு கமல் என்ற ஒரு நடிகர் இருப்பதை மறந்து விட்டுபேசறீங்களே…இப்படியே போனால் சிலம்பரசனை கூட இந்த லிஸ்ட் ல சேர்துடுவீங்க!!

  // *This film will satisy his fans [ A PURE COMMERCIAL ENTERTAINER ]. //
  அப்டின்ன நீங்க மட்டும் பாக்க வேண்டியது தானே!!!

  // *Even RAjni himself said that he can see Vijay as his replica in that GHILLLI Silver Jubilee Function.//
  உண்மையாக சொல்லுங்கள், கில்லி கு பிறகு விஜய் நடித்த படங்கள் எப்படி இருந்தன என்று???

  எனக்கு தெரிந்து சச்சின் மட்டும் தான் கில்லி கு பிறகு வந்த படங்களில் ஓவர் பந்தா இல்லாமல் நடித்த படம்… அந்த படம் போல் நடித்தால் நன்றாக இருக்கும் ..

  //*Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this achievement
  /////

  அது தைரியம் லாம் இல்லை… பாபா விற்கு பிறகு ரஜினி யின் படம்…பாபா ப்ளாப் என்றதும், இனி ரஜினி அவ்ளோதான், நாம தான் ரஜினி, … ரஜினி படத்தோடு மோதி நம்ம படம் ஜெய்சுட்டா நாம தான் நம்பர் ஒன்னு என்று பேராசை பட்டதன் விளைவு!!!

  தலைவர் படத்தோடு ரிலீஸ் பண்ணாம இருந்திருந்த சச்சின் ஓடிருக்கும்..

  தலைவர் படத்தோட ரிலீஸ் பண்ற்ற தைரியம் / திறமை கமலுக்கு மட்டும் தான் உண்டு…

  கமல் படம் தலைவர் படத்தை முந்தாவிட்டாலும், சிறந்த போட்டியாளர் கமல் தான் !!

 43. Manoharan

  Hi Manohar,
  3 Films Chandramukhi,Sachin,Mumbai Express released on same day.
  U could have seen the result.
  CHANDRAMUKHI got the Biggest Opening.
  SACHIN got the next Opening
  ANd MUMBAI EXPRESS …….

  .ஓகே செந்தில்.படத்தை ரிலீஸ் செய்துவிட்டால் மட்டும் போதுமா. அது எத்தனை நாள் ஓடியது ? ரஜினி படம் ரிலீஸ் ஆகும் போது யார் வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம், ஆனால் படம் ஓட வேண்டும் அதுதான் முக்கியம். விஜய் சச்சினை சந்திரமுகியுடன் ரிலீஸ் பண்ணியதற்க்கு ஒரே காரணம்தான். முடியை கட்டி மலையை இழுக்கலாம்,வந்தால் மலை போனால் முடி என்பதுதான். அவரால் மலையை நெருங்கக் கூட முடியவில்லை. அதிலிருந்து கற்ற பாடம்தான். இனிமேல் எந்த காலத்திலும் ரஜினி படம் ரிலீஸின்போது விஜய் படம் ரிலீஸாகாது. அதற்க்குண்டான தைரியம் அவருக்கும் இல்லை அவர் அப்பனுக்கும் இல்லை. ஒருமுறை பட்டது அவருக்கு வாழ்க்கைக்கும் மறக்காது

 44. Santhosh

  Good reply Mr.Srinivas & Mr.Manoharan.

  To My friend Senthil..

  ////Vijay has lot of fans after rajni.He gets great openings after rajni./////
  After Rajni…kamla hasan has lots of fans…ajith has more fans than vijay…vijay is like a politician,he is developing his fans club by paying money for his survival…He is bringing in people for money to the theaters during the release like the politicians do (loading people for their meeting).

  Flopstar vijay is trying to misguide is fans (people like you) , he wants his fans to be with him all the time to watch his movies, as a reason he is consistently mentioning about his political foray which every one know will never happen.

  ////*This film will satisfy his fans [ A PURE COMMERCIAL ENTERTAINER ].////
  NO. Even his fans are not happy with his film, that’s why all his recent movies were utter flop… [HE IS A PURE COMMERCIAL COMEDIAN]. Actually people are laughing at him…nowadays we could find lots of emails ridiculing Vijay & his fans…he could be the next TR in the Net world…

  ///*Even RAjni himself said that he can see Vijay as his replica in that GHILLLI Silver Jubilee Function.///
  GHILLI – The last successful movie of the flop star vijay… Rajni would have misjudged then.

  ///*Only Vijay can dare to release his film along with rajni [ eg. Chandramukhi,Sachin ] and no other hero can do this achievement///
  Even TR released a movie with Padayapa…so is TR a competitor for Rajni???? hahaha

 45. கிருஷ் சிவா

  எனக்கு ஜாலியா இருக்கீ

 46. கணேசன்

  நானும் என் உறவின நண்பரும் (விஜய் தீவிர ரசிகர்) படம் பார்த்தோம்.

  விஜய் ரசிகர் ஆன அவர் அடித்த கமெண்ட்களில் சில இங்கே…..

  * சண்டைக்காட்சியில், அப்போது அவர் என்ன லாஜிக் இது மாப்ள, 10 பேர் உருட்டு கட்டை, அறிவாள் வைத்து கொண்டு விஜய் ஒருவரை அடித்தவுடன் ஓடு, ஓடு என்று ஓடுவார்கள், விஜய் துரத்தி போய் அடிப்பார். இன்னொரு சண்டைக்காட்சியில், 4 ஜேசிபி இங்கிட்டும், அங்கிட்டும் சும்மாவே எதுக்கு சுத்திக்கிட்டு இருக்கு.

  * ஒரே ஒரு முறை துப்பாக்கியை உபயோகிப்பார் விஜய் அப்போழுது, என்ன சுட்டுட்டு துப்பாக்கிய கீழ போட்டு போவானாம், வில்லனும், அல்ல கைகளும் ஏய், ஏய்ன்னு கத்திக்கிட்டு இருப்பானாம்.

  * சரியான டம்மி பீஸ் வில்லன்

  * படத்தின் இடையே, அவர் என்னிடம் மாப்ள விஜய் படத்தில் Heroineக்கு வேளை ரொம்ப கம்மி மாப்ள என்றார்.

  * படம் முடிந்தவுடன் அவர் கேட்டார் “என்ன படம் அதுக்குள்ள முடின்சிருச்சா!”

  ஒரே ஆறுதல் எனக்கு, கடைசி பாடலுக்கு விஜய் போட்டிருக்கும் டான்ஸ் – ரொம்ப வேளய வாங்கியிருக்கார் ராபர்ட் மாஸ்டர்.

 47. Naan Vijay Rasigar

  சுறா படம் எப்படி இருக்கு?சண்டை- சூப்பர்,பக்கா
  பாட்டு – கொய்யால சூப்பரோ சூப்பர்
  டான்ஸ் – தூள்
  இடைவேளை வரைக்கும் – செம ஸ்பீடு
  இடைவேளைக்கு பின்னாடி – ச்ச… சான்சே இல்ல…

  இப்படியெல்லாம் விஜய் ரசிகர்கள் உங்ககிட்ட சொல்லி படம் பாக்க சொல்வாங்க

  நம்பாதீங்க மக்களே… மொத்தத்துல சொல்லப்போனா படத்துல ‘இன்டர்வெல்கேப்’ தான் சூப்பர்…!!!

  விஜய்யை பொருத்தவரை எல்லாமே காமெடி தான்.’கில்லி’ன்னு சொன்னாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுவாரு…!!!

  ‘போக்கிரி’யில போலீஸ்னு சொல்லிட்டு வாட்ச்மேனா காட்டுவாங்க…!!!

  ‘அழகியதமிழ்மகன்’னு சொன்னாங்க கடைசி வரை அது யாருன்னே காட்டல…

  இது கூட பரவாயில்லீங்க…’குருவி’ன்னு சொன்னாங்க ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல,

  ‘வேட்டைக்காரன்’ பாத்தா அதுல ஆட்டோக்காரனா காமிக்கிறாங்க…

  சத்தியமா நான் டாக்டர் விஜய்யை கிண்டல் பண்ணலீங்க

 48. Suresh கிருஷ்ணா

  குப்பத்தை ஆக்கிரமித்து தீம் பார்க் கட்ட நினைக்கிற வில்லனைத் தீர்த்துக் கட்டுபவனே… சுறா!

  மீனவக் குப்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு விஜய்தான் காட்ஃபாதர். அவர்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுப்பதுதான் விஜய்யின் லட்சியம். மந்திரி தேவ் கில் (அறிமுகம்) குப்பத்தை வளைத்து, தீம் பார்க் கட்ட நினைக்கிறார். அப்புறம் என்ன? ஹீரோ பில்ட்-அப், அடிதடி, பஞ்ச் டயலாக்கைத் தொடர்ந்து மந்திரியை முந்திரி மாதிரி வறுத்து எடுக்கிறார் விஜய். சுபம்!

  விஜய்யின் 50-வது படம். கொஞ்சம் எதிர்பார்த்துப் போனால், ‘பாட்டி வடை சுட்ட மாதிரி’ பழைய கதை. இளைய எம்.ஜி.ஆர். ஆக்க, முடிந்த அளவுக்கு முழு வேகத்தில் விஜய்யின் புகழ் பாடி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார்.

  வழக்கம்போல ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுக்கிற விஜய், நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டுமே? ‘வேட்டைக்கார’னில் கை வீசி நடந்தவர், இதில் கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறார். மற்றபடி ‘மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கணும். கை வெச்சுட்டா, அப்புறம் யோசிக்கவே முடியாது’ என்று தன் புகழ் பாடுகிறார். ‘எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. ஒவ்வொருத்தரும் சிங்கக் குட்டிங்க’ என்று ரசிகர் புகழ் பாடுகிறார். திடீரென்று தமிழர்களுக்காகக் கவலைப்படுகிறார். நல்லவர்களுக்கு உதவுகிறார். சினிமா டு கோட்டைக்கு ‘இதுதான் ரூட்’ என்று சொல்லிவிட்டார்கள்போல.

  நாயைக் காணவில்லை என்பதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு கடலில் தற்கொலை செய்யப் போகும் (உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள்போல!) லூசுப் பெண்ணாக… தமன்னா. படத்தில் நடிப்பைவிட அதிகமாக இடுப்பைத்தான் காட்டுகிறார். தமன்னா வந்ததுமே டூயட் வந்துவிடுகிறது. படத்தில் இரண்டே இடங்களில் ஆறுதல் அளிப்பது அம்பர்லாவாக வரும் வடிவேலு. என்கவுன்ட்டர் கைதிக்குப் பயந்து ‘சேவை’ செய்யும்போதும், கிங்காங்கை போலீஸ் என்று நினைத்துப் பணம் கொடுக்கும்போதும் வயிற்றைப் பதம் பார்க்கிறார்.

  புதுமுக வில்லன் தேவ் கில்லுக்கு வழக்கமான கோடம்பாக்க வில்லன் கேரக்டர். ‘அவனைச் சும்மா விடக் கூடாது’ என்று உறுமிக்கொண்டு கடைசி வரை சும்மாவே இருக்கிறார். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவரும் தன் பங்குக்கு விஜய் புகழ் பாடுகிறார். வில்லன் குடிசைகளுக்குத் தீ வைக்கும் காட்சியைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது? ஆஹா!

  ‘குப்பத்துக்கே விஜய்தான் வழிகாட்டி’ என்று படம் முழுக்க பில்ட்-அப் கொடுக்கிறார்கள். ஒரு காட்சியில்கூட விஜய் குப்பத்துக்குச் சேவை பண்ணியது மாதிரி இல்லையே? அதிகபட்சம் ரேஷன் கார்டுகளைப் பாதுகாக்கிறார். அங்கும் இங்கும் நடக்கிறார். அவ்வளவே!

  விஜய் கடலில் காணாமல் போகும்போதும், தீயில் மாட்டிக்கொள்ளும்போதும் குப்பத்து மக்கள் எப்படித் துடிதுடிக்க வேண்டும்? ரொம்பச் சாதாரணமாக ‘சுறா போயிட்டான்’ என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

  குப்பத்துக்கு வீடு கட்ட நூற்றுச் சொச்சம் கடத்தல் லேப்-டாப்களை விற்று, 100 கோடி சம்பாதிக்கிறார் விஜய் (எங்கேயோ போயிட்டீங்க பாஸ்!). குப்பத்து மக்கள் நடுத் தெருவில் நிற்கும்போது, ஆடி காரில் வலம் வருகிறார். ஜிகுஜிகு கோட், டை கட்டி ஆடுகிறார். வீடு கட்டுகிற வழியைத்தான் காணோம். இருக்கிற இம்சைகள் போதாது என்று ‘எப்பவும் வெடிக்க ரெடியா இருக்குற எரிமலை மாதிரியே இருக்குறான்’, ‘சுனாமி வருது… சூறாவளி வருது… ரெண்டும் சேர்ந்து வருது’ இப்படிப் படம் முழுக்க ஜால்ரா அடித்து ஜவ்வு கிழிக்கிறார்கள். மணிசர்மாவின் இசையில் தெலுங்கு இறக்குமதியாக இருந்தாலும் சில பாடல்கள் மனதுக்குள் ரவுண்டு கட்டுகிறது. ஆக்ஷனில் தீப் பிடிக்கும் ஏகாம்பரத்தின் கேமரா, காதல் காட்சிகளில் கவிதை வாசிக்கிறது.

  சுறா, மனிதர்களைத் தாக்கும் என்பது விதி..

  மார்க்-37!

  -இது விகடன் விமர்சனமுங்க… விஜய் ஆதரவாளர்களுக்கும், என்வழி விமர்சனம் நடுநிலை தவறிப்போச்சுன்னு சொன்ன நல்லவங்களுக்கும் டெடிகேட் பண்றேனுங்ணா!!

  -Sureshகிருஷ்ணா

 49. r.v.saravanan

  சுறா, மனிதர்களைத் தாக்கும் என்பது விதி..

  ha…ha…

 50. Vazeer Abu Bilal Kuwait

  Manoharan says:
  May 5, 2010 at 9:19 pm

  Hi Manohar,
  3 Films Chandramukhi,Sachin,Mumbai Express released on same day.
  U could have seen the result.
  CHANDRAMUKHI got the Biggest Opening.
  SACHIN got the next Opening
  ANd MUMBAI EXPRESS …….

  Mr. Senthil

  I may remind you the result of that movies, which was released along with CM (ChandraMukhi)

  01) Sachien – Run out
  02) Mumbai Express – Derailed
  03) CM (Chandramukhi – Was the winner of BO and Block Buster of the year

 51. கிருஷ் சிவா

  விஜய் பத்தி நீங்க ஒரு பதிவு போட்டா அதுக்கு கமெண்ட் என்று பல பதிவு வருது

 52. Manoharan

  @ Suresh Krishna

  ஆனாலும் விகடனுக்கு ரொம்பவும் தாராள மனசு. 37 மார்க் போட லாயக்கற்ற படம் சுறா.

 53. vijith

  தாங்கள் அஜித் ரசிகன் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் போல்.
  எழுதிய இவ்வளவு விடயத்தையும் நல்ல மாதிரி எழுதியிருந்தால் எவ்வளவு
  நல்ல படமா இருந்திறுக்கும். டான்ஸ் ஆடுவதை கூட விழாசி தள்ளி இருக்கிறீர்களே. எவ்வளவு முட்டாள் தனமான விமர்சனம். விஜய் படம் நல்லதா? கூடாத என்பது பற்றி விஜய் ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். தாங்க முடியவில்லை.

 54. raja

  விஜய் தயவு செஞ்சு முதலில் ஒரு நல்ல படத்தில் நடி அதுக்கு பிறகும் நீயல்லாம் அரசியல் பத்தி கனவில் கூட நினக்காத தயவு செஞ்சு தமிழ் மக்களை வாழ விடுங்கடா

 55. karthikeyan

  விஜய் நெக்ஸ்ட் பலாப் படம் பா

  neega yanado வெப்சைட் paaruga www .karthikeyan12 .webs .com

 56. shanmugam

  விஜய் படங்களிலேயே இதுவரை காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது சுறா. படம் வெளியான நான்காவது நாளே திரையரங்குகள் வெறிச்சோட, விநியோகஸ்தர்கள் கை பிசைய ஆரம்பித்துவிட்டனர்.

  இதுவே ரஜினி படமாக இருந்தால், இந்நேரம் கொடி பிடித்து கோஷம் போட்டு உண்ணாவிரதம் இருந்து ஊரைக் கூட்டியிருப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அவரும் பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பியிருப்பார்.

  ஆனால் சன் பிக்சர்ஸ் படம்… பகைத்துக் கொள்ள முடியாதே… அதனால் பவ்யமாக நிலைமையை எடுத்துச் சொன்னார்களாம். பல திரையரங்குகளில் இந்த வாரத்தோடு சுறாவை தூக்கிவிட்டு வேறுபடம் திரையிடும் முடிவைச் சொல்ல, ‘கொஞ்சம் பொறுங்கள்.. சிங்கம் படத்தைத் தருகிறோம்’ என்று கூறியுள்ளது சன் பிக்சர்ஸ்.

  திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது மே 28-ம் தேதியே சிங்கத்தை ரிலீஸ் செய்வதன் பின்னணி இதுதான் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு. அதே நேரம், ‘சிங்கம் படத்தை ரிலீஸ் செய்வது ஓகே… ஆனால் இன்னும் ஒரு வாரம் முன்கூட்டி ரிலீஸ் பண்ணால், எங்கள் நஷ்டத்தின் அளவாவது குறையுமே!’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

  ஆனால் விஜய்யோ, இந்த உண்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல், ‘விமர்சனம் பத்திக் கவலையில்ல… என் படம் பிரமாதமா போகிறதாக்கும்’ என்று ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்

 57. Manoharan

  திருடனுக்கு தேள் கொட்டியது போல்தான் சன் பிக்சர்ஸின் நிலைமை. குசேலன் பிரச்சனையை எந்த அளவுக்கு கிளப்பினார்கள். இப்போது சுறா கையை மட்டும் கடிக்கவில்லை, முழு உடம்பையும் கடித்துவிட்டது. எப்படி நடித்தாலும் பார்ப்பார்கள் என்கிற விஜயின் கர்வமும், விளம்பரத்தால் படத்தை ஓட்டிவிடலாம் என்கிற சன்னின் அகங்காரமும் தூள்தூள் ஆகிவிட்டன. அதேபோல் விஜய் படத்தை ரிசல்ட் கேட்காமலேயே முதல் வாரத்தில் பார்க்கும் பலரும் வேட்டைக்காரனுக்கு பிறகு விழித்துக் கொண்டுவிட்டனர். அதனால்தான் சுறாவுக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கூட கிடைக்கவில்லை. இதைவிட காமெடி சுறாவின் நஷ்டத்தை ஈடுகட்ட சிங்கத்தை கொடுக்கிறார்களாம். அப்படியென்றால் விஜயைவிட பெரிய ஸ்டார் சூர்யாதான். கவுண்டர் காமெடியைபோல், விஜய் 10வது பெயில்ணே சூர்யா 8வது பாஸ்ணே. பாஸ் பெரிசா பெயில் பெரிசா.

 58. பாலாஜி (மேம்)

  திருடனுக்கு தேள் கொட்டியது போல்தான் சன் பிக்சர்ஸின் நிலைமை. குசேலன் பிரச்சனையை எந்த அளவுக்கு கிளப்பினார்கள். இப்போது சுறா கையை மட்டும் கடிக்கவில்லை, முழு உடம்பையும் கடித்துவிட்டது. எப்படி நடித்தாலும் பார்ப்பார்கள் என்கிற விஜயின் கர்வமும், விளம்பரத்தால் படத்தை ஓட்டிவிடலாம் என்கிற சன்னின் அகங்காரமும் தூள்தூள் ஆகிவிட்டன.

  நன்றி! திரு. மனோகரன் அவர்களே!

  சரியான அலசல்!

 59. srini

  இதுவே ரஜினி படமாக இருந்தால், இந்நேரம் கொடி பிடித்து கோஷம் போட்டு உண்ணாவிரதம் இருந்து ஊரைக் கூட்டியிருப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அவரும் பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பியிருப்பார்—100% true

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *