சுறா உள்பட 6 படங்களில் நஷ்டம்… விஜய்க்கு மதுரை திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்!!
சுறா படத்தால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ரூ 1 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் விஜய், தமன்னா, வடிவேலு நடித்து வெளியான படம் சுறா. இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கி அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டன. ஆனால் படம் ஓடவில்லை. இதனால் தமிழகம் முழுவதிலும் சுறா படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் அவசர கூட்டம் கூட்டினார்கள். கூட்டத்தில் சுறாவால் ஏற்பட்ட நஷ்டத்தை நடிகர் விஜய் ஈடுகட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நஷ்ட ஈடு தராவிட்டால் விஜய்யின் அடுத்த படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் எச்சரித்தனர்.
நிலைமையை அறிந்த விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் முன்னிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் சமாதான பேச்சு நடத்தியுள்ளார். அதில் தற்காலிக தீர்வு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாநகர் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பி.முத்து கிருஷ்ணன் தலைமையில் மதுரையில் தியேட்டர் அதிபர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராம.மு.அண்ணாமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மதுரை – ராமநாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும், சுறா படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து வேதனையுடன் தெரிவித்தனர். விஜய்யின் 6 படங்கள் மூலம் தொடர் தோல்வியையும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளதை விவரித்தனர்.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சுறா படம் வெளியிட்ட வகையில் மதுரை, ராமநாதபுரம் திரையரங்குகளுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்ப்பட்டதால் நஷ்டத்தை ஈடுகட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்;
படத்தில் நடித்த நடிகர், அந்த படத்தை எடுத்தவர்கள் என அனைவரும் சேர்ந்து, மதுரை-ராமநாதபுரம் திரையங்கு உரிமையாளர்களுக்கு சுமார் 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்;
விஜய்யின் அடுத்த பட வெளியீட்டுக்கு முன் இந்த நஷ்ட ஈடுத் தொகை கிடைக்க வேண்டும்… என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் படம் நன்றாக ஓடினால், இந்த திரைஅரங்கு உரிமையாளர்கள் அந்த படத்தில் நடித்த மற்றும் படத்தை எடுத்த அனைவருக்கும் பணம் கொடுப்பார்களா?
முத்துக்குமார்
இவன் ஊமை குசும்பன்……. தமிழ் ரசிகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்…..
முத்து,
ஒரு படம்னா பரவால்லை….. தொடர்ந்து ஆறு படம்…. முதல் போட்டவன்னுக்கு தானே வலி தெரியும்…..
முதல் போட்டு டிவி வாங்கி ஒடுல்னா அந்த டிவி கடை முதலாளி தான் பணத்தை திருப்பி தரனும்…. மாறாக டிவி நல்லா ஓடுது என்பதற்காக அதிக பணம் உங்களால் தர முடியுமா….
இவன் பன்ச் டயலாக் பேசத்தான் லாயக்கு. இவன் ஊமை குசும்பன்……. தமிழ் ரசிகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்…..
nandri ravanan.
வேட்டைக்காரன்,சுறா வெளியிட்ட சன் டீவியிடம் கேட்கும் தைரியம் இல்லாதவர்கள் இவர்கள்.
ம்ம்ம் நாரா பயன் விஜய் அவன் நியூஸ் எதுக்கு தளலைவர் வெப்சைட் ல போடணும் நன் இதை விரும்பவில்லை தயவு செய்து விஜய் நியூஸ் போடார்திர்கள்
படம் வெஸ்ட் சுத்த வெஸ்ட் இது ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? படம்