BREAKING NEWS
Search

சீமான் கைது!

வன்முறை, பிரிவினையைத் தூண்டியதாக சீமான் கைது!

சென்னை: வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது போது சீமான் பேசிய பேச்சைத் தொடர்ந்து அவர் மீது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வடக்குக் கடற்கரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் போலீசார் அறிவித்தனர். ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் சீமான் அறிவித்திருந்தார்.

பிரஸ் கிளப்பில் கைது

இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார்” என்று தெரிவித்தனர்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு வந்தார். இதையடுத்து தயாராக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் சீமானை சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இது தமிழ்நாடா அல்லது இலங்கையா? சீமான் ஆவேசம்!

முன்னதாக சீமானின் அறிக்கை பத்திரிகையாளர்களுக்கு தரப்பட்டது. அதில் அவர், “தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. என்னைக் கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.

600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள், படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ, அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ, அவமானப்படுத்தப்படும் பொழுதோ, மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்படவில்லை.

மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ் மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக் கூட தெரிவிக்க மறுக்கின்றதே?

பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே? ஏன்?

பிஜி தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே? ஏன்?

செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா?இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ,அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது.

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன்,” என்று கூறியுள்ளார் சீமான்.




13 thoughts on “சீமான் கைது!

  1. RAjmohan

    Good message to all Tamils and stupid ruling central and state poilticians. Apart from writing to central at this ERA what else the ruling Government done for fishermans and Srlankan tamils…..

  2. Rajmohan.K

    As a change and good sign of development, Mr. Seeman should participate in upcoming assembly election. Further, Superstar Rajinikanth should support him strongly.

  3. palPalani

    சீமானை விடுதலை செய்ய என்ன செய்ய வேண்டும்?
    கடிதம் எழுதணுமா?
    குஷ்பூவோட குத்தாட்டம் போடணுமா?
    இருநூறு முன்னூறி பேரோடு திமுகவில் சேர்வது போன்று நடிக்கணுமா?

    தயவுசெய்து யாராவது சொல்லுங்க, சரியான வழிய?

  4. Thamilan

    அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே இலங்கை பிரச்சனையை வெளிநாட்டு பிரச்சனை ஆக்கி விட்டார்.. மேலும் ராமேஸ்வரம் இந்திய எல்லைக்குட்பட்டது இல்லை எனவும் அறிவிக்க கூடும்… அப்பதானே மீனவர்கள் கொல்லபட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை… அப்புறம் எதுக்கு மொழி மட்டும் தமிழ்… தமிழையும் தூக்கிவிட்டு ஹிந்தியே தாய்மொழி என்று அறிவிக்காதது தான் இன்னும் பாக்கி… கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதும் நடக்கும்… தமிழ் மாநாடு நடத்தி மட்டும் என்ன ஆகபோகுது… போங்கடா நீங்களும் உங்க இந்திய ஒருமைப்பாடும்….

    இவர்களை சொல்லி ஒன்னும் ஆகபோவதில்லை… இவர்களுக்கு ஒட்டு போடும் முட்டாள்களை சொல்ல வேண்டும்… ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்க தான் செய்வான்…

  5. M.S.Vasan

    தேர்த‌ல் நெருங்கும் நேர‌த்தில், உல‌க‌த்த‌மிழ‌னின்
    ஒப்ப‌ற்ற‌ ஒரே த‌லைவ‌ர் த‌விர‌(400 கோடி அர‌சு ப‌ண‌த்தில்,
    இல‌ங்கை சிவ‌தம்பியே மாநாட்டில‌ அறிவித்த‌ பின்பு)
    வேறு யாரும் த‌மிழர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுக்க‌க் கூடாது.
    க‌டித‌ம் தான் ம‌த்திக்கு போட்டாச்சுல்லா?
    த‌மிழ‌ன், த‌மிழ‌னாவே (இடிச்ச‌ புளி) இருக்க‌ வேண்டிய‌து தானே!
    சீமான் ம‌ட்டும் என்ன‌வோ சீக்கிய‌ர்க‌ள் மாதிரி சீறுன்னா…

  6. Cuddalore Shanthakumar

    சட்டத்திற்கு வார்த்தைதான் முக்கியமென்றால், இவ்வாறு பேசும் எல்லோரையும் கைது செய்திருக்க வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு, கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் பிரச்சனையில் தமிழரின் எதிர்ப்பை வெளிப்படுத்த சென்னை சேப்பாக்கத்தில் திரைப்பட நடிகர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒகேன‌க்க‌ல் க‌ர்நாடகாவு‌க்கு சொ‌‌‌ந்த‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள். 10 வருடத்திற்கு முன்னால் போட்ட ஒப்பந்தம் இத்திட்டம். ஒகேனக்கல் தமிழகத்திற்கு சொந்தம். நம்ம தண்ணீரை நாம எடுக்கக் கூடாதுன்னு சொல்பவனை ஏன் உதைக்கக் கூடாது?” என்று பேசினார். இது கன்னட, தமிழ் பேசும் மக்களிடையே பகைமையை ஏற்படுத்தக்கூடிய பேச்சாக எடுத்துக் கொண்டு அன்றைக்கு தமிழக அரசு ஏன் அவர் மீது வழக்குப்போடவில்லை?

    “ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்” என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூ‌றினா‌ர். ஒகேனக்கல் பிரச்சனையை தீர்க்காவிட்டால் இந்தியா துண்டு, துண்டாக சிதறிவிடும் என்று பேசியதாக ஏன் சரத்குமார் மீது வழக்குப் போடவில்லை?

  7. கார்த்திக்

    எனது அண்ணன் சீமான் இருக்க எதற்கட எனக்கு பயம் !!!!
    எனது தமிழ் மக்களை பற்றி
    என்றும் அவரது வழியில் நான் …….

  8. Cuddalore Shanthakumar

    நடுநிலையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் , முந்தைய பதிவை பிரசுரியுங்கள்

  9. cuddalore shanthakumar

    சகோதரர்களே , ஒரு அன்பு வேண்டுகோள் : நடுநிலையோடு இருங்கள் இல்லையேல் இணையத்தில் ரஜினி பற்றி மட்டும் செய்தி வெளியிடுங்கள், பிற செய்திகளை வெளியிடாதீர்கள்.
    Cuddalore Shanthakumar says:
    Your comment is awaiting moderation.
    July 16, 2010 at 2:51 pm

    சட்டத்திற்கு வார்த்தைதான் முக்கியமென்றால், இவ்வாறு பேசும் எல்லோரையும் கைது செய்திருக்க வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு, கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் பிரச்சனையில் தமிழரின் எதிர்ப்பை வெளிப்படுத்த சென்னை சேப்பாக்கத்தில் திரைப்பட நடிகர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒகேன‌க்க‌ல் க‌ர்நாடகாவு‌க்கு சொ‌‌‌ந்த‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள். 10 வருடத்திற்கு முன்னால் போட்ட ஒப்பந்தம் இத்திட்டம். ஒகேனக்கல் தமிழகத்திற்கு சொந்தம். நம்ம தண்ணீரை நாம எடுக்கக் கூடாதுன்னு சொல்பவனை ஏன் உதைக்கக் கூடாது?” என்று பேசினார். இது கன்னட, தமிழ் பேசும் மக்களிடையே பகைமையை ஏற்படுத்தக்கூடிய பேச்சாக எடுத்துக் கொண்டு அன்றைக்கு தமிழக அரசு ஏன் அவர் மீது வழக்குப்போடவில்லை?

    “ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்” என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூ‌றினா‌ர். ஒகேனக்கல் பிரச்சனையை தீர்க்காவிட்டால் இந்தியா துண்டு, துண்டாக சிதறிவிடும் என்று பேசியதாக ஏன் சரத்குமார் மீது வழக்குப் போடவில்லை?

  10. Cuddalore Shanthakumar

    நன்றி சகோதரர்களே ! என்வழி தனிவழி தமிழன்வழி !

  11. prabhu

    வீர தமிழா சீமான் நீ தமிழனட ……நானும் நிச்சயம் உன் பின்னல் வருவேன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *