BREAKING NEWS
Search

‘சீக்கியனின் ரோமத்துக்குள்ள மதிப்பு கூட தமிழன் உயிருக்கில்லையா?’

சீக்கியனின் ரோமத்துக்குள்ள மதிப்பு கூட தமிழனின் உயிருக்கில்லையா?- சீமான்

சென்னை: சீக்கியரின் ரோமப் பிரச்சினைக்காக வாதாடிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழனின் உயிருக்கு என்றாவது மதிப்பு கொடுத்துள்ளாரா? சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று கேட்டுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.இது போக மற்ற மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை மிகவும் இழிவாக நடத்தியுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளாக நம் மீனவர்கள் மீது தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதும், அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதனை நம் அரசியல் தலைவர்கள் கண்டித்து வெற்று அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாக உள்ளது.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது இந்த முறையாவது நாம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த நிலைக்கு காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களின் கையாலகாத்தனம்தான்.

இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட – இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை – குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை. இது குறித்து இதுவரை இந்திய தூதரகம் பெயரளவுக்கு கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்குள்ள பூத்தொட்டி உடைந்தவுடன் பதைபதைத்து தன் கவலையை இலங்கைக்கு தெரிவித்த மத்திய அரசு, உடனடியாக விசாரணையை முடுக்கிய மத்திய அரசு, இது வரை செத்த 500க்கும் மேற்பட்ட தமிழ் மீனவனுக்கு என்ன செய்திருக்கிறது?

பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா? சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?

இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

இந்தியாவின் கிழக்கு கடற்படை காமாண்டோ ராஜசேகர் நேற்று அளித்த பேட்டியில் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கின்றார். அப்படியானால் அவர்களுக்குத் தெரிந்துதான் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறதா?

வழக்கம் போல் நமது முதல்வரும் கடிதம் எழுதி பிரச்சனையை முடித்து விட்டார். தமிழர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தீர்வாக சொல்லும் முதல்வரே, மத்திய அரசு இப்பிரச்சனையத் தீர்க்க ஒன்றும் செய்யவில்லை என்று மத்தியில் பதவி வகித்துக்கொண்டே நேற்று கூறியிருக்கிறார். இந்த முறையும் கடிதம் எழுதிவிட்டு வழக்கம் போல் பிரச்சனையை முடித்து விட்டார்.

பதவிகளைப் பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமையை முடித்து விட்டார்.

இது தொடர்கதையாகி விடக்கூடாது. ஆகவே இந்த முறையாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். முதற் கட்டமாக இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்திய இறையான்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறிவிடும்,” என்று கூறியுள்ளார் சீமான்.
11 thoughts on “‘சீக்கியனின் ரோமத்துக்குள்ள மதிப்பு கூட தமிழன் உயிருக்கில்லையா?’

 1. cuddalore shanthakumar

  கடிதத் தந்தை திரு கருணா அவர்களே, பேருனுக்கும் உன் பிள்ளைக்கும் மட்டும் பிளைட் ஏரி பொய் சொக்க தங்கம் சோனியாவ சந்திச்சி மந்திரி பதவி பிச்சை எடுக்க தெரியும், தமிழன் செத்தால் மட்டும் கடிதம் எழுதுகிறாயே ! இது தான் நெஞ்சுக்கு நீதியா! போய உன் ……….. நீதி!. தமிழனை நக்கி பிழைத்தது போதும் கொலைஞரே!
  இனியும் கடிதம் எழுதி எங்கள் நெஞ்சில் குத்தாதீர்கள்! எம் தமிழினத்தை காக்க தவறிய கொலைஞரே உங்கள் சண்முகநாதனிடம் சொல்லி குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு உயிருக்கும் விலைக் கொடுத்தாக வேண்டும் , உன் பிள்ளைகள் நடத்தும் சகோதர உத்தத்தில் தீமுக சமாதி ஆவது உறுதி!

 2. Mariappan

  இந்தியாவின் கிழக்கு கடற்படை காமாண்டோ ராஜசேகர் நேற்று அளித்த பேட்டியில் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கின்றார். அப்படியானால் அவர்களுக்குத் தெரிந்துதான் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறதா?

  வழக்கம் போல் நமது முதல்வரும் கடிதம் எழுதி பிரச்சனையை முடித்து விட்டார். தமிழர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தீர்வாக சொல்லும் முதல்வரே, மத்திய அரசு இப்பிரச்சனையத் தீர்க்க ஒன்றும் செய்யவில்லை என்று மத்தியில் பதவி வகித்துக்கொண்டே நேற்று கூறியிருக்கிறார். இந்த முறையும் கடிதம் எழுதிவிட்டு வழக்கம் போல் பிரச்சனையை முடித்து விட்டார்.
  பதவிகளைப் பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமையை முடித்து விட்டார்.

  சாவு எண்ணிக்கை கூடினால் இரங்கல் கவிதை எழுதுவார். வேறென்ன புடுங்க முடியும் இந்த கிழ குள்ள நரியால்? தன் குடும்பம் சொத்து என்பதை தவிர வேறொன்றும் அறியாத செந்தமிழ் காவலர் அல்லவா.

 3. ss

  இத நீங்க சொல்றது நியாமில்லை மிஸ்டர் சீமான். உங்க தம்பி சூர்யா விற்காக வளைந்து கொடுக்கும் உங்களுக்கும் மத்த அரசியல் வியாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை. சும்மா மக்களை உசுப்பேத்தி நல்லவன் மாதிரி நடிக்காதீங்க.

 4. VELMURUGAN

  சீமானின் வார்த்தைகள் மிகவும் சரி. ஆனால் அதை சொல்லும் தகுதி தற்போது சீமானுக்கு இல்லை.

 5. AA

  ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டிய செயல் இது!!! அரசியல் நாகரிகம் தெரியாத ஒரு அரசின் கீழ் நாம் இருக்கிறோம்,,மீனவன் வாழ்கையை சினிமாவில் காட்டுவது போல,நிஜமாகவும் காட்டுகிறது கோடியக்கரை சம்பவம்,,,, எல்லாம் தலை விதி ……? வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் famous இனி வேதாரண்யம் மீனவர்கள் famous அக போறாங்க,,,,,,,,

 6. eelam tamilan

  guys… any idea how many votes DMK will get from this fisheries community area?… until we have people smart enough or not able make people to reach that point… not worth to discuss on this… Pls rather you all comment on your feelings.. try to see what can be done… you could atleast circulate news to your friends/relations and try to educate people and take them out of television serials….

 7. saravanaraj .s.p

  சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?
  *****************************************************************************************************************இலங்கை அகதிகளை ஏற்க தயார் : கிழக்கு திமோர்

  இலங்கை அதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா முன்வைத்த யோசனையை ஏற்க தயாராக இருப்பதாக, கிழக்கு திமோரின் ஜனாதிபதி ஜோஸ் ரொமோஸ் ஹோர்டா தெரிவித்துள்ளார்.

  எனினும் அவர்கள் தொடர்பில் கிழக்கு திமோரில் அமைக்கப்படவுள்ள அகதிகள் மத்திய நிலையத்தை, ஐக்கிய நாடுகள் சபை போன்ற மூன்றாம் தரப்பினரே நிர்வகிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

  இதேவேளை அகதிகளால் கிழக்கு திமோரின் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தின் ஒரு பகுதி, முழுமையாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  எவ்வாறாயினும் குறித்த முகாம் எங்கு உருவாக்கப்பட வேண்டும், எவ்வளவு காலத்துக்கு இருக்கும், செலவினங்களை பொறுப்பேற்பவர் யார் போன்ற விடயங்கள் குறித்து பேச எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையில், இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் தொலைபேசியில் தம்முடன் தொடர்பு கொண்டபோதும், உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 8. saravanaraj .s.p

  ##### ***** செய்திகள் : – ******** ########

  ௧) மட்டக்களப்பில் 17ம் நூற்றாண்டின் தொல்பொருட்கள் மீட்பு: தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள்

  ௨)ஐ.நா.அலுவலக முற்றுகையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றிய பொலிஸார் மீது விசாரணை

  ௩)இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை மூடுமாறு பான் கீ மூன் உத்தரவு! வதிவிடப் பிரதிநிதியும் திருப்பியழைப்பு

  ௪)ஐ.நா ஆலோசனைக் குழுவிற்கு எதிரான ஆவணத்தில் கைச்சாடுவது குறித்து இந்தியா ஆலோசனை

  ௫)இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தரக்கோரி ரஷ்ய தூதரகத்தில் சீமான் மனு

  ௬)இலங்கை அகதிகள் தொடர்பிலான வீசா தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது

 9. niyayam

  இதென்ன இன்னும் நன்றாக பேசலாமே

  அதைத்தவிர வேற என்ன இருக்கிறது எம்மிடத்தில் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *