BREAKING NEWS
Search

சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்!

சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்!

வாழ்க்கையில் நாம் எல்லோருமே, ஏதோ ஒரு சூழலில் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டு திருதிரு வென விழித்திருப்போம்.

padaiyappa-6

என்னுடைய ‘திரு திரு’ அனுபவம், படையப்பா படப்பிடிப்பில்தான் நடந்தது.

அந்தப் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்து, பின்னர் புகை என்றாலே ஒத்துக் கொள்ளாத அளவுக்கு மாறிப் போனவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், காலை முதல் மாலை வரை செட்டிலேயே இருப்பார். சாப்பாடு கூட அங்கேயேதான்.

எனக்கோ தம்மடிக்காமல் இருக்க முடியாது. படப்பிடிப்பு அரங்குக்கு உள்ளே பழைய பொருட்கள் வைக்கும் அறை ஒன்று உள்ளது. சற்று இருட்டாக இருக்கும். அங்கே போய் ரகசியமாக தம்மடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே எனக்கு முன்பே ஒருவர் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

அவர் ரஜினி சார்…

முடித்துவிட்டு இருவரும் வெளியில் வந்தோம். அந்த சிகரெட் வாசனையும் கூடவே வந்துவிட்டது.

உடனே சிவாஜி சார், “யார்றா அது… அவன் செட்டுக்குள்ள சிகரெட் புடிக்கிறது… எம் பையன் எடுக்கிற படம்… இவ்ளோ பெரிய செட்டுல எதுனா தீப்பிடிச்சா என்ன ஆகும்…” என்று கர்ஜிக்க, எங்கள் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தது மறக்க முடியாதது.

உடனே, பக்கத்திலிருந்த மேக்கப்மேனை மாட்டிவிட்டோம்… வேறு வழியில்லை. இத்தனைக்கும் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமே இல்லை…!”

– புதன்கிழமை சென்னையில் நடந்த திரு திரு துறு துறு ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சொன்னது.

இந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் ரஜினி – கமல்!

ந்தியத் தொழிதிபர்கள் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

pad200_1

இந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவிலும் இவ்விரு கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் பிரதிநிதிகளாய் இவர்களை பங்கேற்க அழைத்திருந்தது எப்ஐசிசிஐயின் சென்னை மண்டலம். கூட்டம் முடிந்த பிறகு, ரஜினியும் கமலும் வெகுநேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

வாய்ப்புகளை மறுக்கும் எந்திரன் வில்லன்

ந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் டேனியை எப்படியாவது தங்கள் படங்களில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜீத்.

danny_denzongpa

தங்களது 50 வது படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் – அஜீத் இருவருமே டேனியை அணுகியிருக்கிறார்கள். முதலில் வந்து கேட்ட விஜய் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாரிடம், ‘பார்க்கலாம்…’ என்றவர், தொடர்ந்து வந்த வாய்ப்புகளைப் பார்த்து இப்போதைக்கு எந்தப் படமும் வேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கூறிவிட்டாராம். சிவாஜியில் நடித்த சுமனை இவ்விருவரும் தங்கள் படத்திலும் வில்லனாக்கியது நினைவிருக்கலாம்.

ஆனால் எந்திரன் முடியும் வரை வேறு எந்தப் படத்திலும் கமிட்டாவதில்லை என்றும், அதற்கடுத்து வேறு தமிழ்ப் படங்களில் நடிக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் டேனி கூறியுள்ளார்.

-ரசிகன்
2 thoughts on “சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்!

 1. harisivaji

  sandapottalum singathoda sandapottu thothoporathu maathri nadikrathu eppudi
  athavitu
  kuruvi poochi elli peruchaali kooda
  sandapodrathu epdi

  Good daniel Keep it up
  but maintain it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *