BREAKING NEWS
Search

சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆண்டனி!

சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என புலம்பெயர் தமிழர்கள் கோபப்பட்ட விஜய் ஆண்டனி, மீண்டும் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைக்கிறார்.

வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்தததால், வேலாயுதத்துக்கும் இவரே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக்கொண்டாராம்!

சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

ந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் – சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம். உச்சபட்சமாக இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.

ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள். அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை. இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாகிவிட்டனர்.

வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ‘ரெடி’ படத்தை எடுக்கிவிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படத்தை மொரீஷியஸில் எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் சல்மான். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம்!

‘இன்டர்வியூ வேணும்னா வரச் சொல்லுங்க!’

பொதுவாகவே, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வீட்டு வாசலில் தவம் கிடந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள் மணிரத்னம் போன்ற இயக்குநர்கள். ஆங்கிலப் பத்திரிகைகள், குறிப்பாக வட இந்திய மீடியாவுக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

ராவணன் படத்துக்காக இதுவரை ஒருமுறை கூட மணிரத்னம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்ததே இல்லை. வட இந்திய சேனல்கள் சிலவற்றுக்கு சென்னையில் அவர் அளித்த பேட்டியைத்தான் முன்னணி நாளிதழ் உள்ளிட்டவை வெளியிட்டன.

இந்த நிலையில் ராவண் அவுட்டாகிவிட்டது. ராவணன்தான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தனது பிஆர்ஓவை அழைத்த இயக்குநர், “தமிழ் பத்திரிகைகள் யாருக்காவது என்னுடைய பேட்டி வேணும்னா வரச் சொல்லுங்க” என்றாராம்.

அடடா… என்ன பெருந்தன்மை!
18 thoughts on “சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

 1. sakthivel

  ராவணன்- ஒரு பெண் அழகாக இருந்தால், எவன் மனைவியாக இருந்தாலும் ஹீரோ ஆசைப்படலாம் என்ற மாபெரும் சிந்தனையை அருளியுள்ள மணிரத்தினம் வாழ்க…..

  அதிபுத்திசாலி என்ற நினைப்பில் எடுத்த அரைவேக்கட்டுதனமான படம்.

 2. r.v.saravanan

  இந்த நிலையில் ராவண் அவுட்டாகிவிட்டது. ராவணன்தான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தனது பிஆர்ஓவை அழைத்த இயக்குநர், “தமிழ் பத்திரிகைகள் யாருக்காவது என்னுடைய பேட்டி வேணும்னா வரச் சொல்லுங்க” என்றாராம்.

  அடடா… என்ன பெருந்தன்மை!

  ஹா…ஹா

 3. NTI

  வினோ

  சிவப்புக் கம்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்!

  உங்களுடைய கருத்து என்ன?

 4. NTI

  rajini.bala உங்களுடைய இந்த கருத்துக்கு ராவணன் ராமனை விட 10 மடங்கு சிறந்தவன்..! தமிழன்! பராட்டுகள்

  ஆஹா என்னமா யோசீகேரஈங்க்ய?

 5. குமரன்

  ///சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என புலம்பெயர் தமிழர்கள் கோபப்பட்ட விஜய் ஆண்டனி, மீண்டும் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைக்கிறார்.///

  இப்படிப்பட்ட விஜய் ஆண்டனியை எப்படி தமிழ்ப் படாத்துக்கு இசை அமைக்க அனுமதிக்கலாம்? கொதிக்கிறது. இவர்க்கு ரெட் கார்டு போடாத ஜாகுவார் தங்கம் ராமநாராயணன் வகையறா தலைவரையும் அஜீத்தையும் வசை பாடினார்கள். இதற்கு என்ன செய்தார்கள். தமிழினத்துரோகி விஜய் ஆண்டனி என்று எதிர்க்கவேன்டாமா?

 6. Manoharan

  அசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் ? விஜய் ஆண்டனி இப்படி செய்தது ஏன் பத்திரிகைகளில் வரவில்லை ? இருவருக்கும் தமிழ் திரையுலக நாட்டாமைகள் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் ?

 7. குமரன்

  rajini.bala அவர்களே

  ///ராவணன் படத்தில் மட்டும் அல்ல ராமாயணத்திலும் சீதா ராவணன் மீது காதல் கொண்டாள் என்பது உண்மை..

  கம்பராமயனதிலும் அது சொல்ல பட்டு இருகிறது..///

  தலைவர் பெயரைக் கெடுக்காதீர்கள். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக் கூடாது. கம்பராமாயணத்தில் எங்கும் அப்படி இல்லை. சீதை அன்னை. அன்னையைப் பழிக்கக்கூடாது.

 8. eelam tamilan

  i agree with rajani.bala’s comments.. i also read that many years back.. but, i know people blindly comment here… better go and consult any educated tamil literature professor on this.. or who read on these books more than just believe things blindly….

 9. eelam tamilan

  One small challenge to Vino (not sure whether you will publish this comment)

  You are good on expose these news on seeman, suriya, vivek and asin.. it great… we understand your concerns and support for tamils and voice for them… It is all just in your site… why you can not go above that?
  I found that you are one of the tamil cinema news reporter organization (some thing like) active member.. Why you could make move from tamil cinema media to show red card on their media to these people who gone SL and support Mahinda’s actions…If you can really do this small thing, then i really salute you…

  And some more thing you could do on this.. such as you could get comments on south india tamil cinema union or who ever made statements earlier and now silent for these recent things which make every to go on track and keep up the words…

  What i try to say is rather than just write in your site and expose to your readers and get just comments and fight with them.. you could show some thing above that… Looking forward to seeing your constructive actions which are really needed at this moment.. Pls

 10. NTI

  குமரன் அவர்களே,

  ravanan is a great siva pakthan. And the Ramayanam epic is written by an ariyan peot( Valmikhi).
  ” Ravanan seethaiyai pazhi vaangum nokhathudan mattumeiandri veru kaaranangalukaaha kadathi challavillai”

  most of Thamizhars are not accepting the ariyan raamayanam.

  what do you think about this???

  If Ravanan was infact in today’s ilangai then where was the ayodhya of Rama’s time ? what language did rama use to communicate ? It is quite likely that the army that rama developed would have been in the southern part of India, going by the name of Rama’s fore fathers it all looks like non tamil, how did rama communicate with the army ? what language was in existance in ilangai that time ?

 11. Ravanan

  வினோ…

  ராமன் vs ராவணன் —– கருத்து மோதல்களுக்கு தீர்ப்பு வழங்குவீர்கள் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம்.

 12. குமரன்

  ealam.tamilan அவர்களே
  நான் சொன்னது நூற்றுக்கு நூறு சரியான கருத்து. அப்படி ராமாயணத்தில் இல்லை என்பது உண்மை. இருக்கிறது என்று சொல்பவர் அல்லவோ ஆதாரமாக அந்தக் கவிதைகளைத் தரவேண்டும். நீங்கள் படித்திருப்பதால் நீங்களும் தரலாம். தவறில்லை.

  அன்பர் NTI அவர்களே

  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்.
  “தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.

  தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.

  ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

  ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?

  இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.

  சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.

  எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.
  http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1006/23/1100623045_2.htm

  கருணாநிதி குடும்பத்தை முன்னேற்றவே இந்த ஆரிய வாதம் பயன்பட்டிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

 13. குமரன்

  தமிழனைத்தவிர கன்னடனோ, மலையாலத்தானோ, தெலுங்கனோ இந்தமாதிரி திராவிடன் என்று சொல்லிக்கொள்ளவில்லையே? ஏன்?

  அவ்வளவு ஏன்? ஈழத்தமிழர் சொல்லிக்கொள்கிறாரா? இல்லையே? தமிழனை மட்டும்தான் இந்தப் பிரிவினைவாதத்தைச் சொல்லி தமிழன் என்ற அடியாளம் தொலைவதற்கு உபயோகிக்கிறார்கள்.

 14. Juu

  “எனக்கு என்னோட மச்சான்ஸ்தான் முக்கியம்” என்று சொன்ன நமீதா எங்கே!!!
  பணம்தான் முக்கியம் என்று இலங்கை போன அசின் எங்கே???

  மக்களே!!! உண்மையான அன்பை புரிஞ்சிக்கோங்க…

 15. குமரன்

  லெமூரியாக் கண்டம் இருந்ததாகவும் அது இன்றைய ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகியவர்ரைஎல்லாம் உள்ளடக்கியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பெரும்பகுதி கடல் கொண்டுபோனதாக இலக்கியச்சான்றுகள் உள்ளன. விஞ்ஞானபூர்வமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இதை நமது இலக்கியங்கள் குறிப்பாக சிலப்பதிகாரம் குமரிக்காண்டம் என்று குறிப்பிடுகிறது. குமரிக்காண்டம் கடல் கொண்டுபோனதாகவும் அதிலிருந்த தமிழர்கள் வடக்குநோக்கி புலம்பெயர்ந்து தற்போதைய தமிழகம் முதல் சிந்துவரை பரவியதாகவும் கூறுகிறது. அப்படியானால் ஈழம்தான்/ இலங்கைதான் தமிழனின் தாய்நாடு அவன் வந்தேறிய இடம்தான் தற்போதைய தமிழகம், அதாவது ஆரியன் தமிழனை சிந்துசமவளியிளிருந்து விரட்டிய கதைக்கு நமது சிலப்பதிகாரத்திலேயே மாற்றுக் கருத்து உள்ளது.
  http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *