BREAKING NEWS
Search

சிறுமியை சீரழித்துக் கொன்றவனை என்கவுன்டரில் கொன்ற கோவை போலீசார்!

சிறுமியை சீரழித்துக் கொன்றவனை என்கவுன்டரில் கொன்ற போலீசார்!

கோவை: கோவையில் 10 வயது சிறுமியையும், அவள் தம்பியையும் பள்ளி செல்லும்போது கடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொடூரமாகக் கொன்ற மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் ஜெயின். இவரது மகள் முஷ்கான் (11), அவளது தம்பி ரித்திக் ஜெயின் (8). இருவரையும் காரில் கடத்திச்சென்று சிறுமியைக் கற்பழித்து பின்னர் இருவரையும் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விசாரணைக்காக இருவரையும், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நான்கு நாள் அனுமதி கேட்டு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி 5வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களுடன் செல்ல விருப்பமா என கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர். மேலும், இவ்வழக்கில் மேலும் இரு டிரைவர்கள் எங்களுடன் இருந்தனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 3 நாள் காவலில் அவர்களை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், விசாரணை முடிவடைந்து நவம்பர் 11ம் தேதி இருவரையும் ஆஜர்படுத்துமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரையும் செட்டிக்குளம் பகுதிக்கு முதலில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, மோகனகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் நெற்றி, இடுப்பில் குண்டு பாய்ந்து மோகன கிருஷ்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மனோகரனை வேறு ஜீப்பில் அழைத்துச் சென்றிருந்தனர் போலீஸார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு கூறுகையில், மோகனகிருஷ்ணன், தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போலீஸ் என்கவுன்டர் குறித்து சைலேந்திரபாபு இன்று கூறுகையில், “விசாரணைக்காக மோகன் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.

கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் 3 குண்டுகள் பாய்ந்து அவன் உயிரிழந்தான்,” என்றார் சைலேந்திர பாபு.

பட்டாசு வெடித்து கொண்டாடிய கோவைவாசிகள்

மோகனகிருஷ்ணனை கோவை போலீஸார் இன்று அதிகாலையில் என்கவுன்டர் மூலம் கொன்றதை, இறந்த சிறுவர்களின் பெற்றோரான ரஞ்சித் ஜெயின் தம்பதி வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. எங்களுடைய செல்லக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்றுதான் நாங்கள் நிம்மதி அடைகிறோம்.

நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபு நாங்கள் பாராட்டுகிறோம்.

இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும், என்றனர்.

முஷ்கான், ரித்திக் ஆகியோரது வீடு உள்ள ரங்கே கெளடர் வீதியில் வசிக்கும் மக்கள் மோகன கிருஷ்ணனின் மரணத்தை தீபாவளி போல பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
23 thoughts on “சிறுமியை சீரழித்துக் கொன்றவனை என்கவுன்டரில் கொன்ற கோவை போலீசார்!

 1. நாஞ்சில் மகன்

  சபாஷ். இப்படித்தான் இருக்கனும் தீர்ப்பு. மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். வெல்டன் 4 தமிழ்நாடு போலீஸ். மனித உரிமை அது இதுன்னு எவனாவது வந்தா அவனையும் இது போலத்தான் செய்ய வேண்டும். இந்த செய்தியை இப்போதுதான் என்வழியில் படித்தேன். முதன் முதலில் வெளியிட்டதற்கு உங்களுக்கும் ஒரு கங்கிராட்ஸ் வினோ சார் மற்றும் செல்வா சார்.

 2. parthiban

  கண்டிப்பாக இது போலீசாரால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை தான் ஆனால் இவனை இப்படி கொன்றதில் எந்த தவறும் இல்லை. முற்பகல் செயின் பிற்பகல் விளையும்

 3. Venkat

  அண்ணாமலை சார் கலகிட்டிங்க……….அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்.

 4. Manoharan

  இது போன்ற கொடூரமானவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை. இது போல் நாலு பேரை போட்டால்தான் அடுத்தவன் தப்பு செய்ய பயப்படுவான். சைலேந்திரபாபு தலைமையிலான போலீசுக்கு கோவையே தலை வணங்குகிறது. ஒரு ஐம்பது ரூபாய் துப்பாக்கி குண்டில் கோவை மக்களுக்கு நீதி வழங்கிய காவல்துறைக்கு நன்றி.

 5. selva

  உடனடியா இந்த கொலை காரனை கொன்னதுமாதிரி சேலம் மந்திரி உறவினரான கொலை காரனையோ பேருந்துல 3 பெண்களை கொன்ற அதிமுக மற்றும் மதுரை தினகரன் கொலைகாரர்களையோ கொல்ல அ குறைந்தது தண்டனை கொடுக்கவோ முயற்சி இல்லையே ஏன் ?

 6. BALAJI.S

  MOHAN ENDRA KOLAIKALARAANAI KONDRATHIL ENTHA THAVARUM ILLAI.INNUM SITHRAVATHAAI PANNI KONDRU IRUNTHAAL INNUM SANTHOSAMA IRUNTHU IRUKKUM

 7. Gokulakrishnan

  We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!

  On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.

  Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA’s arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

  So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
  Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA’s can’t raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

  So Kalignar adichaar, “ore kallil irandu maangaa”- proverb.

 8. Priya

  போலீஸ் செஞ்சது தப்பே இல்லை. இந்த மாதிரி மனித மிருகத்தை இப்படி தான் சுட வேண்டும். சைலேந்திரபாபு தலைமையிலான போலீசுக்கு கோவையே தலை வணங்குகிறது.

 9. Mariappan

  வெல்டன் தமிழ்நாடு போலீஸ். ஆனா இதேபோல சட்டத்தின் ஓட்டை மூலம் தப்பிக்கும் ரௌடிகளையும் கரை வேட்டிகாரங்களையும் போட்டு தள்ளினா போலீஸ் மதிப்பு உயரும்.

 10. kalimuthu

  போலீஸ் செஞ்சது தப்பே இல்லை. இந்த மாதிரி மனித மிருகத்தை இப்படி தான் சுட வேண்டும். சைலேந்திரபாபு தலைமையிலான போலீசுக்கு கோவையே தலை வணங்குகிறது.
  சபாஷ். இப்படித்தான் இருக்கனும் தீர்ப்பு. மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். வெல்டன் 4 தமிழ்நாடு போலீஸ். மனித உரிமை அது இதுன்னு எவனாவது வந்தா அவனையும் இது போலத்தான் செய்ய வேண்டும். இந்த செய்தியை இப்போதுதான் என்வழியில் படித்தேன். முதன் முதலில் வெளியிட்டதற்கு உங்களுக்கும் ஒரு கங்கிராட்ஸ் வினோ சார் மற்றும் செல்வா சார்.

 11. r.v.saravanan

  சபாஷ் சரியான தண்டனை ஆனால் இந்த தண்டனை கூட போதாது

 12. ச.அலாவுதீன்.,

  இவன் உயிர் ஒரு வினாடியில் பொசுக்கென்று பறிக்க பட்டுவிட்டது…..
  அந்த குழந்தைகளின் மரண வலி உணர படாமலே…..

  இவனை கல்லை கட்டி கடல்ல போட்டு இருக்கனும்… உயிரோட கொளுத்தி இருக்கணும்…இல்லை மக்களின் கையில் விட்டு இருக்கணும்….

  பணம் மதிப்பு வேறு… உயிர் மதிப்பு வேறு….என்று உணர வேண்டும்….
  இவனின் மரணம்… சுலபமாய் பணம் சம்பாதிக்க யோசிப்பவர்களுக்கு…..

 13. santhosh

  சபாஷ் சரியான தீர்ப்பு……. இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

 14. S.DHANDAPANI

  I SALUTE TO OUR POLICE PERSONS.THEY DID A VERY GOOD JOB TO KILL THE ANIMAL(VAN DRIVER).THIS IS A LESSON FOR THOSE THINK IN A WRONG MANNER. ONCE AGAIN I SALUTE TO MR.SAILENDRA BABU AND HIS TEAM FOR A GREAT ACHIVEMENT.
  சபாஷ். இப்படித்தான் இருக்கனும் தீர்ப்பு. மத்தவங்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். வெல்டன் 4 தமிழ்நாடு போலீஸ் மனித உரிமை அது இதுன்னு எவனாவது வந்தா அவனையும் இது போலத்தான் செய்ய வேண்டும்
  சைலேந்திரபாபு தலைமையிலான போலீசுக்கு கோவையே தலை வணங்குகிறது.

 15. கடலூர் எழில்

  கலக்கிட்டீங்க, இப்ப தான் காவல்த்துறை மக்களின் நண்பன் போன்று நடந்து கொண்டுள்ளது. அதேப் போல்
  “தினகரன் பத்திரிகை நிருபர்கள் மூன்று பேர் எரிக்கப்பட்டனரே ?
  தா.கிருட்டிணன் கொலை செய்தவர்கள் ?
  தர்மபுரி பேருந்து எரிப்பு ?
  காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ?”
  செய்ய துணிவு இருக்கா?

 16. Mahesh

  Dear Friends !! Please have a look at the comments in dinamalar.com on this news.There are thousands and thousands of comments congratulating Mr. Sailendra Babu. and the police team. Never seen so many comments anywhere on any issue.Clearly shows people agitation on the issue. Also one more notable thing is all the Kovai people have felt the sorrow as if it had happen in their own home. Let the children soul rest in peace besides the Great Almighty !! They have kindled the fire of humanity that is lying in everyone’s heart. !!

 17. LAKSHMIDHARAN

  தினகரன் அலுவலகத்தில் எரித்துக் கொல்லப் பட்ட மூன்று பேரும் அவர்கள் பெற்றோருக்கு குழந்தைகள் ? அதற்காக அழகிரியை என்கவுண்டர் செய்வாரா கருணாநிதி ? அட்டாக் பாண்டியை என்கவுண்டர் செய்ய உத்தரவிடுவாரா கருணாநிதி ?

 18. Ash

  அந்த மிருகம் இந்த தண்டனைக்கு தகுந்தவன் தான்

 19. sam

  crct dan…avanuku..ida vida mosamana…thandanai ya kuduthrukanum…thapicitan…idu planned murder..nu chinna kulanthai ku kuda terium…but..adu thapu..illa…iday madiri tharmapuri…bus burning…case um mudikalamay??????….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *