BREAKING NEWS
Search

‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’!

‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’!

சென்னை: நாம் தலைவர்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நபர்களின் லட்சணம் என்னவென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா…anbumani-kani

‘சின்ன ஐயா’… என பாமகவினர் பயபக்தியுடன் அழைக்கும் அன்புமணி ராமதாஸ் நேற்று திருவண்ணாமலையில் பிரச்சாரத்தின் போது பேசியது இது:

நாடாளுமன்றத்துக்கு நான் கொல்லைப் புற வாசல் வழியா (ராஜ்யசபா) நுழைஞ்சிட்டேனாம்… ஸ்டாலின்னு ஒருத்தரு இதைச் சொல்லிக் காட்டுறாரு. உன் தங்கச்சி (கனிமொழி) எந்த வாசல் வழியாப்பா நாடாளுமன்றத்துக்கு வந்துச்சு.. தெரு வாசல் வழியாவா?

உங்க மாமா (முரசொலி மாறன்) 30 வருசமா எந்த வாசல் வழியாப்பா போனாரு.. தெரு வாசல் வழியாவா கொல்லைப் பக்கமாவா? அப்ப நீ அவருகிட்ட கேட்டியா. மாமா.. மாமா.. நீங்க எந்த வாசல் பக்கமா போனீங்கன்னு கேட்டியா?

இதே கேள்விய பிரதமர் மன்மோகன் சிங்கிட்ட கேக்க உனக்கு தைரியம் இருக்காப்பா…

துரைமுருகன்னு ஒருத்தரு இருக்காரு. அவரு திருவண்ணாமலையில பேசுறாரு.. நாம 39 இடத்துல ஜெயிக்காட்டியும் பரவாயில்ல, திருவண்ணாமலையிலே ஜெயிச்சே ஆகனும்னு பேசியிருக்காரு. காடு வெட்டி குருவ தோக்கடிச்சே ஆகனும். இல்லாட்டி நாம வேட்டியே கட்ட முடியாதுன்னும் சொல்லியிருக்காரு..

இப்பவே துரைமுருகன பாக்க சகிக்கல.. இதுல வேட்டி வேற இல்லாம.. நினைக்கவே முடியல.

அப்புறம் எ.வ.வேலுன்னு ஒரு அமைச்சர். அவரு தான் நம்ம உணவுத்துறை அமைச்சர். அவருக்கு வேலையே அரிசி கடத்துறது தான். அவரு சொல்றாரு.. திருவண்ணாமலையில நாம ஜெயிக்காட்டி நான் ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்ல.. இப்படி ஒரு பேச்சு.

தேர்தல் முடிவு வந்த பின்னால எத்தன பேரு எத்தன அப்பன தேடிப் போகப் போறாங்களோ தெரியாது…!, என்றார்.

வெற்றி கொண்டான், எஸ்எஸ் சந்திரன் வரிசையில் சேர விரும்புகிறார் போலும்!
8 thoughts on “‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’!

 1. ananth

  Started showing his true colours…we cant expect more from this guy after all he is the son of ************
  Just for publicity & getting mileage out of sensitive issue of srilankan tamil, PMK, Seeman, Bharathiraja using tamil issue…nothing more than this…

 2. sooriyan

  I think, PMK should loose all 7 seats this time. They have been doing too much cheap politics.. There should be lessons for such people..

  Srilankan issue should not decide who should rule India. We have our own problems.. To take care of the worlds no 2 populations, we have to do lot of things to protect our own people first..

  Should vote for either Congress or BJP. Third front and fourth front and all become joke and no vision and no stability…

  People please keep away neighbour’s problem while deciding to caste your vote. Think about your own child, brother, sister’s future and decide accordingly. Nothing wrong in taking care of our needs first.. Unless you live, you can not worry about next door neighbour..

 3. palZ

  அடுத்தவர்களின் தவறான செயல்களை சுட்டி காட்டுவதால் இவர் நல்லவரென்று மக்கள் நம்பமாட்டார்கள்.

 4. கிரி

  //வெற்றி கொண்டான், எஸ்எஸ் சந்திரன் வரிசையில் சேர விரும்புகிறார் போலும்!//

  சரியா சொன்னீங்க!

  என்ன தான் கோட் சூட் போட்டாலும் உண்மை வெளியே வராமல் இருப்பதில்லை

 5. ராஜா

  //வெற்றி கொண்டான், எஸ்எஸ் சந்திரன் வரிசையில் சேர விரும்புகிறார் போலும்!//
  கோட் சூட் போட்ட வெற்றி கொன்டான். இவரல்லாம் மத்திய அமைச்சர். வாழ்க இந்தியா???

 6. selvaraj

  Ennanga THEEPORI ARUMGATHA VIDUTEENGALA…..Antha allu pesanna ranagalamaidumey….People used to record this guy’s speech and play it in cassetes….

 7. Raj

  அழுகி போக போற மாம்பழமா ஆகிட போறாரு…! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *