BREAKING NEWS
Search

சினிமா சங்கங்களின் பேச்சு… விடிஞ்சாலே போச்சு!

சினிமா சங்கங்களின் பேச்சு… விடிஞ்சாலே போச்சு!

சினிமாக்காரர்கள்  தங்கள் சங்கங்கள் மூலம் ஏதாவது ஒரு pro-ap2-2008சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அடுத்த சில தினங்களில் அதை மீறப் போகிறார்கள் என்று அர்த்தம்!

பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தவிர வேறு தினங்களில் வெளிவரக்கூடாது என்று சட்டம் போட்டார்கள்… அடுத்த சில வாரங்களில் கமுக்கமாக அந்த கட்டுப்பாடு மீறப்பட்டுவிட்டது. விஜய் நடித்த வேட்டைக்காரன் ரிலீஸாவது டிசம்பர் 18-ம் தேதி.

அடுத்த கட்டுப்பாடு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு மேல் வெளியாகக் கூடாது என்பது. அதாவது அளவோடு ரிலீஸ் செய்தால், குப்பைப் படமாக இருந்தாலும், காய்ந்து போய் கிடக்கும் ரசிகர்கள் கொட்டோ கொட்டெண்டு பணத்தைக் கொட்டுவார்கள் என்பது இவர்கள் நினைப்பு.

இந்த கட்டுப்பாட்டை அறிவித்த பிறகு பெயரளவுக்காவது வெற்றி பெற்ற ஒரே படம் பேராண்மை. மீதிப் 40க்கும் மேற்பட்ட படங்களின் நிலைமை என்னவென்று உண்மையாகச் சொல்லும் யோக்கியதை எந்தப் பத்திரிகைக்கும் இல்லாமலே போய்விட்டது வேதனையான சமாச்சாரம்தான்.

இதில் கவனிக்க வேண்டியது… இந்த கட்டுப்பாடுகளைப் போடும்போது மகா ஆர்ப்பாட்டமாக பிரஸ் மீட் வைத்து அறிவித்தார்கள். இப்போது அதே தயாரிப்பாளர்கள் கமுக்கமாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

இந்த வெள்ளிக்கிழமை, யோகி, நான் அவனில்லை -2, மத்திய சென்னை, ரேணிகுண்டா என நான்கு பெரிய படங்கள் வெளியாகின்றன.

என்னாச்சு கட்டுப்பாடு… அட கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டோம் என்று பிட் நோட்டீஸ் கொடுக்கக் கூடவா முடியவில்லை!

ஒருவேளை ரஜினி படம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்… என்று காத்திருக்கிறார்களோ!

இன்னொரு விஷயம்…

திரையுலகில் சமீபத்திய ரகளைக்குக் காரணமான நாளிதழுடன் சமாதானம் பேச ஒரு குழு போய் வந்து கொண்டிருக்கிறது என்பது லேட்டஸ்ட் செய்தி!

-நிருபன்




4 thoughts on “சினிமா சங்கங்களின் பேச்சு… விடிஞ்சாலே போச்சு!

  1. harisivaji

    //பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு தவிர வேறு தினங்களில் வெளிவரக்கூடாது என்று சட்டம் போட்டார்கள்… அடுத்த சில வாரங்களில் கமுக்கமாக அந்த கட்டுப்பாடு மீறப்பட்டுவிட்டது. விஜய் நடித்த வேட்டைக்காரன் ரிலீஸாவது டிசம்பர் 18-ம் தேதி.//

    இது பூச்சி படம் ….Discovery channel

  2. siva

    ஆதவன் படமும் வெற்றி படமே சும்மா பொய் செய்தி போடதீங்க
    ஆதவன் சென்னை நான்கரை கோடி
    பேராண்மை இரண்டேகால் கோடி
    UK ஆதவன் இரண்டேகால் கோடி
    பேராண்மை இருபத்தொரு இலட்சம்
    இதில எது வெற்றி படம் எண்டு சொல்லுங்க

  3. ksk

    சினிமா காரங்கள குறை சொல்லற நீங்க என்ன பன்ரிங்கண்ணா?. தமன்னா, பூர்ணா, ஷ்ரியா ன்னு நடிகைங்க படத்த போட்டு விளம்பர காசு பாக்கிறீங்களே. உங்க சைட்லே விளம்பர பகுதிய பாருங்கண்ணா.. அது cinesnacks ன்னு ஒரு சினிமா வெப்சைட் க்கு விளம்பரம். அசிங்கத்த வித்து அதுலே சந்தானம் வாங்கின மாதிரில்லோ இருக்கு உங்க உபதேசம்.

  4. vasu

    //ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு மேல் வெளியாகக் கூடாது என்பது. அதாவது அளவோடு ரிலீஸ் செய்தால், குப்பைப் படமாக இருந்தாலும், காய்ந்து போய் கிடக்கும் ரசிகர்கள் கொட்டோ கொட்டெண்டு பணத்தைக் கொட்டுவார்கள் என்பது இவர்கள் நினைப்பு.//
    தாங்க முடியல… சிரிச்சு சிரிச்சு வயீறு வலிக்குது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *