BREAKING NEWS
Search

சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்!

சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்!

வே.மதிமாறன்

சிதம்பரத்தை சேர்ந்த நண்பர் அருள், ஜப்பானில் வேலை செய்கிறார். அவரின் தங்கை திருமணம் 14-6-2009 அன்று கடலூரில் காலை நடைபெற்றது. மாலை சிதம்பரத்தில் மணமக்கள் வரவேற்பும் நடைபெற்றது.cimg1763

இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொளள வேண்டும் என்று நண்பர் அருள் ஜப்பானில் இருந்தே பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சென்னைக்கு நேரில் வந்தும் அழைத்தார். போதகுறைக்கு சென்னையிலிருந்து செல்வதற்கு ஏசி வசதிகொண்ட கார் வசதியும் செய்து கொடுத்தார். அதன்பிறகும் போகாமல் இருப்போமா?

நண்பர்கள் சசி, வெங்கட், முத்துக்குமார், கலாநிதி, ஸ்ரீதர் (வந்தவாசி) சனி இரவே 12.00 மணியளவில் (13-6-2009) கடலூர் போய் சேர்ந்துவிட்டோம். 14-6-2009 காலை கடலூரில் திருமணத்தில் கலந்து கொண்டோம். பெங்களுரில் இருந்து நண்பர் கை. அறிவழகனும் வந்திருந்தார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அருள் தொகுத்த ‘சங்க இலக்கியம் தமிழர்களின் அடையாளம்’ என்கிற நூல் (ரூ.30 பெருமானமுள்ள) இலவசமாக கொடுக்கப்பட்டது.

‘மாலை சிதம்பரம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் பிச்சாவரத்தை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்‘ என்று அருள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். உடன் சிதம்பரத்தைச் சேர்ந்த நண்பர் அன்புமணியும் வந்தார்.

‘சிதம்பரம் கோயிலுக்கு கண்டிப்பாக போக வேண்டும். பெரியவர் ஆறுமுகசாமியை பார்க்க வேண்டும்’ என்ற வெங்கட்டின் விருப்பம், எல்லலோரின் விருப்பமாக மாறியது. பிச்சாவாரம் முடித்து சிதம்பரம் சென்றோம். (நான் ஏற்கனவே அந்தக் கோயிலுக்கு போயிருக்கிறேன். அரசுடமை ஆன பிறகு இப்போதுதான்.)

கடுமையான வயிற்றுவலியின் காரணமாக ஸ்ரீதர் வண்டியிலேயே சாய்ந்துவிட்டான். மற்ற ஆறு பேரும் மாலை சிதம்பரம் கோயிலுக்குள் சென்றோம். வாட்ட சாட்டமாக அடியாட்களைப் போல் இருந்த தீட்சதர்களைப் பார்த்துபோது பரிதாபத்திற்குரிய உருவம் கொண்ட பெரியவர் ஆறுமுகசாமி ஞபாகத்திற்கு வந்தார். முறுக்கேறிய உடலமைப்போடு நவீன ஆயுதங்களோடு லெபனான் பள்ளத்தாக்கையும் அந்த எளிய மக்களையும் தாக்கிய இத்தாலி இராணுவ ரவுடிகளும், அவர்களை எதிர்த்து வீரோத்தோடு போர் புரிந்த தள்ளாதக் கிழவன் உமர் முக்தரையும் நினைத்துக்கொண்டேன்.

தீட்சிதர்களிடம் பெரியவர் ஆறுமுகசாமி பற்றி விசாரித்தால்…? என்ற யோசனை வந்தது.

வருகிறவர் போகிறவர்களை மடக்கி, ‘சார் மதுரையா.. வாங்க சார் கோவையா.. இங்க வாங்க சார்’ என்று காய்கறி வாங்கப் போனவரை மடக்கி ஆம்னி பஸ்ஸில் மதுரைக்கு அனுப்பி வைக்கும் புரொக்கர் போல், ‘பணம் கட்டினால் வீட்டுக்குத் தபாலில் பிரசாதம் அனுப்பிவைப்போம்’ என்று பக்தியை மார்க்கெட் பண்ணிக்கொண்டிருந்த ஒரு தீட்சிதரிடம் – நான், வெங்கட், அன்புமணி சென்றோம்.

வெங்கட் அவரிடம், ‘பெரியவர் ஆறுமுகசாமி எங்கிருக்கறார்?’ எனறு கேட்டதற்கு, ‘அப்படி யாரும் இங்க இல்ல’ என்றார் தீட்சிதர். விடாமல் வெங்கட், ‘இல்ல டிவியில எல்லாம் காட்டுனாங்களே அவரு…’ என அப்பாவிப்போல் கேட்க,

கடுமையான தீட்சிதர், ‘அவன் ஒரு பிச்சக்கார நாய்… எங்கேயாவது தெருவுல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.’ என்று அன்பே சிவமாக பேசிவிட்டு, ‘நீங்க பணம் கூடுங்க வீட்டுக்கு பிரசாதம் வரும்’ என்றார்.

‘யாரு பிச்சைக்கார நாய்?’ நினைத்துக்கொண்டேன்.

பிறகு நண்பர்கள் மன்னை முத்துக்குமார், நிதி இருவரும் சென்று அதே திட்சீதரிடம் பெரியவர் ஆறுமுகசாமியை பற்றி விசாரித்தனர். அவர்களிடமும் இப்படியே, காதலாகி… கசிந்துருகி… பதில் அளித்திருக்கிறார்.

பக்தர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று நடராஜனை தரிசிக்கிறார்கள். பகுத்தறிவாளர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று ஆறுமுகசாமியை சந்திக்கிறார்கள் என்று ஆகியிருக்கிறது இப்போது.

ஒரு வழியாக பெரியவர் ஆறுமுகசாமியை கண்டுபிடித்தோம். அவர் நடராஜனுக்கு மேற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். சந்திக்க வருகிறவர்களிடம் உற்சாகமாக பேசினார். அவருடன் நின்று நாங்கள் படம் எடுத்துக்கொண்டோம். கர்ப்பகிரகத்தில் இருந்து கடுமையான குரல் எச்சரித்தது, ‘இங்கே போட்டோ எடுக்கக்கூடாது.’

கர்ப்பகிரகத்தில் இருந்து எச்சரித்தது நடராஜன் அல்ல. தீட்சிதர்தான். ஆனால் எங்களுக்கு அருகிலேயே ஒரு இளம் பெண் கோயிலை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு தீட்சிதர்.

இவ்வளவு விரோதமும் அடியாட்களைப்போல் உருவமும் கொண்ட தீட்சிதர்களை, ஐந்தாண்டுகளுக்கு முன் தனிநபராக சென்று அவர்களோடு மோதிய பெரியவர் ஆறுமுகசாமியின் வீரம் போற்றுதலுக்குரியது. இவருக்கு முன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அப்படிமோதிய வள்ளலாரை தீட்சிதர்கள் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள். அதில் கோபிததுக் கொண்டு இனி சிதம்பரமே வருவதில்லை என்று போன வள்ளலார் வடலூரில் ஒரு சிற்றம்பல மேடையை ஏற்படுத்தினார். ஆனால் ஆறுமுகசாமியோ, தீடசிதப் பார்ப்பனர்கள் அடித்து வீதியில் வீசிய போதும் துணிந்து எதிர்த்து நின்றார்.

பக்தர்களின் உரிமைக்காக போராடிய பெரியவர் ஆறுமுகசாமியின் சுயமரியாதைக்கும் அவரின் வீரத்திற்கும் துணை நின்ற, எனது இனிய நண்பர் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும், மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் காலத்திலேயே இவ்வளவு சிரமங்கள் பட வைக்கிற பார்ப்பனர்கள் 1925ல் என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? அதுவும் திருப்பதி உட்பட ஒட்டுமொத்த தென்னிந்திய கோயில்களையும் அரசுடமை என்றால்….. பார்ப்பனர்கள் மட்டுமா சைவ மட ஆதீனங்களும் எதிராக நின்றார்கள்!

அந்த எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, பெரும்பாடுபட்டு, அவமானப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பலபோராட்டங்களுக்கு பின் இந்தியாவிலேயே முதல் முறையாக 1925ல் இந்துமத பரிபாலன சட்டம் என்கிற பெயரில் இந்துக் கோயில்களை அரசுடமை ஆக்கும் சட்டத்தை, இந்து அறநிலையத் துறையை கொண்டு வந்த நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசரை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறோம்.

சிதம்பரம் கோயிலில் அடைந்த வெற்றி, தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி என்பதை விட, பனகல் அரசருக்குக் கிடைத்த வெற்றி என்பது கூடுதல் பொறுத்தம் உள்ளதாக இருக்கும்.

காங்கிரசில் இருந்த பெரியார், பனகல் அரசரின் இந்துமத பரிபாலன சட்ட மசோதாவால் பெரிதும் கவரப்பட்டார். கோயில்களின் சொத்துக்களை மருத்துவமனை போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிற நீதிக்கட்சி அரசின் முயற்சி பெரியாரை பெரிதும் கவர்ந்தது. பனகல் அரசர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். 1925 ல் அந்த மசோதா சட்டமான அதே ஆண்டுதான் காங்கிரசில் இருந்து வெளியேறினார் பெரியார்.

சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததின் பொருட்டு இந்து அறநிலையத்துறையை உருவாக்கிய, தந்தை பெரியாரின் மரியாதைக்குரிய நீதிக்கட்சியின் முதல்வர் ராமராய நிங்கர் என்கிற பனகல் அரசரை, மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறுவோம்.

குறிப்பு: எங்கும் நிறைந்த, எல்லோருக்கும் பொதுவான இறைவனை தமிழில் பாடி வழிபட குறிப்பிட்ட சிலர் ஏற்படுத்திய முட்டுக் கட்டைகளை நீதி மன்ற உத்தரவு கூட முழுமையாக அகற்ற முடியவில்லையே என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்தக் கட்டுரை.




13 thoughts on “சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்!

 1. Balaji

  Yes you are right.. I am also from chidambaram only. But anga pogave ennaku pidikarathu illai.. Ippa India pona kandippa anga poren and intha periya manushara (aarumuga sami) parthu thottu vanagivittuthan varuven.. Panam kodukkalamna ennaku avara avamadikorrmonnu ninaichittu kodukammalaye vanthiruven..

  Nanri.

 2. Paarvai

  நாத்திக/பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் இந்த ஆசை? எல்லாம் காசுதான் ஐயா…..பணத்திற்கு முன் பகுத்தறிவாவது புடலங்காயாவது…கோயிலையும், அதன் வருமானத்தையும் சுரண்டவே இந்த நாத்திகக் கும்பலுக்கு எண்ணம். தீட்சிதர்கள் மேல் தவறுள்ளது. ஆனால் அந்த தவறை சுட்டிக்காட்ட இந்த கும்பலுக்கு அருகதையில்லை.

 3. SureshKumar

  Ungal tamil pattru meisilikavaikirarthu… Apadiye ella masuthiyilayum churchlayum tamil than use pannanum nu sollungalem parpom…

  EVR oru emattru pervazhi.. avarudaiya seedarkal CRA, MK- quality vaithu naan solgeren…

  i dont want to comment further

 4. மந்தைவெளி மன்னாரு

  @பார்வை: இவுங்களும் தட்டிக் கேக்கலைன்னா வேற யாருதான் கேக்கனும்னு சொல்றீங்களாம். கோயில், புனிதம், அது இதுன்னு பேசுற தீட்சிதனுங்க பண்ண வேலை என்னன்னு தெரியுமா உங்களுக்கு? நாலு கோபுரத்துக்குள்ளையும் ரூம் ரூமா பிரிச்சு ஒரு ரிசார்ட் மாதிரி மாத்தி வாடைக்கு விட்டவனுங்கதான் இந்த தீட்சிதனுங்க. உண்டியல் வருமானம் அரசாங்கத்துக்குப் போக ஆரம்பிச்சது இவனுகளுக்குப் பொறுக்கலை. எரியுற கற்பூரத்த உள்ள போடுறானுங்க, எண்ணைய ஊத்துறானுங்க. இதையெல்லாம் நீங்களும் தட்டிக் கேக்க மாட்டீங்க, தட்டிக் கேக்குறவங்களையும் விடமாட்டீங்க.

  @சுரேஷ் குமார்: ஐயா, கிறிஸ்தவர்கள் பெரும்பாலான ஆலயங்களில் தமிழில்தான் ஆராதனை நடத்துகிறார்கள். வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் வழிபடுகிற தேவாலயங்களில் மட்டுமே ஆங்கில ஆராதனை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தி மதப்பிரச்சாரம் செய்யவில்லை. அவர்களுக்கு ஆரம்பம் முதலே உருது மொழியில்தான் வழிபட்டுவருகின்றனர். தமிழ் வைத்து சமயம் வளர்த்தோம்னு அவுங்க எங்கயும் சொல்லல. தமிழை வைத்து சமயம் வளர்த்தோம்னு சொல்ற பார்ப்ஸ் கூட்டம்தான் இன்னிக்கு தமிழை கோயிலுக்குள் வரக்கூடாதுன்னு சொல்றாங்க. இதக் கேட்டா உங்களுக்கு ஏன் ஒம்போது ஓட்டையிலையும் பொத்துக்கிட்டு வடியுது.

 5. Paarvai

  @ம.ம :
  உண்டியல் வருமானம் அரசாங்கத்துக்கு போக ஆரம்பிச்சது இவனுங்களுக்கு பொறுக்கலை. இது நல்ல காமெடி. அரசாங்கத்திலுள்ள ஊழல் பெருச்சாளிகளுக்கே போகிறது. எத்தனையோ கோயில்கள் (அரசாங்கத்தின் கைகளிலுள்ள) தகுந்த பராமரிப்பின்றி நாறிக்கிடக்கின்றது. ஏன் அதையெல்லாம் கேட்கவில்லை இந்த நாத்திக/பகுத்தறிவுக் கும்பல்? யாருக்கு வயித்தெரிச்சல்? உங்களால் பிற மதங்களை இவ்வாறு தட்டிக் கேட்கமுடியாது. அப்படி செய்தால் உங்களோட ஓட்டுப் பொறுக்கித்தனம் தெரிந்துவிடுமே…கோயிலில் போய் பாடினால் தமிழ் வளர்ந்துவிடுமா? இது சரியான கேலிக்கூத்து. உங்களுக்கு வேண்டப்பட்ட தொலைக் காட்சிகளில் முதலில் ஒழுங்கான தமிழை உச்சரிக்க சொல்லுங்கள். இன்று ஊடகம் தான் உலகம் முழுவதும் செல்கிறது. அதனை ஒழுங்கு செய்தாலே தமிழ் வளரும்.

 6. குமரன்

  கலைஞர் கருணாநிதி போன்ற இன்றைய நாத்திகர்கள் அனைவரும் இந்து மதத்தின் (சனாதன தர்மத்தின்) அங்கங்களே. அவர்கள் யாரும் மதத்தை விட்டு வெளியேறிவிடவில்லை, ஈ.வெ.ரா. அண்ணா, வீரமணி உட்பட. வெளியேற்றவும் படவில்லை. எனவே அவர்கள் உள்ளிருந்த்து கொண்டே “சீர்திருத்தம் செய்கிறார்கள்” அல்லது “உள்குத்து குத்துகிறார்கள்” (பார்வையைப் பொறுத்து)

  சனாதன தர்மம் மட்டும்தான் நம்பாதவர்களைக் கொல்லச் சொல்லாத ஒரே மதம். (இஸ்லாம் நம்பாதவர்களைக் கொல் என்கிறது. கிறித்துவம் இப்போதுதான் கொஞ்ச‌ம் மாறியிருக்கிறது.)

  சிதம்பரம் கோவிலில் வரும் உண்டியல் வருமானத்தையும், அதன் பெருமளவிலான சொத்துக்களையும் கொள்ளையடிக்கவே அரசியல்வாதிகள் அக் கோவிலை அரசின்வசம் கொண்டுவந்திருக்கிறார்கள். அதற்கு அப்பாவி ஆறுமுகசாமி பகடையாகிவிட்டார். ஆடு நனைகிறதே என்று அரசியல்வாதி ஓநாய்கள் கண்ணீர் விட்டு இப்போது கோவிலை அரசு எடுத்தவுடன் அமைதியாகி விட்டார்கள். ஈழத்தைப் போலவே சிதம்பரத்திலும், சேதுசமுத்திரத்திலும் இன்னபிற இடங்களிலும், தமிழ்ப்பற்று தமிழ் இனப்பற்று எல்லாம், அரசியல்வாதிகளின் தத்தம் தனிப்பட்ட இலாபங்களுக்கான போர்வை மட்டுமே. “தக்க சமயத்தில் தமிழ்ப் பற்று கை கழுவப்படும்” என்பது மட்டுமே உண்மை.

 7. குமரன்

  மனிதம் மனிதாபிமானம் பேசும் அரசியல்வாதிகளெல்லாம், ஈழத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்ததற்கு என்ன செய்து விட்டார்கள்? தமிழகச் சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. நீதிமன்றத்தில் வழக்குத்தொடர அ.தி.மு.க கொண்டுவந்த தீர்மானம் வெறும் “லோக்கல்” அரசியலாக்கப்பட்டது. ஆனால் ஆறுமுகசாமி விஷயம் பன்னாட்டு விஷயம் போல அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது.

  இந்தியா ஒரு மத சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் போப், சவுதி மன்னர், இஸ்லாமிய ஒருங்கிணைப்பு நாடுகளின் அமைப்பு (OIC) போன்றவர்கள் முதலில் எல்லா இஸ்லாமிய, கிறித்துவ நாடுகளையும் மத சார்பற்ற நாடுகளாக்கட்டும். தத்தம் நாடுகளில் பிற மதத்தவர் வழிபாட்டு உரிமையை நிலை நாட்டட்டும்.

 8. SureshKumar

  Hello Kumaran,

  Well said… I would like to share a Indian secularist dictionary i had read with you some time back… We Hindus must really do a selfstudy…(especially our brothers like Mandaveli Mannaru – who supports the so called aetheist)

  Sikhs getting slaughered in thousands = A MISTAKE.
  Hindus getting killed in Kashmir ( nearly 1Lakh killed)= Political problem.
  Muslims getting killed by a few hundred in riots = Holocaust.
  Poor protestors getting shot in WB under Left Govt = Misunderstanding.
  Banning Parzania in Gujarat = Communal.
  Banning Da Vinci Code and Jo Bole So Nihaal = Secular.
  Kargil Attack = Government failure.
  Chinese invasion in 1962 = Unfortunate betrayal.
  Reservations in every school and college on caste lines = Secular.
  Reservations in Minority institutions = Communal.
  Fake encounters in Gujarat [Sohrabuddin] = BJP Communalism.
  Fake encounters under Cong-NCP in Maharashtra [Khwaja Younus] = Police atrocity.
  Talking about Hindus and Hinduism appeasment = Communal.
  Talking about Muslims and Islam = Secular.
  BJP freeing 3 terrorists to save 100 Indian hostages = Shameful
  Congress freeing 4 militants to save just a life of one daughter of I Home minister in Kashmir [Rubina Sayed] = Natural Political dilemma.
  Attack on Parliament = BJP ineptitude.
  Not hanging Afzal Guru the mastermind despite Supreme Court orders = Humanity and Political dilemma.
  BJP questioning Islam = Communal.
  Congress questioning Lord Ramas existance = Clerical Error

 9. குமரன்

  உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
  வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
  தெள்ளத் தெளிந்தார்க்கு சீவ‌ன் சிவ‌லிங்க‌ம்
  க‌ள்ளப் புல‌ன் ஐந்தும் காளா ம‌ணிவிள‌க்கே!

  என்றார் திருமூல‌ர்.

  மந்தைவெளி மன்னாரு says: “இதக் கேட்டா உங்களுக்கு ஏன் ஒம்போது ஓட்டையிலையும் பொத்துக்கிட்டு வடியுது.”

  அட‌டா என்ன‌ இனிமையான‌ த‌மிழ் !

  திருமூலர் முதலானோர் வளர்த்த தமிழ்
  தெருமலம் போல் போனது ஏன்?

  குறள் நெறியின் அவைய‌டக்கம் இவ‌ர்
  முறையில் காணாத‌து ஏன்?

  ஈ.வே.ரா வ‌குத்த‌ நெறியில் அவைய‌ட‌க்கம்
  இன்சொல் இன்ன‌பிற‌ ந‌ன்னெறிகள்
  நாளெல்லாம் தேடினாலும் ந‌ம‌க்க‌ங்கே தென்படா.
  சீர்திருத்த‌ம் செய்ய‌வென்றே
  அவைய‌ட‌க்க‌ப் பண்பையெல்லாம்
  அவர் “அடக்கம்” செய்துவிட்டார்.

  த‌மிழ், த‌மிழ‌ன் என்று
  நாளெல்லாம் முழ‌ங்குவோர்க‌ள்
  ந‌ம் நண்பர்
  மந்தைவெளி மன்னாரு போலே
  நிந்தை செய்யும் ச‌ந்தைத் த‌மிழ்பேசி
  எந்தையும் தாயும் ம‌கிழ்ந்து குலாவிய‌
  தமிழுக்கே உலை வைக்கும்
  விந்தை பாரீர்

 10. குமரன்

  சுரேஷ்குமார் அவர்களே

  தாங்கள் சுட்டியிருப்பது மலிவான மத, இன, சாதி அரசியலின் இரட்டை முகம்.
  இதைவிட நேரடியாக ஆனால் என் சிறிய வட்டத்தில் நான் சுட்டும் நிலை பாரீர்.

  தமிழகத்தில் வட்டாரத்துக்கு ஒன்றாக நான்கு ஆதிக்கச் சாதிகள் உள்ளன. எந்தக் கட்சியானாலும் இந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரைத்தான் அந்தந்தத் தொகுதிகளில் தேர்தலில் நிற்க வைப்பார்கள். ஆக இந்த நான்கு ஆதிக்கச் சாதியினரிடம்தான் அரசியல் பொருளாதார அதிகாரம் அந்தந்த வட்டாரங்களில் செல்லுபடியாகிறது. இந்த ஆதிக்கச் சாதிகள் அனைத்துமே பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ளன. இவர்களுக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும்தான் நில, அரசியல், பொருளாதார‌ ரீதியான வர்க்கப் போராட்டம் ஆங்காங்கே நடக்கிறது.

  ஆனால் எதற்கெடுத்தாலும் குறிப்பிட்ட ஆத்திகச் சாதியைச் சாடுவதிலேயே அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறார்கள். ஏனெனில் ஆத்திகச் சாதியின் ஓட்டுவங்கி மிகக் குறைவு. ஆதிக்கச் சாதிகளின் ஓட்டுவங்கி அதிகம்.

  மேற்கூறியவற்றின் தொடர் நிகழ்வே சிதம்பரம் நிகழ்வுகளும், இது போன்ற கட்டுரைகளும்.

 11. Shankaran

  A few months ago, I with my better half went to the temple (at that time the T.Nadu Govt had taken over the temple to its custody.) There I found that this people have not yet changed from their attitude. I found special treatment was given to some people who gave money to that Theethsathergal. After pooja was over they did not even bring Soodan Plate before us. There I found difference being shown between haves and have nots.

 12. Raman

  சிதம்பரம் கோவிலில் வரும் உண்டியல் வருமானத்தையும், அதன் பெருமளவிலான சொத்துக்களையும் கொள்ளையடிக்கவே அரசியல்வாதிகள் எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *