BREAKING NEWS
Search

சிங்கம் – திரை விமர்சனம்

சிங்கம் – திரை விமர்சனம்


டிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், விவேக், நாசர்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத

ஒளிப்பதிவு: ப்ரியன்

எடிட்டர்: வி டி விஜயன்

இயக்கம்: ஹரி

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

மக்கள் தொடர்பு: நிகில்

ரண்டரை மணி நேரம் படம் தாக்குப் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்… எந்த அளவுக்கும் அபத்தமாக கற்பனையை அள்ளிவிடலாம். சோப்ளாங்கி ஹீரோவாக இருந்தாலும், அவர் நினைத்தால் வானத்தை வில்லாக்கலாம், ஜீப்புகளை நடுவானில் பறக்க விடலாம், வில்லன்களை அடிக்குமுன்பே ஆகாயத்தில் மிதக்க வைக்கலாம்… இதுதான் கமர்ஷியல் ஃபார்முலா!’ என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா நிலைமை.

அந்த பார்முலாவின்படி, நெல்லை – தூத்துக்குடி பகுதிகளை ஷூட்டிங்குக்காக மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் ஹரி உருவாக்கியுள்ள மசாலா அபத்தம் சிங்கம். இந்த சிங்கமும் புதிதல்ல.. சாமியில் விக்ரம் போட்ட அதே காக்கி யூனிபார்மை அடித்துத் துவைத்து மாட்டிக் கொண்டு வந்துள்ளது. விட்டால் ஸ்க்ரீனிலிருந்து நேராக இறங்கிவந்து பார்ப்பவர்களைக் கடித்துவிடுமோ என்று அச்சம் கொள்ள வைக்கும் அளவு அபாயமான சிங்கம் இது!

மகா நல்ல போலீஸ்… மகா கெட்ட வில்லன்… இருவரும் மோதி, ஹீரோ ஜெயிக்க வேண்டும். இதுதான் ஹரியின் வழக்கமான ஒன்லைன்.

நெல்லை மாவட்டத்தின் நல்லூர் கிராமத்தில் அப்பாவின் பெட்டிக் கடை பிஸினஸை தொடர ஆசைப்பட்டு, பின்னர் அவரது விருப்பத்துக்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகிறார் துரை சிங்கம் (சூர்யா). முடிந்த வரை கிராமத்து வழக்குகளை சாமி விக்ரம் ஸ்டைலில் தீர்த்து வைக்கிறார். அக்மார்க் நேர்மையாளர். அவர் மேல் ஊரே உயிராய் இருக்கிறது.

ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சென்னை தாதாவான பிரகாஷ்ராஜ், நல்லூர் ஸ்டேஷனில் கையெழுத்துப்போட வர வேண்டிய சூழல். தனக்கு பதில் டூப்ளிகேட் ஒருவரை அவர் அனுப்பி வைக்க, நேர்மையான சிங்கம் அதைக் கண்டுபிடித்து, பிரகாஷ்ராஜையே நேரில் வரவழைக்க, மோதல் ஆரம்பிக்கிறது.

சிங்கத்தை சென்னைக்கு வரவழைத்து பழி வாங்க நினைக்கும் பிரகாஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது இருவருக்குமான போலீஸ்- திருடன் துரத்தல்.

இந்த துரத்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்று குறைந்தது 500 படங்களிலாவது பார்த்திருப்பீர்கள்.

துரைசிங்கம் என்ற சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சூர்யா.. ஜீப்பின் கூரையை பிய்த்துக் கொண்டு, கதவுகளை உடைத்துக் கொண்டு அறிமுகமாகிறார். பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார் பேசுகிறார்… பேசிக் கொண்டே இருக்கிறார். காது கிழிகிறது. பாக்குறியாடா…. வர்றியாடா… தூக்குறண்டா… போன்ற வார்த்தைகளை அவர் எத்தனை முறை பேசுகிறார் என்று ஒரு மினி போட்டியே வைக்கலாம். ஒரேயொரு வரியாக இருந்தாலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிற்க வேண்டும்… அதுதான் பஞ்ச் டயலாக்.

சிங்கத்தை காட்ல பாத்திருக்கலாம்…

பசிக்கு திருடினா மன்னிச்சிடலாம்….

ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா… இதெல்லாம் பஞ்ச் டயலாக் அல்ல… பஞ்சர் டயலாக்ஸ்!

ஆக்ஷன் காட்சிகள் சகிக்கவில்லை. ‘ஏன்யா உங்களுக்கு இவ்வளவு கொலை வெறி’ என்றுதான் கேட்க வைக்கின்றன. இவர் தொட்டாலே சுமோக்கள் பறக்கின்றன. குறைந்தது 20 வில்லன்கள் பறந்தடித்துக்கொண்டு விழுகிறார்கள். அடடா… இந்த வீராதி வீர சிங்கங்களை நியாயமாக சீன எல்லைக்கல்லவா அனுப்ப வேண்டும்!

என்னதான் ஹீரோ என்றாலும், படத்தில் அவர் ரோல் சாதாரண இன்ஸ்பெக்டர்… ‘சாமி’ கிடையாது. இவர் தனது மேலதிகாரியான துணைக் கமிஷனரையே மடக்குவாராம். நிஜத்தில் போய் பாருங்கள்… ஏசிபியைக் கண்டால் இன்ஸ்பெக்டர் என்னவெல்லாம் செய்வார் என்பது தெரியும்!

ஹரி போன்றவர்களிடமிருந்து ரொம்ப நேர்மையான படைப்பை எதிர்ப்பார்க்கவில்லை.. அட குறைந்தபட்ச நம்பகத்தனமையோடாவது காட்சிகள் அமைக்க வேண்டாமா?

அமர்க்களமாக அறிமுகமாகும் பிரகாஷ்ராஜை வெறும் உதார் பார்ட்டியாகவே காட்டியிருக்கிறார்கள். அவரிடமும் புதுசாக ஒன்றும் இல்லை என்று தெரிகிறது. அல்லது இந்தக் கதைக்கு இதுவே அதிகம் என்று அவர் நினைத்துவிட்டாரோ!

அனுஷ்காதான் படத்தின் ஒரே ப்ளஸ். ஜில்லென்று வருகிறார்… அட, நிறைய காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.

என்ன.. இவருக்கும் ஹீரோவுக்கும் உயரப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்திருக்கும் என்பது தெரிகிறது. அரையடி ஸ்டூலோடு ஆட ஹீரோ சிரமப்பட, இவர் வெளுத்து வாங்குகிறார். காதல் காட்சிகளில் கூட இருவரும் சற்று எட்டவே நின்று உயரத்தை மேட்ச் பண்ணுவது விவேக் காமெடியை விட பெரிய காமெடி.

நாசர், விஜயகுமார், மனோரமா, நிழல்கள் ரவி என செட் ப்ராபர்டிகள் இந்தப் படத்திலும் உண்டு.

தாமிரபரணி பாயும் நெல்லையை விட கூவம் மணக்கிற சென்னை கேவலமாக இருக்கிறதென்றால், நெல்லையிலேயே இருந்ததுத் தொலைய வேண்டியதுதானே… வாழவைக்கிற ஊரை விட வாழச் சிறந்த ஊர் எதுவுமில்லை என்பார்கள். அது வசனமெழுதிய ஹரிக்கு நிச்சயம் ஒருநாள் புரியும்!

தொழில் நுட்பக் கலைஞர்களில் முதலிடம் ஒளிப்பதிவாளர் ப்ரியனுக்குத்தான். ஹரியின் ‘டேஸ்ட்’ புரிந்து ரெடிமேடாக காட்சிகளைத் தந்திருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சகிக்கவில்லை.

சில காட்சிகள் சம்பந்தமே இல்லாமல் எகிறுகின்றன. எடிட்டர் வி டி விஜயன் லீவிலிருந்திருப்பார் போலிருக்கிறது!

தனது முந்தைய 9 படங்களையும் திருப்பிப் போட்டு ஹரி கிண்டியுள்ள அதே திருநெல்வேலி அல்வா இந்தப் படம். இனிப்புக்கு பதில் வெறும் மிளகாய்த்தூளைக் கொட்டி வைத்திருக்கிறார். இரண்டரை மணிநேரம், உப்புப் பெறாத விஷயத்துக்காக அடித்துக் கொள்ளும் ரத்த வெறிபிடித்த திரைக்கதையை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறாரோ…

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் பலரும் சுறாவுக்கு இது பரவாயில்லை என்கிறார்கள். சுறாவாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் மனிதர்களை கடித்து வைப்பது சர்வ நிச்சயம் என்ற உண்மை புரிந்தே படம் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. சுறா, சிங்கம் மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, பார்ப்பவரையும் படுத்தும் நோய்கள் மாதிரிதான். அறுவை செய்தாவது அகற்ற வேண்டியது அவசியம்!

-வினோ

என்வழி
48 thoughts on “சிங்கம் – திரை விமர்சனம்

 1. BABU

  Thank you
  you have saved people life if they would have watched that movie they had dead

 2. பஹ்ரைன் பாபா

  எல்லாம் ஓகே பாஸ்.. ஹரி மேல உள்ள கோபத்த எங்க ஊரு மேல காட்டாதீங்க.. பாஸ்.. நிஜமாவே.. திருநெல்வேலி நல்ல ஊர்தான்.. என்னையும் வாழ வச்ச ஊர் சென்னைதான்.. அதனால ஒன்னும் சொல்றதுக்கில்ல..
  விமர்சனம் வழக்கம் போல நன்றாய் உள்ளது..

 3. கணேசன்.நா

  நேற்றைய தலைமுறை ரசிகர்கள் வில்லன் நடிகர்களின் நடிப்பை திரையில் பார்த்தால் பயப்படுவர். (நம்பியார், அசோகன், சின்னப்ப…………..)

  ஆனால், இன்றைய தலைமுறை ரசிகர்களோ ஹீரோ நடிகர்களை, ஏன் விளம்பரத்தை பார்த்தால் கூட, இவன் படமா என்று அலறி அடித்து ஓடுகின்றனர். ((ச்)சு(றா), (அ)சிங்கம், சுள்ளான், சொம்பு……………………………………………………………………………….)

 4. madhumidha

  huh

  sirippa irukku… ur review

  unga thalaivarum thaan mokkai commercial movies kodutthaar… makkal rasikka villaiya?

  SURYA ACTING is TOO good…

  rajniyai thavira ella actors-m ungalukku WASTE… idhe ninappula padam paardha appuram enga padam parkka…

  neenga konjam first think pannunga… en ippadi yosikkureenga-nu ungaliye kelunga… kandippa pathil kidaikkum

  kidaicha mail pannunga

  madhumidha1@yahoo.com

  natbudan madhumidha

  i am surya & simbu fan 🙂

 5. Sam

  Movie was not that bad as your comments. It fulfilled all the basic expectation of the viewers.

  Hope you should learn to comment in the right way Mr. Vino.

 6. shafi

  . எடிட்டர் ஆண்டனி லீவிலிருந்திருப்பார் போலிருக்கிறது!.////// எடிட்டிங் வி.டி.விஜயன்
  __________
  Yea… corrected. Thanks
  Vino

 7. Robo Venkatesh

  i m hardcore rajini fan. Honestly speaking i like this movie went very fast looking forward to watch 2nd time. i like surya after watching this movie he proves he is the next mass better than vijay.

 8. Rasigan

  ஆஹா அருமை….. உங்கள் நேர்மை….. ..
  ***** ரஜினி மட்டும் என்ன பண்ணறாராம்? எல்லா படத்திலையும் இத தானே பண்ணுறார்.

 9. goma

  சூர்யாவின் கடுப்பேத்தும் டான்ஸ் மூவ்மெண்ட்ட்ஸ் பற்றி நாலு வரி எழுதியிருக்கலாம்…
  கொஞ்சம் அவரது டான்ஸ் பாணி மாறினால் நல்லது……,

 10. Malar

  //i am surya & simbu fan :)//

  அம்மா மதுமிதா… ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி இந்த ரெண்டு நாயும் பேசிக்கிட்டேதான் இருக்குதுங்க எல்லா படங்களிலும். அதுங்கள சகிச்சுக்கிறது உங்க தல எழுத்து. எல்லாருக்கும் அது பிடிச்சிருக்கணும்னு இல்லியே.

  அப்புறம் லூசுத்தனமா.. கண்ட கண்ட கபோதிங்களையெல்லாம் என் தலைவனோட ஒப்பிடாதே. அவர் இமயமலை. இவங்க கூவம் ஓரமா குவிச்சு வச்சிருக்கிற நாத்தம் புடிச்ச மண்திட்டு. இதுக்குமேல ஏதும் சொல்ல வச்சிடாதே.

 11. devraj

  hi I watched this movie today , ity is a racy entertainer better than paiya, vettaikaran, sura etc….I agree it is a old masala, but the mixture is right , with good screenplay which makes the movie watch-able..

 12. சக்தி, குனியமுத்தூர்

  நண்பர்களே-
  உங்கள் கருத்தே புரியவில்லை.

  சிங்கம் பழைய கதை,
  காட்சிகளில் புதுசா ஒண்ணுமில்லை.
  பஞ்ச் டயலாக் படு மொக்கை.
  சூர்யா-அனுஷ்கா ஜோடி பொருந்தலை.
  ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்
  சண்டைக் காட்சிகள் செம கடுப்பு.
  சோப்ளாங்கி வில்லன்
  பாட்டு சுமார்
  எடிட்டிங் சரியில்ல…
  -இவ்வளவு குறைகள் இருக்குன்னு எல்லாரும் சொல்றீங்க. அப்புறம் எப்படி படம் ஓகே, பார்க்கலாம், விறுவிறுப்பா இருக்கு, ஜெயிச்சுடுச்சின்னு இங்க கருத்து சொல்றீங்களோ போங்க.

  சூர்யா தனிப்பட்ட முறையிலும் மிக மோசமான நச்சு நபர். ஆனால் சினிமாவில் திறமையை வளர்த்துக் கொண்டு நடிகனானவன். ஆனால் இந்த படம் மூலம் மாஸ் ஹீரோ, அரசியல் கருத்து சொல்லும் ஆசை வந்திருக்கிற மாதிரி தெரியுது. இவனோட அப்பங்காரனும் இன்னொரு எஸ்ஏசிதான்.

  சொல்லப் போனா இவனுக்கு விஜய்யே மேல். சிங்கம் ஜெயிப்பது சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் நல்லதல்ல!

 13. michael

  After a long time a good timepass and entertaining movie.Surya has done a good job, so is prakashraj and heroine.This movie is like pokkiri, sammy, …. type of masala movies.The director has dished all in apt mixtures to keep it entertaining.

 14. kamesh

  Decent time pass movie. Movie is fast moving that is the reason for it to be good.
  My humble dont compare all movies with THALIVERs movie, Iagree most are pukka commercial movies, but to compare these junior heros with our only superstar cant be encouraged.

 15. r.v.saravananr

  இரண்டரை மணிநேரம், உப்புப் பெறாத விஷயத்துக்காக அடித்துக் கொள்ளும் ரத்த வெறிபிடித்த திரைக்கதையை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறாரோ…

  ஹா..ஹா…

  நல்ல விமர்சனம்

 16. karthik

  சிவாஜி படைத்துள்ள மாதிரி லாஜிக் உள்ள சண்டை காட்சி, கதை வேணுமுன்னு சொல்லறிங்கள?

 17. Arul

  To the editor of this website,
  I am a die hard fan of Thalaivar since my childhood. U ppl are praising my thalaivar. I really appreciate that. But at the same time dont make others to spoil our thalaivars name unnecessarily. Plz dont comment any wrong information abt any other actors. Everyone is doing hardwork. Plz follow thalaivars policy.

 18. Suresh கிருஷ்ணா

  //To the editor of this website,
  I am a die hard fan of Thalaivar since my childhood. U ppl are praising my thalaivar. I really appreciate that. But at the same time dont make others to spoil our thalaivars name unnecessarily. Plz dont comment any wrong information abt any other actors. Everyone is doing hardwork. Plz follow thalaivars policy.//

  -ரஜினியின் ரசிகன் என்பதற்காக மற்றவர்களைக் குறை சொல்லாமல் மழுப்பி மழுப்பி பேச வேண்டும் என்கிறீர்களா?
  இந்த சும்பனையெல்லாம் பொறுத்துக் கொள்ளுமாறு ரஜினி என்றைக்கு அறிவுரை சொன்னார்? சூர்யாவை விமர்சித்தால், ரஜினியிடம் ஏன் போகிறீர்கள்?

 19. மலர்வண்ணன்

  படமா இது? இந்த நாய் தன்னை கண்ணாடில பாத்துக்காதா. இவனெல்லாம் போலீசு. அதை வேற நாம காசு கொடுத்து பாக்கவேண்டிய தலையெழுத்து. சோம்பேறி, சோப்ளாங்கியெல்லாம் டாடா சுமோவ தூக்கியடிக்கிறான். அதை ஒரு வேலையத்த வெட்டிக் கூட்டம் ஆ-ன்னு பாத்துக்கிடிருக்குது.

 20. valluvan

  Vino, Please do a revisit of your review and feedback of this Movie(and Sura) before you publish the review of Endhiran when it is released. It is always safe.

 21. Robo Venkatesh

  Miss Madhumitha u have to grow up before commenting about rajini. dont see the skin see the simplicity and performance. simbu and surya mokkai ladies and flop stars. Think before u post comments against rajini. Simbu use to copy rajini style to survive cine industry.

 22. Ajay

  சிங்கமோ சுறாவோ… இரண்டுமே மனிதனுக்கு ஒவ்வாதது.

  சிங்கம் காட்டை விட்டு வந்தா மனுசனுக்கும் ஆபத்து. மனுசங்களால அதுக்கும் ஆபத்து.

  சுறா கடலைவிட்டு வந்த அடுத்த நிமிசம் மூச்சுத் திணறி செத்தே போகும்… மனுசன் மாட்டுனா கடிச்சும் வைக்கும்.

  நிஜத்துல மட்டுமல்ல, படத்துலயும் இது பொருந்தும். 🙂

 23. mukesh

  madhumidha says:
  //unga thalaivarum thaan mokkai commercial movies kodutthaar… makkal rasikka villaiya?//

  மக்கள் ரசிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கும் போதே அவர் படம் மக்களுக்கு பிடிக்கிறது என்பது தெளிவாகிறது. நன்றி.

  இந்த படத்தை விமர்சனம் செய்தால் உடனே ஏன்யா ரஜினி ஞாபகம் வருகிறது. வள்ளுவனுக்கு எந்திரன் ஜுரம் நிறைய இருக்குமோ?

  ரஜினி பாணி என்பது வேறு, அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பது அவர் இன்றைக்கு இருக்கும் உயரமே சாட்சி.

  ஆகவே ஊர்க்குருவிகள் உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது. புலிக்கும் பூனைக்கும் கோடுகள் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல என்பதை இங்கிருக்கும் ஒரு சிலர் யானயை தடவிப் பார்த்து அடையாளம் சொன்ன குருடர்கள் புரிந்து கொள்ளட்டும்.

  படம் பிடித்த்திருந்தால் பிடிக்கிறது என்று தெளிவாக சொன்னவர்களும் இங்கு இருக்கிறார்கள்

 24. shan

  வினோ
  நல்ல தரமான விமர்சனம்.. பாராட்டுகள்..
  சூர்யாவிடமிருந்து இது மாதிரி மொக்கை படங்களை எதிர் பார்க்கவில்லை..
  என் வாழ்வின் நான் வீணாக்கிய நேரங்களில் அதிகமான் நேரம் இந்த படத்தை நான் பார்த்ததுதான்..
  என் நண்பர்களின் பேச்சை கேட்காமல் போனதால் நான் பட்ட கஷ்டம் ..அப்பப்பா..
  அவர்கள் படத்திற்கு போகும்போதே சொன்னார்கள்.. ஹரி படம் என்றாலே ரெண்டு ஜாதி, நெல்லை , அரிவாள், பறக்கும் ஜீப், ஒன்னரை பாகம் வசனம்.. என்று.. எந்த ஒரு விதியையும் மாற்றவில்லை..
  இது ஹரியின் விதி,,.அதை பார்க்க போனது என் தலைவிதி..

 25. Mariappan

  Ennatha சொல்ல நம் மக்களுக்கு தலைவிதி. சன் pictures இம்சை தாங்கல சாமி.

 26. kiri

  நான் நினைக்கிறான் எடிட்டர் Sivaji படம் பர்க்கவில்லையாக்கும்..!!!
  அதுல மட்டும் என்னவாம் ரஜினி 200 பேர பறந்து பறந்து அதிபரே அது மட்டும் என்ன Science Fiction படமா????

 27. barathy

  நானும் ரஜினி ரசிகன் தான், நேர்மை முக்கியம், சூர்யா கமல் ரசிகன் அதால உங்கட விமர்சனம் இது *******************
  இதே மாதிரி விமர்சனம் எதிர்பார்கிறோம், எல்லா படங்களுக்கும் (சிவாஜி எந்திரன்)
  உங்கள் தளம் பிரபலம் அடைய நடுநிலை அவசியம். மீள் பார்வை அவசியம்,

 28. ZAKIR HUSSAIN

  இப்ப உள்ள ட்ரன்ட் மனிதர்களை கடிக்கும் வஸ்த்துக்கள் பேர்தான் “தலைப்பு” [சுறா / சிங்கம்] இனிமேல் சொறிநாய் , கொசு என தமிழை காப்பாற்றும் தயாரிப்பாளர்கள் தலைப்பு வைக்களாம்

 29. srini

  but vino film is blockbuster of this year………..this is best of all masala movie in recent release………..iam die hard thalaivar i liked surya performance n movie also racy….sure surya is in top slot compare to sura and asal hero…..he is pushing them behind.

 30. kumar

  படம் நல்ல தான் இருக்கு , நீங்க வேணும்னே மட்டம் தடிருகீன்க, ரஜினி சூப்பர் ஸ்டார் தான் , அதுக்காக மத்த அக்டேர்ஸ்லாம் வேஸ்ட் கிடையாது , சூர்யா நல்ல அக்டோர் படம் ஹிட் ஆகுது ஒத்துகோங்க .

 31. gokul

  sir overa paesanthenga…..im also great fan of superstar…singam film is good entertainer…..

 32. vasu

  vino,

  I guess u got this wrong..the film was not as bad as mentioned in your review

  True, the film had nothing special..it was regular commercial masala tamil potboiler..

  what made the movie enjoyable was surya and the fast paced nature of the film..

  This film is another feather in the cap for surya..eagarly awaiting ravanan..

  After thalaivar..i like surya and vikram the most..

 33. udhay

  ரஜினி எப்போதும் யதார்த்தமான படம் தான் செய்வார் போல … நடந்தால் செருப்பில் இருந்து நெருப்பு பறக்கும் . சந்திரமுகியில் முதல் சண்டையில் அவர் செய்ததும் இதே காமெடி தானே ..? “சிங்கரமா ஊரு , சென்னையின்னு பேரு ஊற சுத்தி ஓடுது பார் கூவம் ஆறு “, இதை திரையில் வாயசைத்து பாடியது யார் ஹரி யா. ?

  உண்மையில் இந்த படம் அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை . சூர்யா வின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது . போலீஸ் படத்தில் வேறு என்னத்தை காட்ட முடியும் என்று எனக்கு தோன்ற வில்லை. படத்தின் இரண்டாம் பாதி ரசிக்கும் படியாகவே இருக்கிறது.

 34. Manoharan

  நேற்றுதான் சிங்கம் படம் பார்த்தேன். சமீபத்தில் வந்த மாஸ் மசாலா படங்களிலேயே இதுதான் பெஸ்ட். முதல் 45 நிமிடங்கள் சுமாராகத்தான் நகர்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகப் படுத்துவது ஏதோ பள்ளியில் அட்டென்டன்ஸ் எடுப்பது போல் உள்ளது. இதற்க்கு நடுவே ஒரு பில்டப் பாட்டு மற்றும் ஒரு பைட், ஒரு டூயட். என்னடா வசமா மாட்டிக்கிட்டோமே என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு அப்புறம் படம் டாப் கியரில் செல்கிறது. பழகிப் போன கதை, யூகிக்க‌ முடியும் காட்சிகள் என சில மைனஸ் இருந்தாலும் அதை எல்லாம் நினைக்கவே முடியாதபடி படம் செம பாஸ்ட்.
  மசாலா படம்தானே என்று நினைக்காமல் சூர்யா தனித்தன்மையுடன் பின்னி எடுத்துவிட்டார். அவரின் முக பாவனைகளும், உடல் மொழிகளும் அசத்தல். சிக்ஸ்பேக் உடம்புடன் காட்டு ராஜா போல் வலம் வருகிறார் சூர்யா. அதே போல் படத்தில் வரும் பில்டப் வசனங்களும் காட்சிகளும் துரைசிங்கம் கேரக்டருக்காகத்தான் வருகிறதே தவிர சூர்யா என்கிற நடிகருக்காக வருவது போல் தெரியவில்லை. இது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். அனுஷ்கா ரசிக்கும்படி இருக்கிறார்.விவேக்கின் காமெடி சில இடங்களில் சிரிப்பால் வயிறு வலிப்பு. பல இடங்களில் சலிப்பு. ஆக்ஷன் காட்சிகள் எல்லமே நன்றாக இருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம். மொத்தத்தில் இது நிச்சயம் ஒரு no – nonsense mass masala entertainer பிரகாஷ்ராஜ் நன்றாக பேசுகிறார், சவால் விடுகிறார்,சவால் விட்டுக் கொண்டே இருக்கிறார். அதேபோல் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் சட‌க் சடக்கென்று சூர்யாவிற்க்கு சப்போர்ட் பண்ணுவது எப்படியென்று தெரியவில்லை. படத்தில் சில,பல குறைகள் இருந்தாலும் சூர்யா என்கிற ஒற்றை சிங்கம் படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறது. அவருக்காக நிச்சயம் பார்க்கலாம்.

 35. கிரி

  எனக்கு படம் ரொம்ப பிடித்து இருக்கு! சும்மா விறுவிறுன்னு படம் இருக்கு.. நான் லாஜிக் எல்லாம் எதிர்பார்த்து போகல. இருந்தாலும் நீங்க சொல்கிற அளவிற்கு இல்லை. படம் நல்லாவே இருக்கு! 🙂

 36. devraj

  I entirely agree with Mano and Giri.But I cant understand why people are comparing RAJINI with others, they are definitely of different class, and do not forget THALIVER has universal MASS.

 37. barathy

  இந்த வருடம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய ஒரே படம், பையா. பையாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ஹ‌ரியின் சிங்கம். ஆம், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சிங்கத்தின் வசூல் கர்ஜனைதான் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

 38. தேவகுமாரன்

  காசக்கொடுத்துட்டு தியேட்டருக்கு வந்தா தலவலி போகனும். வரக்கூடாது. அது ரஜினியே என்றாலும் ஹீரோயிஸ்த்துலயும் நம்பகத்தண்மை இருக்கனும். காதுல பூ சுத்தக் கூடாது. நந்தால , கஜினிலயும் சூரியாவுக்கு ஹீரோயிஸம் இருந்துது. ஆனா அது கேரக்டரோட ஹீரோயிஸம். சூரியால்லாம் எக்ஸ்ட்ரீம் ஹீரோயிஸம்ன்னு எறங்கினா…தா***..எவன் பார்க்குறது?

 39. vaideki

  சூர்யா பிலிம் சூப்பர் சூப்பர் சூர்யா

 40. vasuki

  Enna tha soldrathunga……………
  yentha film ah irunthalum Heroine a vida Hero Height ah thane irukanum……… But inga ennadannu paatha Hero ve vida Heroine Height ah irukanga (Enna kodumai sir ithu………)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *