BREAKING NEWS
Search

சிஎன்என் – ஐபிஎன் சிறந்த இந்தியன் விருது -2010 .. ரஜினிக்கு வாக்களிக்க மறக்காதீங்க!

சிஎன்என் – ஐபிஎன் சிறந்த இந்தியன் விருது -2010… ரஜினிக்கு வாக்களிக்க மறக்காதீங்க!


பொழுதுபோக்குத் துறையில் இந்த ஆண்டின் சிறந்த இந்தியர் விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்திரன் – தி ரோபோ என்ற மெகா மெகா ஹிட் படம் மூலம் உலக சினிமாவின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிய இந்தியாவின் இணையில்லாத நடிகர் என்ற பெருமை காரணமாக இந்த விருதுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா, அரசியல்,விளையாட்டு, சமூக சேவை என பல துறையைச் சேர்ந்தவர்களிலிருந்து சிறந்தவர்களை, வாக்களிப்பு முறையில் தேர்வு செய்து சிறந்த இந்தியர் விருது வழங்குகிறது சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி.

இந்த ஆண்டின் சிறந்த இந்தியருக்கான விருதுக்கு பொழுதுபோக்குப் பிரிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், சல்மான்கான், இயக்குநர் ஷங்கர், ஷில்லாங் சேம்பர் காயர், இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானி ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மபூஷன் விருது பெற்ற பிரபல வழக்கறிஞர் சோலி சொரப்ஜி, எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, எச்டிஎப்சி தலைவர் தீபக் எஸ் பரேக், ஹிந்துஸ்தான் டைம்ஸின் எடிட்டோரியல் டைரக்டர் ஷோபனா பாடியா, நடிகர் மோகன்லால், பில்லியர்ட்ஸ் வீரர் கீத் சேத்தி மற்றும் நாஸ்காம் தலைவர் கிரண் கார்னிக் ஆகியோர் இந்த விருதுக்கான நடுவர் குழுவில் உள்ளனர்.

எஸ்எம்எஸ் மற்றும் இணையதளம் மூலம் வாக்களித்து இந்த ஆண்டின் சிறந்த இந்தியரைத் தேர்வு செய்யலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாக்களிக்க IENT 2 என டைப் செய்து 51818 எண்ணுக்கு அனுப்பவும். இணையம் மூலம் வாக்களிக்க: IndianOfTheYear.com.

நாளை 12.12.2010 நள்ளிரவுக்குள் ஓட்டுப் போட்டுடுங்க!

இந்த விருது குறித்த CNN – IBN விளம்பரம்:




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *