BREAKING NEWS
Search

சம்பளம் வாங்கிவிட்டாரா ரஜினி?

சம்பளம் வாங்கிவிட்டாரா ரஜினி?

ந்தக் கேள்வியை நிறைய நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்.. எந்திரன் படத்தில் உழைத்ததற்கான சம்பளத்தை முழுமையாக பெற்றுக் கொண்டார் ரஜினி. ஆனால், இப்படி ஒரு வரியில் முடிக்கிற சமாச்சாரமில்லை, ரஜினி சம்பளம் பெற்ற விஷயம்.

அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தெரிந்தாலும், அதை நாமாக சொல்லக் கூடாது.

எந்திரன் படத்தில் நடிக்கத் துவங்கியதிலிருந்து 2 ஆண்டுகள் அந்தப் படத்திலேயே மூழ்கிவிட்டார் ரஜினி என்றால் மிகையல்ல. படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியதுபோல, படம் முடிகிற வரை சம்பளமே பெறாமல் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார் ரஜினி.

படம் வெளியாகி, உலகமெங்கும் அதை ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள் என்ற செய்தி வரத் துவங்கியதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம், “எப்போது சம்பளத்தோடு தங்கள் வீட்டுக்கு வரலாம்?” என ரஜினியை தொடர்பு கொண்டனராம்.

அவர்கள் வசதிப்படி வரச்சொன்ன ரஜினி, சம்பளத் தொகையை 100 சதவீதம் காசோலையாகவே தரும்படி கேட்டுக் கொண்டாராம்.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வட்டத்தில் மிக நெருக்கமான நமது நண்பர் இப்படிக் கூறினார்:

“தன் சம்பளத்துக்கான வருமான வரித் தொகையை முழுமையாக செலுத்தியது போக மீதித் தொகையை காசோலையாக தந்துவிடுங்கள் என்று கூறிவிட்டார் ரஜினி. உடனடியாக, அவருக்குச் சேர வேண்டிய சம்பளத்தில் வருமான வரியாகச் செலுத்திய செலுத்திய தொகை ரூ 10 கோடிக்கு மேல். அதற்கான டிடிஎஸ் (Tax deducted at source) சான்றிதழையும் மீதி சம்பளத்துக்கான காசோலையையும் ரஜினிக்குக் கொடுத்தனர் கலாநிதி மாறனும் சக்ஸேனாவும்… சம்பளம் வாங்குவதில் சினிமா உலகில் இதற்கு முன் பார்த்திராத, கேட்டிராத சமாச்சாரம் இது” என்றார்.

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் தனது வருமான வரியை முறையாகச் செலுத்தி வரும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினிதான். இதற்கான சான்றிதழை தொடர்ந்து வருமான வரித்துறை ரஜினிக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது!

சரி, எந்திரன் சம்பளத் தொகை எவ்வளவு என்கிறீர்களா?

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பெருமை இப்போது ரஜினிக்கே. (இப்போதைக்கு இது போதுமல்லவா!)

-என்வழி
25 thoughts on “சம்பளம் வாங்கிவிட்டாரா ரஜினி?

 1. Sathish

  சந்தோசம் ….ஆனா எவ்ளோன்னு சொல்ல வேண்டாம் …அதை கேட்டா இங்க சில பேர் செத்தே போய்டுவானுங்க….நமக்கு ஏன் அந்த பாவம்.

 2. kicha

  //ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும்
  ஹீரோ என்ற
  பெருமை இப்போது ரஜினிக்கே .
  (இப்போதைக்கு இது போதுமல்லவா!)//

  podhum podhum. Idhuke palar vayiru erivanunga. Ini ‘evlo’nu vera therinchutta udane samuga aarvalargala maari, lecture kodupanunga.

 3. khalifa

  சம்பளம் ஒரு ரூபாய் இருந்தாலும் சரி 100 கோடி இருந்தாலும் சரி நம்மவர் எப்போதும் Mr . Clean

 4. Prasanna kumar

  Thanks for the update vino
  Kicha & Sathish I second your comments ,Namma Thalaivar sambalam evlonu therinja inge sila peru
  vayiru eringe sethey poiduvanga…………………….

 5. Swamy

  ஹலோ ரஜினி ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு ஷேர் சம்பளத்துலே?

 6. MSK

  Hello Anand, U r wrong. TDS is 30% for this huge amount.
  As per ur calculation Rajini salary TDS @ 30% = 10 Crores.
  So his Salary (With Tax) approximately 43 to 44 Crores.

 7. nk

  Mr swamy ,
  thalaivar yerkanavey vilaimadikka mudiyadha santhosattai engalukku tiraiyila koduthutaru.oct 1st dayve enga share kidaichachu teeyira vasanai varudu kilumbunga.

 8. murugan

  ஹலோ mr சுவாமி ரசிகர்களாகிய எங்கள் சம்பளம் எவ்வளவு என்றா கேட்டீர்கள் – முதலில் கீழே உள்ளவற்றிற்கு விலை மதிப்பு என்னவென்று கூறுங்கள் – பின்னர் தலைவரின் ரசிகர்களாகிய நாங்கள் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறோம் :
  எல்லை இல்லா மகிழ்ச்சி
  கிடைத்தர்க்கரிய பேரானந்தம்
  பசியில் அழும் குழந்தைக்கு கிடைத்த தாய்ப்பால்
  நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தனுக்கு கிடைத்த தெய்வ தரிசனம் (கட்டண தரிசனத்தில் அல்ல )
  இன்னும் உள்ளது பல – மேலே குறிப்பிட்டது சில
  சம்பளத்தை பணமாகத்தான் தரவேண்டும் என்பதில்லை
  பணத்தால் வாங்க முடியாத பல விஷயங்கள் இந்த உலகில் உள்ளன
  எனவே எங்கள் சம்பளப்பங்கு பற்றிய உங்கள் கேள்வியும் கவலையும் தேவையற்றது

 9. kicha

  @ swamy.

  Neenga rasigara irukara nadigar panam koduthudhan aal sethuvar pola iruku.

  Aana nanga anbal serndha kootam. Panathuku vilai poravan rajini rasigan illai.

 10. கடலூர் எழில்

  சரி சம்பளம் எல்லாம் சிதம்பர ரகசியம் தான், அதுக்கு ஒழுங்கா வரியா கட்டசொல்லுங்க. தில்லு இருந்தா உண்மையான சம்பளம் எவ்வளவுன்னு அறிவிக்க சொல்லுங்க உங்க தலைவர? பாதி ஒய்ட்டு பாதி பிளாக்கு. அப்பா சிவாஜி படத்துல வர்றதெல்லாம் சும்மா லோலாய் தானா. உங்க கறுப்புப் பணத்த யாரு கண்டுபிடிச்சி மக்கள் கிட்ட ஒப்படைப்பது ! ஊரு ஒலகத்துக்கு தான் சினிமா ! நமக்கு ஈ வாய ரசிகன் இருக்கும் வரை கவலை இல்லை என்ற நினைப்பு !
  ரொம்ப எளிமைன்னு வேற சொல்லிக்கிரானுங்க !!
  நடிகர்களை பெருமைப் படுத்துங்கள் avarg

 11. kicha

  @கடலூர் எழில

  loosappa nee?

  //“தன் சம்பளத்துக்கான வருமான
  வரித் தொகையை முழுமையாக
  செலுத்தியது போக மீதித்
  தொகையை காசோலையாக
  தந்துவிடுங்கள//

  idhuku artham theriuma? Padikamaye comment podriya?

 12. Prasanna kumar

  @ Swamy & Kadalur Ezhil Why don’t u both have Stomach burning Tablets Like Gelusil……….

 13. Raj

  jackie Chan salary is more than 65 crores, பொய் சொல்லலாம் அதுக்காண்டி முழு புசனிக்கையை……….

 14. Manoharan

  @ கடலூர் கோமாளி . அட அறிவுக் கொழுந்தே TDS னா என்னன்னு தெரியுமா உனக்கு ? It is Tax Detuction at Source. அதாவது சம்பளம் தரும்போதே அதற்க்கு உண்டான வருமான வரியை பிடித்தம் செய்து கொள்கிறார்கள். உதாரணத்துக்கு ரஜினியின் சம்பளம் 40 கோடி என்றால அதற்குரிய 30 % வரியான 12 கோடியை சன் பிக்சர்ஸ் அரசுக்கு செலுத்திவிட்டு அதன் சான்றிதழையும், மீதி பணமான 28 கோடியை காசோலையாக தருவார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீ என்ன வேலை செய்கிறாயா, தொழில் செய்கிறாயா அல்லது பிச்சை எடுக்கிறாயா ? இன்னும் ஒன்னு எளிமை என்பது வாங்கும் சம்பளத்தில் இல்லை 40 கோடி வாங்கும் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறாரே அதுதான். கொஞ்சமாவது அறிவு இருந்தால் பேசு இல்லன்னா போய் எங்காவது தெருமுனையில் நின்னு உளறிட்டு இரு. இங்கு வந்து வாந்தி எடுக்காதே. எங்களுக்கு அசிங்கமாக இருக்குது.

 15. anand

  எந்திரன் வரவு செலவு கணக்கு

  எந்திரன் செலவு

  ரஜினி 45 கோடி
  ஷங்கர் 10 கோடி
  ஏ.ஆர். ஆர் 7 கோடி
  ஐஷ்வர்யா 6 கோடி
  அனிமேஷன் & செட்ஸ் 50 கோடி
  விளம்பரம் 35 கோடி
  பிற செலவுகள் 52 கோடி
  205 கோடி

  எந்திரன் வரவு

  ஹிந்தி ரைட்ஸ் ( ஜெமினி ஃபில்ம் சர்க்யூட்) 23 கோடி
  தெலுங்கு ரைட்ஸ் ( ஸ்ரீ கிருஷ்ணா ட்ரேடர்ஸ்) 27 கோடி
  மலையாளம் + கன்னடா 14 கோடி
  தமிழ் அயல்நாட்டு உரிமை 10 கோடி
  ஹிந்தி தெலுங்கு அயல்நாட்டு உரிமை 5 கோடி
  ஆடியோ உரிமை 10 கோடி
  வீடியோ உரிமை 17 கோடி
  டிவி ரைட்ஸ் 25 கோடி
  தமிழ் – சென்னை விநியோக உரிமை ( ஜெ. அன்பழகன்) 27 கோடி
  பிற நகரங்கள் 224 கோடி
  சன் டிவி விளம்பர வருமானம் 20 கோடி
  402

  நிகர லாபம்
  197 கோடி

 16. Paul

  This comment is not related this article. When Gajini was released in Hindi with Amirkhan and collected more money, all the Tamil directors appreciated the director. Me too. Now a Tamil director, with superstar smashed all the records created by bollywood. I am not screaming we are the great and all the crap. One day this record is going to be be broken.In the mean time lets enjoy this success. Did any one from Tamil cine field appreciated Shankar or Talivar? I do not see it in any of the media news. That said how jealous this guys are which is unbelievable. Those who appreciate also keeps something in their heart and the lips speak for name shake. 🙂 Did any one appreciated whole heatedly?

 17. eppoodi

  ரொம்ப பசியாயிருக்கு இங்க ஏதாவது ஆட்டுக்கறி கிடைக்குமா?

  அட ஆமா!!!!!!!!!!!! இங்க ரெண்டு கருப்பு ஆட்டை அடிச்சு நம்மாளுங்க குழம்பு வைச்சிட்டாங்கபோல?

  அதிலும் கடலூரில பிடிச்ச எழிலென்கிற ஆட்டோட குளம்பு வாசனை மூக்கை தூக்குது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஆ…………………

  எழிலு, சுவாமி மாதிரி அப்பப்ப நம்மகிட்ட சிக்கிற கருப்பாடுகளை அடிச்சு சாப்பிடிறதால வரவர நமக்கு உடம்பு ஊதிக்கிட்டே போகிது.

 18. கடலூர் எழில்

  என்வழி பூப்பாதயா ! சிங்கப்பாதயா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *