BREAKING NEWS
Search

சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்! – நாசா

சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்! – நாசா

வாஷிங்டன்: சனி கிரகத்தின் முக்கிய நிலவான ரியாவில் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் ஏராளமாய் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு சனி கிரகத்துக்கு அனுப்பியது.

அந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது காசினி அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக் கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.

இன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 950 மைல், அதாவது 1,529 கிமீ விட்டம் அளவுக்கு தண்ணீர்ப் பரப்பு பரந்து விரிந்துள்ளதாம் ரியாவில்.

ரியாவின் மேற்பரப்பில் 3564 மைல்கள் பறந்து காசினி விண்கலம் இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.

இதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மனிதன் உயிர்வாழ மிகவும் முக்கியமான காரணிகள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தண்ணீர். இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஈர்ப்பு சக்தி. இவை அனைத்துமே ரியாவில் போதிய அளவுக்கு உள்ளது.

ரியாவின் மேற்பரப்பில் 70 சதவீதம் ஆகிஸிஜனும், 30 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் உள்ளது. பூமியில் உள்ளதைப் போல 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன் இந்த ரியாவில் உள்ளது.

பூமியில் ஆக்ஸிஜன் 21 சதவீதம் வாயு நிலையிலும், 45 சதவீதம் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலும் ஆக்ஸிஜன் உள்ளது. கார்பன் டை ஆக்ஸைடு 1.4 சதவீதம் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக நைட்ரஜன் உள்ளது.

காசினி விண்கலம் வரும் ஜனவரியில் பூமிக்கு 47 கிமீ தொலைவில் பறக்கும். அப்போது மேலும் அதிக தகவல்களை அது நாசாவுக்கு அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பூமியன் துணைக் கிரகமான நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்புகள் விண்வெளி விஞ்ஞானிகளை உற்சாகம் கொள்ள  வைத்துள்ளது.




One thought on “சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்! – நாசா

  1. prabhu

    விஞ்ஞானிகளுக்கு ஒரு சலாம் நாம வாழா விட்டாலும் நம்ம சந்ததியினர் வாழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *