BREAKING NEWS
Search

சந்திர சூரியர்கள் இருப்பது உண்மையானால் பிரபாகரன் இருப்பதும் உண்மையே! – பழ நெடுமாறன்

சந்திர சூரியர்கள் இருப்பது உண்மையானால் பிரபாகரன் இருப்பதும் உண்மையே! – பழ நெடுமாறன்

திருச்சி: சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதும் உண்மை, என்றார் பழ நெடுமாறன்.

புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.

தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவர் உயிருடன் இருப்பது மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேளிவிக்கு பதிலளிக்கையில் நெடுமாறன் பதிலளிக்கையில், “சந்திர – சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கான தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரைவில் வெளிப்படுவார். ஈழப்போரை தலைமை தாங்கி முன்னெடுத்து தமிழீழத்தை அமைப்பார்”, என்றார் உறுதியுடன்.

மேலும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எப்போது எப்படி வருவார் என்பது அவருக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமாகும் என்றும் அவர் கூறினார்.

இக் கருத்தரங்கில் பெங்களுரைச் சேர்ந்த பேராசிரியரும் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக ஏன் அறிவிக்க வேண்டும் என வாதாடி தமது கருத்துக்களை பதிவு செய்தவர்களில் ஒருவருமான டாக்டர் பால் நியூமனும், வழக்கறிஞர் பாண்டிமாதேவியும் பங்கேற்றுப் பேசினர்.

படம்: தமிழ்வின்




4 thoughts on “சந்திர சூரியர்கள் இருப்பது உண்மையானால் பிரபாகரன் இருப்பதும் உண்மையே! – பழ நெடுமாறன்

  1. kumar

    ஆஹா முதலில் சந்த்ரிரனையும் சூரியனையும் என் கும்புடுகிரிகள் என்று கேட்டார்கள்?.இன்று அதை வைத்தே விளையாட்டு காட்டுகிறார்கள்.இப்பவே கண்ணை கட்டுதே.

  2. sakthivel

    தலைவர் மீண்டு(ம்) வருவார்…. இந்திய துரோகத்திற்கும், சிங்கள ஓநாய்களின் படுகொலைகளுக்கும் சர்வதேசம் பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்.

  3. Sathish

    All,
    This is really confusing. If Nedumaran knows that prabakaran is alive, then they can release any evidance / small video. Or if Prabakaran wnats to keep this matter secret, then how Nedumaran talks like this? Someone please explain.

  4. aathirai

    பிரபாகரன் மீண்டும் வருவார்…. இந்திய துரோகத்திற்கும், சிங்கள ஓநாய்களின் படுகொலைகளுக்கும் சர்வதேசம் பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்.ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கான தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பிரபாகரன் அவர்கள் விரைவில் வெளிப்படுவார். ஈழப்போரை தலைமை தாங்கி முன்னெடுத்து தமிழீழத்தை அமைப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *