BREAKING NEWS
Search

சண்டே ஸ்பெஷல்: தளபதி… சில மறக்க முடியாத காட்சிகள்!

சண்டே ஸ்பெஷல்: தளபதி… சில மறக்க முடியாத காட்சிகள்!

ளபதி…

தலைவர் ரஜினி மட்டுமல்ல… ஒவ்வொரு ரஜினி ரசிகனும் மறக்க முடியாத படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனப்பாடம்.

dalapathi

ரஜினி என்ற மாபெரும் நடிகரின் பல பரிமாணங்களை போகிற போக்கில் காட்டிச் சென்ற படம். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறேன்… என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தேன். கணக்கிட்டுச் சொல்ல வாய்ப்பே இல்லை… அத்தனை முறை பார்த்தாகிவிட்டது. முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் மட்டும் ரூ.1000 வரை போனது!

தலைவரின் நடனத்துக்காக, நடிப்புக்காக, அசத்தல் வசனங்களுக்காக, மிரட்டலான சண்டைகளுக்காக, மனதைக் கரைத்த இசைஞானியின் இசைக்காக… கணக்கில்லாமல் பார்த்த படம்.

சென்னை மாநகரில் உள்ள அத்தனை திரையரங்கிலும் படத்தைப் பார்த்து முடித்துவிட்டு, பின்னர் புறநகர் பகுதிகளில் தலைவர் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று நாளைக்கு ஒரு தியேட்டர் என முறை வைத்துப் பார்த்த படம்.

இந்தப் படத்தில், குறிப்பிட்ட காட்சிதான் சிறந்தது… குறிப்பிட்ட பாடல்தான் சிறப்பானது என்று தனித்துக் காட்டவே முடியாது.

படம் துவங்கியதிலிருந்து ஒவ்வொரு ப்ரேமிலும், ரஜினி – மம்முட்டி – இளையராஜா – மணிரத்னம் கூட்டணி முத்திரை பதித்த படம் இது.

இந்தப் படத்தை மீண்டும் பார்க்க நேர்ந்தது. இந்த முறை 9.1 டிவிடியில்… இப்போதும் ஒரு புத்தம் புதிய படத்தைப் பார்க்கும் உணர்வுதான் எனக்குள். 9.1 டிவிடி காட்சிகளை பதிவேற்ற நேரம் ஆகும் என்பதால், இப்போதைக்கு யுடியூபில் கிடைக்கும் சில மறக்கமுடியாத காட்சிகளை சண்டே ஸ்பெஷலாகத் தருகிறேன்.

சிறப்புக் காட்சி-1

‘நீ அய்யர் வீட்டுப் பொண்ணு… பரத நாட்டியம் ஆடற பொண்ணு.. பாட்டுப் பாடற பொண்ணு… உனக்கு இதெல்லாம் பிடிக்காது!’

எந்தப் படத்திலாவது இப்படியொரு காதல் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா… அதான் சூப்பர் ஸ்டார் – மணிரத்னம் மேஜிக்.

இந்தக் காட்சியைத் தொடர்ந்து வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி, உலகின் மிகச் சிறந்த இசைக் கோர்வைகளுள் ஒன்றாகப் புகழப்படுகிறது. அது இசைஞானியின் மேஜிக்!

சிறப்புக் காட்சி-2

“போ போய் பண்ணிக்கோ… யார் வேணாம்னு சொன்னாங்க… உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு என்ன வேணும்… வெள்ளையா ஒரு தோலு….நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசணும்…

நானா உன் பின்னாடி சுத்தினேன்… நானா உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… நானா உன் தோள்ல சாய்ஞ்சி அழுதேன்… போடி…

பேசாதே… பேசனது போதும்… அழாதே… கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு… போடி” என்று ஆற்றாமையும், கோபமும், சோகமும் அழுகையும் ஒன்றாய் கலந்த குரலில் பேசிவிட்டு… “போ..டி” என்று முடிப்பார்.

அந்த ‘போடி’ என்ற ஒற்றை வார்த்தையை அவர் உச்சரிக்கும் தொனியிலேயே  தன் காதல் தோல்வியின் மொத்த சோகத்தையும்  காட்டியிருப்பார் ரஜினி. அதெல்லாம் இயக்குநர் சொல்லிக் கொடுத்து செய்யும் விஷயமல்ல…

இந்த வசனங்களை பேசிய பின் ரஜினியின் முகத்தில் தாண்டவமாடும் உணர்ச்சிகளைப் பாருங்கள்… காட்சியின் முடிவில், அந்தக் காதல் அவலத்தில் முடிந்த சோகத்தை இளையராஜா வெளிப்படுத்தியிரும் விதம் ஒரு சோகக் கவிதை…

சிறப்புக் காட்சி (கள்) -3

நன்றி என்ற வார்த்தையின் அர்த்தத்தை, நட்பின் உன்னதத்தை உணர்த்தும் காட்சிகள்…

சிறப்புக் காட்சி (கள்) -4

தான் செய்த பண உதவிக்கு நன்றி சொல்லும் பெரியவரிடம் ரஜினி, ‘வெறும் பணம்…’ என்று கூறும் ஒற்றை வார்த்தையில் எத்தனை பெரிய தத்துவம்!

‘யாருக்காவது உதவணும்னு நினைச்சா, அதை உன் கையால நீயே நேரா கொடு…’

– இது வசனமல்ல… தலைவரின் வாழ்க்கை முறை. அன்று முதல் இன்று வரை தனது சிந்தனையை, செயல்பாடுகளை ஒரே மாதிரி வைத்திருப்பவர் அவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்!

சிறப்புக் காட்சி -5

“தொட்ரா பாக்கலாம்… தொட்ரா..” என போலீஸ் உயரதிகாரியை ரஜினி எச்சரிக்கும் இந்த காட்சியில் எந்த பிரமாண்டமோ, தொழில் நுட்பமோ இல்லைதான்… ஆனால் தீப் பொறி பறக்கிறது பாருங்கள்… அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.

போனஸ் காட்சி: எந்த தமிழ் அல்லது இந்தியப் படங்களிலாவது இதற்கு நிகரான ஒரு உணர்வுப்பூர்வமான காட்சியையும், பின்னணி இசையையும் பார்த்திருக்க முடியுமா தெரியவில்லை.

ரஜினி-ஸ்ரீவித்யா-ஜெய்சங்கர் மற்றும் ஷோபனா ஆகிய நால்வரும் தோன்றும் இக்காட்சியின் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதனால்தான் மணிரத்னம் வசனத்துக்கு பதில் இளையராஜாவின் இசையைப் பேச வைத்திருப்பார்.   Hats off the true legends of Indian Cinema!

அட… அதுக்குள்ள தளபதி  டிவிடி தேட ஆரம்பிச்சிட்டீங்க போல…!

-சிவராம்

sivarajini@gmail.com

குறிப்பு: இன்று கே டிவியில் சண்டே ஸ்பெஷல் சூப்பர் ஸ்டாரின் தளபதி திரைப்படம்தான்!
19 thoughts on “சண்டே ஸ்பெஷல்: தளபதி… சில மறக்க முடியாத காட்சிகள்!

 1. pisasu

  thankyu Siva. You did not menyion the relationship between banupriya and Super Star. Without exchanging any words….understanding each others feelings. Class movie. What to do thwere are some so called tamil writers calling proclaiming themselves as extentialists always talk about hollywood, korean movies as the best.

 2. சூர்யா

  அசத்தல் பதிவு. இன்னொரு காட்சி… கோயிலில் ஜெய்சங்கர்,தலைவர்,ஸ்ரீவித்யா மூவரும் இருக்கும்போது, அருகில் ரயில் கடந்துசெல்லும். மூவரும் அந்த ரயில் சத்தம் வரும் திசையை நோக்கி அர்த்தத்துடன் பார்க்கும்போது பிண்ணனி இசையில் ராஜா பின்னியிருப்பார். வசனமே இல்லாமல் சுமார் 4 நிமிடங்கள் வரும் காட்சி அது. தேடிப்பார்த்து அனுபவியுங்கள், நண்பர்களே….!!!

 3. சிவராம்

  நன்றி வினோ சார்…

  சூர்யாவின் கருத்துக்கு நன்றி. தாங்கள் சொன்ன காட்சியை சேர்க்க நினைத்து பின்னர் அதிகமாகிவிட்டதோ என விட்டுவிட்டேன்… இப்போது வினோ அதைச் சேர்த்துள்ளார். நான் சும்மா எழுதி அனுப்பினேன். அவர் அதை சிறப்பாகத் தந்துள்ளார்.

  நன்றி… நன்றி…

 4. Suresh கிருஷ்ணா

  Fantastic… தமிழ் சினிமாவின் கோஹினூர் வைரம் இந்தப் படம்!

  நன்றி வினோ… மற்றும் சிவராம்!

  -Suresh கிருஷ்ணா

 5. sam

  Hi Frds,
  Nanum entha padathai 30 thadavaiyavathu pathu irupen…ippoluthum tvla entha padam pota oru puthu padam pakira fellings than irukum…ithula orutharai vitutiga athu valli…………avaroda varigal…china thayaval song..and yamunai ..then momuti sollura vasanam onu iruku,arjun saganumnu soluvaru,athuku thalaivar mudiyathunu solluvaru,enaku ellam theriyum suriya,arujun appa vanthu pakuraru..antha sence ellam super…Thalivar padagalileya athigam thadavai patha padam thalapathiyum,annamalaiyum………………….

 6. Paarvai

  This truely amazing…I watched initially for Super Star during my school days…ஆனால் பின்னர் இசைஞானியின் இசைக்காகப் பார்த்த பொழுதுதான் , இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ஒரு அற்புதக் கூட்டணியின் மகத்துவம் புரிந்தது. வினோ மற்றும் சிவராம் ஆகியோருக்கு மிக்க நன்றி.

 7. மாப்பிள்ளை

  ரஜனியின் வாழ்க்கையில தளபதி ஒரு மறக்க முடியாத படம் தான் .

 8. sam

  Today afternoon see the thalapathi flm in ktv………………………………………….

 9. Amuthan

  Ya,raja is always great,,

  After some time now only i see this temple portion,realy it touch all human

  beings.Music is common language in world,exspecialy raja’s music..he realy

  deserves …

 10. கோபிநாத்

  தளபதி படத்தை பத்தி சொல்ல வார்த்தைகளே இல்ல…எத்தனை முறை பார்த்திருப்போம்…எந்த தியோட்டாரில் போட்டாலும் போயி பார்த்த படம்.

  இந்த படத்தை நினைக்கும் போது எல்லாம் என்னோட நண்பர் தேவாராஜ் ஞாபகம் வரும்.நானும் அவரும் இந்த படத்தின் வசனங்களை பேசிக்கிட்டே இருப்போம். ;))

  முக்கியமாக சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் அம்புட்டு அழகாக இருப்பாரு. அம்புட்டு முடியும் அந்த உடையும்…வாழ்ந்திருப்பாரு மனுஷன்.

  இசைஞானி இசை பற்றி நீங்களே நிறைய சொல்லிட்டிங்க…இந்த படத்தில் வந்த ராக்கமா பாட்டு BBCயின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடலிகள் ஒன்று.

  இந்த படத்தின் நடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை இப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் பேச வியக்க நிறைய விஷயங்கள் இருக்கு.

  ஒன்னே ஒன்னு மட்டும் நிச்சயம்…இது போல் மீண்டும் ஒரு படம் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பது அரிது. 😉

  பகிர்ந்தமைக்கு நன்றி சிவராம் 😉

 11. Suresh கிருஷ்ணா

  //ஒன்னே ஒன்னு மட்டும் நிச்சயம்…இது போல் மீண்டும் ஒரு படம் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பது அரிது. ;)//

  தமிழ் சினிமா என்றல்ல… இந்திய சினிமாவில் இதற்கு இணையான படமில்லை…

  மகாபாரதம் எப்படி இந்திய காப்பியங்களுள் ஒன்றோ… அப்படித்தான் தளபதியும், இந்திய சினிமாவில் ஒரு காவியம், அதுவும் மகாபாரதத்தையே தழுவி எடுக்கப்பட்ட காவியம்!

  -Suresh கிருஷ்ணா

 12. Dharshan

  மணிரத்தினத்தின் அசாத்தியமான திறமையின் சான்றுகளில் இதுவுமொன்று ரஜினி நடிப்பும் அப்படியே ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை நினைவு கூர்பவர்கள் வசதியாய் இந்த படத்தை மறப்பது ஏன்?
  அவர்கள் வார்த்தையில் சொல்வதானால் சினிமாக் கோமாளி நடித்ததாலா?
  இல்லை ரஜினியை வெறும் ஸ்டைல் காட்டுபவர் என்கிர்ரர்களே அவர்களுக்கு இது போன்ற படங்களும் அப்படித்தான் தெரியுமா?
  தலைவர் ரசிகர்களுக்காக மட்டுமின்றி தன திறமையை முழுமையாய் எடுத்துக் காட்டும் இது போன்ற படங்களில் நடித்து அற்புதமான அவருக்கே திருப்தி தரக்கூடிய 2nd innings ஐ ஆட வேண்டும் அமிதாப் போல
  நிகரற்ற ஒரு கலைஞன் தன்னையே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும்
  பி. வாசு போன்றோரின் தேவையற்ற build up களால் அற்புதமான அந்த climax நடிப்பும் அடிப்பட்டு போகிறது.

 13. Manoharan

  ரஜினியின் படங்களிலேயே நெ.1 தளபதிதான். ரஜினியிடம் தன் திருமணத்தை பற்றி சொல்லிவிட்டு ஷோபனா நடந்து போகும் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.மாலை வெய்யிலில் தளர்ந்த நடையுடன் ஷோபனா போவதும்,குலோசப்பில் ரஜினி திரும்பிப்பார்ப்பதும்,பின்னனியில் சூரியன் அஸ்தமனமாவதும் அருமையான கவிதை என்றால்,”நான் உன்னை நீங்கமாட்டேன்…” என்ற பாடல் வரிகளை இளையராஜா வயலினில் வாசிப்பார்,புல்லாங்குழலில் முடிப்பார். மனதை மயங்கவைக்கும் காட்சி இது. 100 முறையாவது இந்த காட்சியை பார்த்திருப்பேன்.அதேபோல் சின்னத்தாய் அவள் பாடல் முதலில் கருப்பு வெள்ளையில் வரும்போது நம்மையும் ரயிலில் அழைத்து செல்வார்கள் மணிரத்னமும்,இளையராஜாவும். பின் அதே பாடல் மறுபடியும் ஸ்லோ மோஷனில்….ரஜினியும்,மணியும்,ராஜாவும் பின்னி எடுத்திருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *