BREAKING NEWS
Search

சசிகுமார் படத்தைத் தயாரிக்கும் முன்னணி நடிகர்!

சசிகுமாரின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் பிரபல நடிகர்!

கோடம்பாக்கம் நேசர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி… அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார் தியேட்டர் உரிமையாளர் – விநியோகஸ்தர்- தயாரிப்பாளர் – இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார்.sasikumar03

இந்தப் படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே அறிமுகப்படுத்தப் போகிறார்.

பெரிய நடிகர்கள் பக்கம் போகாதது ஏன்?

‘இன்னும் நான் அந்த அளவுக்கு வளரலன்னு நெனக்கிறேன். அவங்களுக்கு சமமா இருக்கும்போதுதான் நம்மாள பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ண முடியும். அது ஈகோன்னு நினைச்சிக்கிட்டாலும் பரவாயில்லை. மனசுல நினைக்கிறதை சொல்லிடறது என் பழக்கம்’, என்கிறார் சசிகுமார் சற்றே கூச்சத்துடன்.

படத்தில்தான் பிரபல முகங்கள் இல்லையே தவிர, இந்தப் படத்தைத் தயாரிப்பது என்னவோ ஒரு பெரிய பிரபல நடிகர்தான்.

அவர் நம்ம சீயான் விக்ரம்!

படத்தில் அவர் தயாரிப்பாளர் மட்டும்தான். மற்ற அனைத்தும் சசிகுமாரின் விருப்பத்துக்கே விட்டுவிட்டாராம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். இப்போதைக்கு வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு தனி அலுவலகம் கூட டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைவிட பெரிய செய்தி… படத்தை வாங்க இப்போதே வரிசையில் காத்திருக்கத் தயாராகிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள் என்பதுதான்…

அடடா… கேக்கவே சந்தோஷமா இருக்கே!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *