BREAKING NEWS
Search

கோவைத் தம்பிக்கு ‘பால்கே கழக’ விருது!

கோவைத் தம்பிக்கு ‘பால்கே கழக’ விருது!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருது வழங்கப்பட்டுள்ளது.kovaithambi

‘இந்திய திரையுலக தந்தை’ என்று போற்றப்படுபவர், தாதா சாகேப் பால்கே என்ற துந்திராஜ் பால்கே. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 1913-ம் ஆண்டில், ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். தொடர்ந்து 25 ஆண்டுகளில், இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 30 குறும் படங்களையும் தயாரித்து முடித்தார்.

இவரை கவுரவித்து நினைவுகூரும் வகையில், திரையுலகில் தலை சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘தாதா சாகேப் பால்கே விருது’ என்ற பெயரில் மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு திரைப்பட அமைப்புகள் ஒருங்கிணைந்து, ‘தாதா சாகேப் பால்கே கழகம்’ என்று தொடங்கி, ஆண்டுதோறும் பல விருதுகளை வழங்கி வருகிறது.

கோவை தம்பி… முதல் தமிழ் தயாரிப்பாளர்!

தாதா சாகேப் பால்கேவின் 140-வது பிறந்தநாள் விழா, மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழ்நாட்டை சேர்ந்த பட அதிபர் கோவை தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் அறிவிக்கப்பட்டது.

பயணங்கள் முடிவதில்லை தொடங்கி பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் கோவைத் தம்பி. இப்போதும் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த விருதை, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் கோவை தம்பியிடம் வழங்கினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், சங்கிலிமுருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.




2 thoughts on “கோவைத் தம்பிக்கு ‘பால்கே கழக’ விருது!

  1. r.v.saravanan

    VALTHUKKAL KOVAI THAMBI

    MARAKKA MUDIYUMA INDHA FILMS PAYANANGAL MUDIVATHILY ,ILAMAIKALANGAL,
    NAN PADUM PADAL, UDAYAKEETHAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *