BREAKING NEWS
Search

கொழும்பு பயணத்தை ரத்து செய்தார் அமிதாப்..? ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்தும் விலகியதாக சீமான் தகவல்!

கொழும்பு பயணத்தை ரத்து செய்தார் அமிதாப்.. ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்தும் விலகியதாக சீமான் தகவல்

மும்பை: நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐஃபா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று தெரிவித்தார்.

மேலும் ஐஃபா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளதாக சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் கூறியதாவது:

இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழர்களின்இனப் படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும்படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்‌ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமிதாப் குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள்!

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் ஐஃபா விருது வழங்கும் கமிட்டியில் இருந்து, விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும் தனது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை ஐஃபா விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.

அமிதாப்புக்கு பதில் நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.

லாரா தத்தா, விவேக் ஓபராய் ஆகியோரும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும் திராவிடர்களுக்கும், சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில், எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது. அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.

அவரது பெருந்தன்மைக்கும், சக இந்தியனாக மதித்து எமது குரலுக்கு செவிமடுத்த பாங்குக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இனி புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சல்மான்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். அவர்களுக்கும் எமது உணர்வுகள் புரிய வைக்கப்படும்,” என்றார்.

இப்போது நியமிக்கப்பட்டுள்ள மூவரில் விவேக் ஓபராய் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அம்மா தமிழகத்தைச் சேர்ந்தவர். லாரா தத்தா முதலில் அறிமுகமானது தமிழில்தான். படத்தின் பெயர் அரசாட்சி.

அமிதாப்- ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்வதாக செய்திகள்…

இதற்கிடையே, கொழும்பு விழாவில் அமிதாப் மட்டுமின்றி அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்பது உறுதி என்றும், ஒரு நாள் விழாவில் மட்டுமேனும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இலங்கை சுற்றுலா வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஷாரூக்கான், சல்மான்கான், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என்றும் சுற்றுலா வாரியம் கூறியுள்ளது.

ஆனால் இதுகுறித்து அமிதாப் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.




6 thoughts on “கொழும்பு பயணத்தை ரத்து செய்தார் அமிதாப்..? ஐஃபா தூதர் பொறுப்பிலிருந்தும் விலகியதாக சீமான் தகவல்!

  1. Manikandan Bose

    ARE YOU SURE ITS TRUE…??? – I couldnt see this news at any sites other than ENVAZHI.COM

    News from Indiatimes movies..
    ———————————————————
    Big B, SRK, Ash confirmed at IIFA
    12 May, 2010 02:29 pm ISTlINDIATIMES MOVIES

    Much against rumours that Amitabh Bachchan might skip the IIFA Awards at Sri Lanka this year following the resistance from people in Tamil Nadu, Big B has confirmed that he will very much attend the event even if its for one day. Top officials from the Sri Lanka Tourist Board (SLTB) have confirmed that Amitabh Bachchan, the official brand ambassador of IIFA will attend the event.

    Also Amitabh Bachchan’s daughter-in-law will attend IIFA though her film Raavan costarring husband Abhishek Bachchan has backed out from IIFA at the last moment. Though Mani Ratnam maintains that the reason for backing out is because his film is not complete, buzz is that he wanted to avoid the resistance by the Tamil nationalist forces in Tamil Nadu who have opposed the participation of Bollywood celebrities in this event on the grounds that it would amount to legitimizing the Mahinda Rajapaksa government’s bid to absolve itself of waging a war against the Tamils in north Sri Lanka from 2007-2009.

    Meanwhile even Shah Rukh Khan has confirmed his presence at IIFA. Some time back there were rumours that SRK is making up for Big B’s absence at the event. But now with Amitabh Bachchan’s confirmation, Shah Rukh Khan is an added bonus. As per the grapevine Shah Rukh Khan is planning to show rushes of his upcoming film Ra.One .

    Much against rumours that Amitabh Bachchan might skip the IIFA Awards at Sri Lanka this year following the resistance from people in Tamil Nadu, Big B has confirmed that he will very much attend the event even if its for one day. Top officials from the Sri Lanka Tourist Board (SLTB) have confirmed that Amitabh Bachchan, the official brand ambassador of IIFA will attend the event.

    Also Amitabh Bachchan’s daughter-in-law will attend IIFA though her film Raavan costarring husband Abhishek Bachchan has backed out from IIFA at the last moment. Though Mani Ratnam maintains that the reason for backing out is because his film is not complete, buzz is that he wanted to avoid the resistance by the Tamil nationalist forces in Tamil Nadu who have opposed the participation of Bollywood celebrities in this event on the grounds that it would amount to legitimizing the Mahinda Rajapaksa government’s bid to absolve itself of waging a war against the Tamils in north Sri Lanka from 2007-2009.

    Meanwhile even Shah Rukh Khan has confirmed his presence at IIFA. Some time back there were rumours that SRK is making up for Big B’s absence at the event. But now with Amitabh Bachchan’s confirmation, Shah Rukh Khan is an added bonus. As per the grapevine Shah Rukh Khan is planning to show rushes of his upcoming film Ra.One .

    ___________
    திரு சீமான் தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்தச் செய்தி தரப்பட்டுள்ளது. இதனை சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட தளங்களிலும் காணலாம்.

    நன்றி
    வினோ

  2. SenthilMohan K Appaji

    A salute to Mr Big B.
    உண்மையிலேயே Big B தான்.

    //*இனி புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சல்மான்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். அவர்களுக்கும் எமது உணர்வுகள் புரிய வைக்கப்படும்,” என்றார்.**/

    புதிதாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவருக்கும் புரியவைப்பதற்கு முன் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பெயரில் இந்தியா என்று இருப்பதனால் இது ஒன்றும் அரசாங்க அமைப்பு என்று நினைத்துவிட வேண்டாம். இது முழுதும் மும்பையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றின் கீழ் இயங்கி வருகின்றது. அதன் பெயர் Wizcraft International Entertainment Pvt. Ltd. மேலும் IIFA-ன் Advisory Board-ல் கரன் ஜோகர், ஜெயா பச்சன் (Big B-யின் மனைவி), வினோத் கண்ணா, ரமேஷ் சிப்பி போன்ற ஹிந்தி படவுலகின் சில முக்கியமானவர்கள் இருக்கின்றனர்.

    இது IIFA-இன் E-mail – iifa@iifa.com

    இது IIFA-வினை நடத்தும் கம்பெனியின் இணையதள முகவரி : http://www.wizcraftworld.com/cntnt/intro.htm

    இது IIFA-இன் மும்பை முகவரி:
    International Indian Film Academy
    Wizcraft International Entertainment Pvt. Ltd.
    5th floor, Satyadev Plaza,
    Fun Republic lane, Near Bhagwati House,
    Mumbai 400 053, India.
    Tel: 42001400
    Fax: 42001417 / 42001534

    இது சென்னை முகவரி:
    No. 43, (Old no.18),
    4th Main Road,
    East CIT Nagar,
    Chennai 600 035,
    India.
    Tel : +91 44 – 4206 1301
    Fax: +91 44 – 4206 1302
    e-Mail: wizchennai@wizcraftworld.com

  3. palPalani

    @SenthilMohan K Appaji: தகவலுக்கு நன்றி! மேலும் சிறிய வேண்டுகோள். ஈமெயில் அனுப்பும் தகவலையும் தரவும், அது என் போன்ற உணர்வுள்ள சோம்பேறிகளுக்கு தேவைப்படும்.

  4. eelam tamilan

    தமிழகத்தில் 17, 18ல் கருப்பு உடை அணியுங்கள் – இயக்குநர்கள், கவிஞர்கள் வேண்டுகோள்
    ——————————————————————————————————–
    இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போர் என்ற பெயரில் இலங்கை இராணுவம் பன்னாட்டு சக்திகளின் துணையுடன் நடத்திய இனப்படுகொலையின் முதலாண்டு வரும் 17 ம் தேதி நிறைவடைகிறது.

    இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகக் கொடூரமான இறுதி கட்டப் போர் நடந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்பாவி ஈழத்தமிழர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.

    முல்லைத்தீவு மாவட்டமே சூறையாடப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் உச்சக்கட்ட தாக்குதல் மே 17, 18-ந் தேதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தது. அந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்தியா உள்பட எந்த நாடும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக இலங்கை இராணுவத்துக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் கொடுத்து உதவியது. சுமார் 3 இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட கொடூரம் நடந்தது.

    போர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள இராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள். முள்ளி வாய்க்கால் சம்பவத்தை உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில் சோகத்தை சுமந்து கண்ணீர் மல்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சிங்கள இராணுவ அரக்கர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கனடா, ஜெர்மனி, டென்மார்க், நோர்வே, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்பட ஈழத்தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் மே 18-ந்தேதியை போர் குற்றவியல் நாள் ஆக அறிவிக்கக் கோரி கூட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 18-ந்தேதி இலங்கை தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஈழத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்.

    ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டிலும் அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அஞ்சலி பொதுக் கூட்டம், தீபம் ஏந்தி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் மதுரையில் 18-ந்தேதி அஞ்சலி கூட்டம் நடத்துகிறார். அன்றே தனது நாம் தமிழர் இயக்கத்தையும் ஆரம்பிக்கிறார்.

    இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டனர். அதில் அவர்கள், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த கூட்டறிக்கையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், வக்கீல் பால் ஜனகராஜ் உள்பட 100 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

    போர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள இராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *