BREAKING NEWS
Search

கொழும்பு திரைப்பட விழா பாதுகாப்புப் பணிகளில் ‘ரா’!

கொழும்பு திரைப்பட விழா பாதுகாப்புப் பணிகளில் ‘ரா’!

கொழும்பு: ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பாதுகாப்பு பணிகளுக்காக இந்தியாவின் ‘ரா’ உளவுப் பிரிவு இலங்கை சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரா அமைப்பு தவிர, இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் படையணிகள் சிலவும் ஏற்கெனவே இலங்கையில் இந்த விழாவுக்காக முகாமிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதே இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவை கொழும்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்துகிறது. இதற்காக இந்திய திரை நட்சத்திரங்கள் பலரையும் கொழும்பு கொண்டு வர மிகத் தீவிரமாக முயன்று வருகிறது இலங்கையும் இந்திய அதிகார வர்க்கமும்.

ஆனால் தமிழ் நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவைப் புறக்கணித்ததுடன், மற்ற மொழிக் கலைஞர்களும் இதில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் இத் திரைப்பட விழாவுக்கு எதிரான பிரச்சாகங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழினப் படுகொலையை கொண்டாடும் வகையில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் இந்தியக் கலைஞர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், விழாவை நடத்துவதில் குறியாக உள்ளது இலங்கை. இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறது இந்தியா. விழா நடக்கும் இடத்துக்கான பாதுகாப்பு முதல் சகல உதவிகளையும் இந்தியாதான் அளிக்கிறது என்று இலங்கை தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் உயர் உளவுத் துறையான ரா மற்றும் சில பாதுகாப்புப் படைப் பிரிவுகள் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகளை மீறி இலங்கைக்கு வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என இலங்கை காவல் துறையும் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில தமிழக திரைப்பட கலைஞர்கள் மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும், இதனை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
4 thoughts on “கொழும்பு திரைப்பட விழா பாதுகாப்புப் பணிகளில் ‘ரா’!

 1. sakthivel

  “ரா” இந்தியாவின் உளவுதுறையல்ல சோனியாவின் உறவுத்துறை…

  இந்திய நாட்டின் சாபக்கேடு….
  ஒரு பெண்ணின் சுயநலத்தினால் இந்திய தேசத்திற்கே மாபெரும் அவமானம்…..

 2. James Arputha Raj

  What is the base for this Story?

  correct me if I am wrong, I think this is function is organized by “IIFA” not “FICCI”, this is a private organization which is known for organizing bollywood movie functions in countries like SouthAfrica, Singapore etc. why would a National security agency will involve in private orgs function?

  If this story is not based on verifiable Facts? then why “envazhi” is publishing this. are you trying to keep fueling a emotional issue?
  ___________

  IIFA நடத்தும் இந்த விழாவுக்கு வணிக ரீதியான ஆதரவு தந்திருப்பது FICCI-தான். அதாவது, 9 மில்லியன் டாலர் செலவழிக்கும் இலங்கைக்கு 126 மில்லியன் டாலர் அளவுக்கு வருவாயைத் தேடித் தருவதில் முக்கியப் பங்கை FICCI- ஏற்றுள்ளது. அதனால்தான் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு FICCI, அதன் மீடியா பிரிவு தலைவர் கமல் பக்கமும் திரும்பியது.

  இலங்கையைப் பொறுத்தவரை, எண்பதுகளின் ஆரம்பம் தொட்டு பல விஷயங்களிலும் ‘ரா’வின் கைவண்ணம் இருப்பது உலகறிந்த ரகசியம்.

  கண்ணெதிரே உள்ள உண்மையை பார்க்க மாட்டேன் என்று நீங்கள் கண்ணை மூடிக்கொள்வதற்கு என்வழி எப்படி பொறுப்பாகும்!

  -என்வழி

 3. James Arputha Raj

  Thanks for your response..

  //IIFA நடத்தும் இந்த விழாவுக்கு வணிக ரீதியான ஆதரவு தந்திருப்பது FICCI-தான்.

  //சர்வதே இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவை கொழும்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்துகிறது

  The second one is the line from your post, which is clearly(on intentionally) misleading.

  //இலங்கையைப் பொறுத்தவரை, எண்பதுகளின் ஆரம்பம் தொட்டு பல விஷயங்களிலும் ‘ரா’வின் கைவண்ணம் இருப்பது உலகறிந்த ரகசியம்.

  Still doesn’t address the point what RAW doing in this picture. and where you got this trusted story?

  I am not trying to support or deny anything. we all know the struggle didn’t become success due to lot of mistakes by everyone. but why this is been discussed because of a film function,and blaming a national agency will not help, specially it is true that RAW is the one who trained LTTE at the start.

  I was only trying to point out, that all the tings we are discussing with emotions, how much of this is facts? why the world is not taking our side? or is there a other side of the story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *