BREAKING NEWS
Search

கொழும்பு கொண்டு வரப்பட்டுள்ளார் கேபி!

கொழும்பு கொண்டு வரப்பட்டுள்ளார் கேபி!

கொழும்பு: கேபி என்கிற குமரன் செல்வராசா பத்மநாதன் கைது kp_2செய்யப்பட்டது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அவரை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேஷிய – இலங்கை உளவுப் படையினர் கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் பாங்காக்கில் வைத்து கேபி கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தரப்பு கூறுகிறது. கைது செய்யப்பட்ட கேபி தற்போது கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் புலிகள் இயக்கத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார். இவரது தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த நோக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்த நிலையில் தற்போது கேபி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

2 நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் வைத்து மலேசியா மற்றும் இலங்கை உளவுப் படையினரால் கேபி கைது செய்யப்பட்டுள்ளார் என்று புதினம் இணையம் கூறுகிறது.

இதுகுறித்து புதினம் செய்தியில் கூறியிருப்பதாவது:

புதன்கிழமை பிற்பகலில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘மஜீத் இந்தியா’ என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள டியூன் ஹோட்டல் (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த – விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.

பிற்பகல் அளவில் – ஜலான் துராங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் இருக்கும் குறிப்பிட்ட டியூன் ஹோட்டலுக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், நடேசனின் உறவினர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.

பிற்பகல் 2 மணியளவில் – தனக்கு வந்த ஒரு செல்போன் அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

செல்வராஜா பத்மநாதன் மலேசிய உளவுப் பிரிவு அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை உளவுப் பிரிவினரால், கடத்தப்பட்டதாகவே தெரிகிறது.

அதே வேளையில் இந்திய உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.

மேலும் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசுத் தரப்பு நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் உளவு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்று கருதப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் நேற்றே விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

kp-new1

கேபி கைது செய்யப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், கேபியின் புதிய புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் இருப்பவரே உண்மையான கேபி என்று தெரிகிறது.

சில தினங்களுக்கு முன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு கேபி பேட்டி அளித்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.




5 thoughts on “கொழும்பு கொண்டு வரப்பட்டுள்ளார் கேபி!

  1. வழிப்போக்கன்

    நாம கடிசிவரை உச்சு! மட்டும்தானா???

  2. Enவழி

    I hope in this century the Tamil community will be ruined…It’s the peak time now!!!! our people watching maanada without realizing it…Bad luck guys!!

  3. subash

    tamil nadu government didnt take any action to save tamil eelam peoples. if tamil nadu government is not going to take steps to save tamil eelam peoples then who is going to show interest to save our peoples. really i am ashamed to say that i am a tamil nadu guy.

  4. subash

    not only me all tamil nadu peoples in india should ashamed to say we are tamil peoples. only tamil eelam can be proud of them. vaalga tamil eelam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *