BREAKING NEWS
Search

கொழும்பு அலுவலகத்தை மூட ஐநா உத்தரவு!

கொழும்பு அலுவலகத்தை மூட ஐநா உத்தரவு!

நியூயார்க்: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்.

மேலும் ஐக்கிய நாடுகளின் இருப்பிடப் பிரதிநிதி நீல் பூஹ்னேவை நியூயார்க்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக் குழுவைக் கலைக்கக் கோரி, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் இலங்கை அரசின் அமைச்சர் பிரதான ஒருவரே தலைமை ஏற்று போராட்ட்ம் நடத்துகிறார். அவரது ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கி, ஐநா பணியாளர்களைத் தடுக்கிறார்கள். ஆனால் இவற்றைத் தடுக்க வேண்டிய அரசாங்கமே, தங்களால் அது முடியாது என வெளிப்படையாக அறிவித்து சண்டித்தனம் செய்கிறது.

இந்த மோசமான சூழல் காரணமாக அங்கு ஐநா அலுவலகம் தொடர்ந்து இயங்க முடியாத நிலையைத் தொடர்ந்தே, அலுவலகத்தை மூடிவிட்டு, தனது பிரதிநிதியை நியூயார்க் திரும்ப பான் கி மூன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதைத் தொடர்நதே இந்த நடவடிக்கை. இலங்கை இதனைத் தடுத்திருக்க வேண்டும்…” என்றார்.

இந்த நிலையில் நியூயார்க் திரும்பும் நீல் பூஹ்னேயுடன் கொழும்பு நிலை குறித்து இன்று கலந்தாலோசனை நடத்துகிறார் பான் கி மூன்.

சாகும் வரை உண்ணாவிரதம்!


இந்நிலையில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக் குழுவைக் கலைக்கக் கோரி கொழும்பு ஐநா அலுவலகம் எதிரே சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச.

இந்தப் போராட்டம் நடப்பதை தங்களால் தடுக்க முடியாது என இலங்கை அரசு மீண்டும் அறிவித்துள்ளது.




5 thoughts on “கொழும்பு அலுவலகத்தை மூட ஐநா உத்தரவு!

  1. தனுசுராசி

    பன்றது எல்லாம் பண்ணிட்டு எங்கப்பான் குதிருக்குள்ள இல்லைங்குர கதையா இருக்குது இது…

  2. குமரன்

    அது சரி, எல்லாரும் கருணாநிதி ஆக முடியுமா? தலைமாட்டில் துணைவியும் கால்மாட்டில் மனைவியும் இல்லாத இந்த கொழும்பு மந்திரி சாப்பாடு கிடைக்காமல் சாகப் போகிறான்.

    சாகனுண்டா நீ.

  3. Guevara

    சாகப் பயந்த இந்த நாதாரி நடத்தும் ஒரு திட்டமிட்ட நாடக அரங்கேற்றம் என்று அறுதியிட்டுக் கூற முடியும். அதிக பட்சம் மூன்று அல்லது நான்கு நாளைக்குதான் இவனால் தாக்குப்பிடிக்க முடியும்.

    அப்புறமென்ன கலைஞ்ஞர் ஸ்டைல் உண்ணாவிரதம் வெற்றி என்று ஒரு அறிக்கையும் உற்சாக பானம் அருந்தி முடித்து வைப்பும் தான் எஞ்சி இருக்கு!

  4. Mariappan

    எல்லாம் வீட்டோ பவர் உள்ள சீனா தரும் தைரியம். ஐ நா ரப்பர் ஸ்டாம்ப் ஆகி பல வருடங்கள் ஆகிறது. இல்லை என்றால் அமெரிக்கா சீனா இஸ்ரல் எல்லாம் இந்த ஆட்டம் போடுமா?

  5. Guevara

    ஆக வெறும் 50o மணித்தியாலங்கள் மட்டுமே தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை இந்த நாதாரி விமல் நிருபித்துவிட்டான் !!

    அப்புறம்மென்ன அவரை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரில் வந்து, நீர் அருந்த செய்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *