BREAKING NEWS
Search

கொட நாட்டில் ஜெ., மொரீஷியஸில் விஜய்காந்த்!


தேர்தல் அலுப்பு தீர… கொட நாட்டில் ஜெ., மொரீஷியஸில் விஜய்காந்த்!

சென்னை: மக்கள் பணியாற்றிய ‘களைப்பு’ தீர அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது தேமுதிக தலைவர் விஜய்காந்த்தும் ‘வெகேஷன்’ கிளம்பிவிட்டார்.vijaykanth1

அரசியல் பணிகள் காரணமாக  தொடர் சுற்றுப் பயணம் செய்ததால், ஓய்வெடுக்க ஒரு வாரகால பயணமாக மொரீஷியஸிக்கு இன்று பயணமானார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் ஆகியோரும் சென்றனர்.

அவர்களை விமான நிலையத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனும், இதர நிர்வாகிகளும் வழியனுப்பி வைத்தனர்.
இது வழக்கமான சுற்றுலாப் பயணம்தான் என்றும், தனக்கும் சற்று மாறுதல் தேவைப்படுவதால் குடும்பத்தினருடன் ஒரு வாரகாலம் மொரீஷியஸில் தங்கியிருக்கச் செல்வதாகவும் விஜய்காந்த் தெரிவித்தார்.

இந்த மொரீஷியஸ் பயணத்தை இன்னொரு வகையிலும் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம் விஜய்காந்த்.

தானே இயக்கி நடிக்கும் விருதகிரி படத்தின் துவக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும், மிச்சமுள்ள ஸ்க்ரிப்டை எழுதி முடிக்கவும் அவர் இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்.

‘இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 18ம் தேதி சென்னை திரும்பும் விஜய்காந்த், அடுத்த சில தினங்களுக்குள் மீண்டும் விருதகிரி படத்துக்காக வெளிநாட்டுக்குப் பயணமாகிறார்’, என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்பாக, தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் விஜய்காந்த் விருந்தளித்தது நினைவிருக்கும்.




One thought on “கொட நாட்டில் ஜெ., மொரீஷியஸில் விஜய்காந்த்!

  1. ஹைக்கூ...

    ஹைக்கூ…
    ஓய்வெடுக்க
    மொரீஷியஸ் போனார்
    விஜய்காந்த் !
    மொரீஷியஸ்-ல்
    நிலநடுக்கம்
    – அரசு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *