BREAKING NEWS
Search

கையில் விலங்கு மாட்டி துன்புறுத்தினர் கனடா போலீசார்! – சீமான்


கையில் விலங்கு மாட்டி துன்புறுத்தினர் கனடா போலீசார்! – சீமான்

சென்னை: கனடாவில் அந்நாட்டு காவல் துறையினர் தனக்கு கைவிலங்கு மாட்டி துன்புறுத்தி, அவமானப்படுத்தியாதாக இயக்குனர் சீமான் புகார் தெரிவித்துள்ளார்.seeman_26

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று உரையாற்றுவதற்காக கனடா சென்றிருந்த ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரும், பிரபல இயக்குனருமான சீமான் அந்நாட்டின் டொராண்டோ நகரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்று சீமான் வாதிட்டாலும், கனடிய சட்டப்படி பிரிவினையைத் தூண்டும் செயலாகவே அவரது பேச்சு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் கனடா போலீசாரால். விசாரணைக்குப் பிறகு கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

பக்குவமற்ற அணுகுமுறை

‘சீமான் போன்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள நடைமுறைகளைப் புரிந்து கொண்டு, தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி குடியேறிய நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பிவிடக் கூடாது. வெறும் உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இப்போது ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. இந்த அனுபவம் அவருக்கு பின்னாளில் உதவும்’, என்று  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

நடந்தது என்ன?

இதற்கிடையே விசாரணையின் போது நடந்தது என்ன என்பது குறித்து இப்போது சீமான் விளக்கியுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தன்னுடைய கைகளில் விலங்கிட்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் அழைத்துச்சென்று பல மணி நேரம் சம்பந்தமில்லாத பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், புலிகள் ஆதரவு பேச்சுக்காக இந்தியாவில் எதிரப்கொண்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்தும் விசாரித்ததாக சீமான் கூறினார்.

இந்திய – சிங்கள அதிகாரிகளே காரணம்!

மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் ஈழத் தமிழர்களுக்கு தனித் தாய்நாடு உருவாகும் வரை புலிகளையும், ஈழத்தமிழர்களையும் ஆதரித்து பேசுவேன்.

நவம்பர் 27ந் தேதி மான்ட்ரீல் நகரில் அனுசரிக்கப்பட இருந்த மாவீரர் தினத்தன்று என்னால் உரையாற்ற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. சிவில் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் கனடா நாட்டில் கூட தமிழனுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.

என்னை கைது செய்த கனடா அதிகாரிகள் இன்டர்போல் போலீசார் என்னை விசாரிப்பார்கள் என்று தெரிவித்தனர். அதன் பிறகு ஒரு சீக்கிய அதிகாரி வந்து என்னிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். ஆனால் கடைசி வரை அவர் தன்னை யார் என்றே என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. கனடாவில் இருந்துதான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்திய அதிகாரிகளும், சிங்கள அதிகாரிகளும்தான் காரணம்” என்றார் சீமான்.

உதவி இயக்குநர் கைது!

இந்நிலையில், சீமானின் உதவி இயக்குநர் மித்ரன் என்பவரை இன்று போலீசார் சென்னையில் கைது செய்தனர். பிரபாகரன் படத்தைக் கிழித்த இவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவருக்கு தொடர்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இயக்கத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கூட இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

இவர்களிடம் விசாரித்ததில் மதுரை எஞ்ஜினியர் விஜயகுமார் என்பவர்தான் தங்களுக்கு பெட்ரோல் குண்டுகளைத் தயாரிக்க உதவியதாக கூறியுள்ளனர். நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்த விஜய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 thoughts on “கையில் விலங்கு மாட்டி துன்புறுத்தினர் கனடா போலீசார்! – சீமான்

 1. Prasanth

  இதெல்லாம் ரொம்ப ஓவர் நம்ம ஊர் போலீஸ் மாதிரி யார் சொல்றதையும் கேட்டு விலங்கு போட்டு நடத்த கனடா போலீஸ் மேல பழிய போடாதீங்க . இங்கே அவங்க குற்றவாளி என் சந்தேகப்படும் நபர்களை கூட மரியாதையுடன் தான் நடத்துவார்கள் இங்கேயும் குரலை ஒசத்தி சீன் போட்ட அதுல பயந்து இருப்பாங்க பாவம் கனடா போலீஸ் இப்புடியாச்சும் பெரிய ஆளா வரணும்ன்னு நினைக்கிற உங்களை பாத்தா சிரிப்பு இல்ல பரிதாபம் தான் வருது

 2. kumar

  ஏன் …. கனடா நட்டு போலிசுக்கு பயிற்சி கொடுத்தது நீங்கள் தானோ?

 3. Prasanth

  வெட்டி விவாதம் நல்ல தான் இருக்கு கொமாரு இங்கே போலீஸ் அத்தனை மட்டமா யாரையும் நடத்துவது இல்லை. அவர்கள் குற்றவாளிகளிடம் நம்ம ஊர் போலீஸ் மாதிரி மொட்டை அதிகாரம் பண்றது இல்ல சரியா அவர்கள் மரியாதையுடன் தான் கைது நடவடிக்கை பற்றி கூட சொல்வார்கள். ரொம்ப அறிவாளின்னு வெளிச்சம் போடற ongala enna solla

 4. eelam tamil

  every one working on their agenda. Even this envazhi has his agenda and not support for Vaiko or Seeman, but show him as eelam tamil supports. These comments also shows people. Problem is tamils not align with single leadership or agenda.. that is why could not achieve any things… God only can save tamils if he wishes…….

 5. ksk

  இந்த சீமான் தன்னை ரொம்பவும் ஓவராத்தான் நெனைச்சிகிட்டு இருக்கார்.. அட என்னதுக்கு இந்தியா வுக்கு தப்பித்து வந்தீங்க.. அங்கே கனடா நாட்டிலே இருந்து இதெ சொல்லலாமே.

  உலகத்திலேயே மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படும் நாடு கனடா. புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கே அதிகமாக செட்டில் ஆனதும் அதனால் தான்.

  சும்மங்கட்டியும் அவங்க மேலே குற்றசாட்டு சொல்லறத விட்டுட்டு, கனடா மனிதவுரிமைகள் மன்றத்தில் வழக்கு தொடருங்கள். யார் குற்றவாளி என்று தெரிந்துவிடும்.

 6. Prasanth

  கருணா என்னமா கொரல் (கோரல்) குடுக்குரே வெட்டி கூச்சல் போட்டு தான் தெருவுல நிக்குறோம் நம்ம பொறுப்பை உணராம தெருவுல நின்னாலும் தன் தலையில கொள்ளி வைக்கிற புத்தி போகாதே இன்னமும் ஏன்டா அப்பாவிங்க பாவத்தை கொட்டிக்கிறீங்க. கொடி புடிக்கிறதை விட்டு உருபுடற வழிய பார்க்காம .

 7. pJS

  உலகத்திலேயே மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படும் நாடு கனடா. புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கே அதிகமாக செட்டில் ஆனதும் அதனால் தான். அப்படி என்று உங்களுக்கு யார் சொன்னது?

  கனடாவில இன்னும் எதனை அகதிகளின் வழக்கு கோர்டுக்கு எடுப்படாமல் irrukku தெரியுமா??? எதனை ஆண்கள், வயதானவர்கள் தங்கள் மனைவி பிள்ளைகளை வருடக்கணக்கில் பர்ர்க்காமல் தீர்வு வரும் என்று காத்திருக்கிரங்கள் தெரியுமா???

  ஒன்னு மட்டும் உண்மை..”நம்ம ஊர் போலீஸ் மாதிரி யார் சொல்றதையும் கேட்டு விலங்கு போட்டு நடத்த மாட்டங்கள்” ஆனால் அந்த “யாரோ” ராஜபக்சேவாகவோ அல்லது சோனியாவோ இருந்தால் கனடா அரசு கேட்க்காமல் இருக்குமா???? கொஞ்சும் யோசிங்கோ இதெல்லாம் அரசியல்பா

  மனித உரிமைகள் மிகவும் மதிக்கிற நாடு தான் ஆஸ்திரேலியாவும் ஆனால் நாடு கடலில் பிடி பட்ட அந்த முப்பத்தாறு பேரை தன் நாட்டில் தரை இறக்காமல் எதோ டிராமா பண்ணி கடைசியில் இந்தோனேசியவில் கொண்டு பொய் இறக்கவில்லையா … ஏன் ஆஸ்திரேலியாவில் அந்த முப்பத்தாறு பேருக்கு இடம் இல்லையா இல்ல சாப்பிட கொடுக்க முடியாத??

  எல்லாம் அரசியல்

 8. Prasanth

  அப்பா கருணா இங்கே தமிழன் நிம்மதியா பொழைக்க வுடமாடீங்க போல இதுக்கும் ஆப்பு வாச்சிறாதிங்க பேசி பேசி தான் இந்த நிலைமை

 9. ksk

  PJS, நீங்க சொல்லறது கொஞ்சம் ஓவரா தெரியல்லே.. சோனியா அல்லது ராஜபக்ஷே , கனடா நாட்டுக்கு தொடர்பு கொண்டு, சீமான் வருகிறார் அவரை கைது செய்து விலங்கு மட்டுங்கன்னு சொல்லி இருப்பாங்கன்னு நம்புறீங்களா.?

  அவங்க ரெண்டு பெரும் நல்லவங்களா இல்லையாங்கிறது ஒருபக்கம். இருந்தாலும் சீமானை கைது சொல்லறதுக்கு கனடா போலீஸ், அரசாங்கத்திடம் கேப்பாங்கன்னு சொல்லமுடியாது. அவங்க மரியாதைய அது குறைத்துவிடும். அந்த அளவுக்கு சீமான் பெரிய ஆளுன்னு யாரும் நினைக்கல்ல.

  சீமான் தான், என்னவோ பிரபாகரன் இவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டதுபோல பருப்பு காட்டிகிட்டு இருக்கார்.

 10. charles antony

  KSK

  உங்களுக்கு அரசியல் அறிவு ரொம்ப குறைவுன்னு நல்ல புரியுது… அதோட சீமானையும் உங்களுக்கு பிடிக்காது… அது தான் எல்லா பிரச்சினையும்.

  PJS, என்னே சொல்ல வாரார் என்றல்… கிழட்டு நரி சீமானின் தொல்லை தங்காமல்…. சோனியாகிட்ட போட்டு கொடுத்து… அந்த அம்மணி thalappa karanukku order pottu… avar candavukku solli irukkalam thane…
  illa thurogi karuna…. rajapaksekitta pottu koduthu antha nay… canadavukku solli irukkalam thane… Seeman ippa periya allu illa than satharana director/ actor.. but nalai… thamilaga muthalvar agalam thane…

  pirabaharan seemanidam mattum poruppu kodukkala…. ovvoru thamilanidamum poruppu koduththullar…… kadaisi thamilan ullavarai… thamil ealap porattam thodarum. Aiyaiyo nan ungala solla villai. “unmaiyana unarchchi ulla thamilani sonnen… avanukku solluvathu seemana illa pirabaharana enpathu pirachchinai illa” Sollum vidayam mattum than mukkiyam.
  mudinthal…. thanmanamulla thamilanai irungal

  “Tahamilarin thagam thamil ealeth thayagam…. “

 11. sps

  உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்களுக்கு எனது அன்பான வணக்கம்,
  மேலிருந்து அனைவருடைய கருத்துகளையும் படித்துணர்ந்தேன், நல்லது நன்றியும் கூட தமிழன் இப்போதாவது பேசத் துணிந்து இருக்கிறான் என்பதை நினைக்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் எவர் மீது குற்றம் இருப்பினும் அவற்றை விடுத்து இஸ்ரேலியர்கள் போல் தமிழர்களும் ஒன்றாதல் அவசியம், தமிழர்களுக்ககென்று ஒரு சரியான வரலாறு இன்றுவரை பதியப் படவில்லை தமிழருக்கென்று ஒரு நாடு இருப்பின் அப்பொழுதாவது இனி வரும் சந்ததியினருக்கு நம் வரலாறு புரியட்டும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள், இருக்கும் இடத்தை விட்டு நாம் இன்று புலம் பெயர்ந்துள்ளோம் வசதியாக உள்ளோம் நம் குழந்தைகள் நன்றாகவே உள்ளனர், நம் இலட்சியம் வெல்லும் வரையிலாவது நமது குழந்தைகளுக்கு நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் அவதித்த , சந்தித்த அவமானங்களையும் சொல்லிக்கொண்டே இருங்கள் அவர்களுக்கும் அது புடம் போட்ட நெருப்பாக கனல் விட்டுக் கொண்டே இருக்கட்டும். அடுத்து புலம் பெயர்ந்து நிம்மதியாக வாழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், என்னதான் அடுத்தவர் வீட்டில் எஜமானர்களாக நடத்தப் பட்டாலும் நம் வீட்டில் இருக்கக கூடியசுகம் அலாதி அதற்கு நீங்கள் ஆசை பட வில்லை என்றாலும் கூட அதற்காக முயற்ச்சி எடுப்பவர்களை தயவு செய்து தவறாக பேசாதீர்கள்,அது அவர்களின் உணர்வுகளைக் காயப் படுத்தலாம். நாம் உதவி செய்யாவிட்டாலும் கூட மனித உரிமைக்காக போராடுபவர்களுக்காகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்ளுக்காகவும் எவரேனும்குரல் கொடுத்தால் அவரை மதிக்கா விட்டாலும் கூட பரவாயில்லை அவரைப் பற்றி அவதூராகப் பேசாமல் இருத்தலே நலம்.

  தமிழுணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் நான் வேண்டி விரும்மி கேட்டுக்கொள்வது தேவை இல்லாமல் பேசுவதைத் தவிர்த்து நம் காரியம் வெற்றிபெற என்ன செய்யலாம் என்று யோசியுங்கள், சிந்தித்து செயலாற்றுங்கள் ஒன்று சேருங்கள் குரல் கொடுங்கள்.

  தமிழர்களின் உணர்வுகளை நாளைய சரித்திரம் சொல்லட்டும்.
  நன்றி.

 12. KSK

  Charles அந்தோனி,

  உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலியா ?. சீமான் அந்த அளவுக்கு ஒரு பெரிய ஆளா?. சும்மாதான் அவரை தூக்கி விட பாக்கிறீங்க…

  நாடு நிலையா யோசித்து எழுதுனா, அரசியல் அறிவு இல்லே, சீமான பிடிக்காதுன்னு சொல்லறீங்க.

  சரி உங்க சந்தோசம்.. எப்படியோ , அப்படியே நினைத்து கொள்ளுங்கள்

 13. tHUVARAKA

  எதுப்பா நடு நிலை…. தமிழ் நாட்டில் உங்கந்து கொண்டு ஆய்வு கட்டுரை… எழுதுற உங்களுக்கு மத்தவங்கள் பேசுறது.. பக்க சார்பக தான் தெரியும்… ஈழ மண்ணில் வாழ்ந்து எங்கள் வீடு உறவுகள் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவில் நிற்கும் எங்களுக்கு தெரியும்…. யார் எங்களுக்காக உண்மையாக குரல் கொடுக்குறங்கள்… யார்… சும்மா வார்த்தையிலும், எழுத்திலும் மட்டும் எங்கள் வேதனை பற்றி பேசுரங்கள் என்று.
  ஏன்யா… கருணாநிதியும், ஜெயலலிதாவும் முதல்வர்களாகும் போது சீமான் முதல்வர் ஆகுவதில் என்னே தப்பு? இப்ப சீமான் சொல்வதையே ரஜனி சொல்லி இருந்தால்….. தலைவர் சொல்லிவிட்டர்னு… ஜெ போட்டு இருப்பேங்கள்…. சீமானுக்கு SUPPORTA எத்தனையோ பேர் சேரும் போது நீங்கள் இப்படி… எதிர்ப்பத பார்த்தா எதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு சீமான் பிடிக்க வில்லை என்று தான் சொல்ல தோன்றுது.

  தமிழர்களின் உணர்வுகளை நாளைய சரித்திரம் சொல்லட்டும்.

 14. kumar

  சீமான் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்? ஒருவரை தேவையின்றி குறை சொல்லி விட்டு நடு நிலைமை என்றால் எப்படி?

  இல்லை எனில் , சீமானை கைது செய்து விசாரிக்கும் போது அருகில் இருந்து பார்த்தீர்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *