BREAKING NEWS
Search

கைட்ஸ், ராவணன் தோல்வி… ரிலையன்ஸ் பிக் நிறுவனத்துக்கு நஷ்டம் ரூ 100 கோடி!

ரிலையன்ஸ் பிக் நிறுவனத்துக்கு நஷ்டம் ரூ 100 கோடி!

கைட்ஸ், ராவணன் என அடுத்தடுத்து இரு பெரிய படங்களின் வீழ்ச்சி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ 100 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிச்சயம் இவ்வளவு பெரிய அடியை எதிர்ப்பார்த்திருக்காது என்பதுதான் பாலிவுட் முழுக்க பேசப்படும் விஷயமாக உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது.

ஆரம்பத்தில் ரூ 54 கோடிக்கு இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்கப் பேசி வந்தது ரிலையன்ஸ். ஆனால் படம் குறித்த எதிர்மறை செய்திகள் பரவியதும் ரூ 40 கோடி மட்டுமே கிடைத்தது.

கைட்ஸ் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 60 கோடி எனக் கூறப்படுகிறது.

பிக் பிக்ஸர்ஸ் அடுத்து மெட்ராஸ் டாக்கீஸுடன் கூட்டாக மூன்று மொழிகளில் தயாரித்துள்ள ராவணன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தயாரிப்புச் செலவு ரூ 100 கோடி என்று கணக்கு காட்டியுள்ளனர். மூன்று மொழிகளிலும் சேர்த்து ராவணன் வசூல் ரூ 53 கோடி என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ரூ 40 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பெரும் நஷ்டங்கள் மூலம் அதிர்ச்சியடைந்துள்ள ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ், தனது அடுத்தடுத்த படத் தயாரிப்புகளை தள்ளிப் போட்டுள்ளதாக மும்பை மீடியா தெரிவித்துள்ளது.

மை நேம் ஈஸ் ராவண்… ராவண் கி குர்பான்… கலாய்க்கும் ராம்கோபால் வர்மா!

ந்தியில் இன்றும் புத்தம் புதுப் படைப்பாகத் திகழும் ஷோலே படத்தை ஆக் எனும் பெயரில் ரீமேக் செய்தார் ராம் கோபால் வர்மா, சில ஆண்டுகளுக்கு முன்பு. அமிதாப்பை கப்பர் சிங் வேடத்தில் நடிக்க வைத்தார். படம் படு பிளாப். ஷோலே எப்படி பிரமாண்ட வெற்றிப் படமோ, அப்படி பிரமாண்ட தோல்விப் படம் ஆக்.

பெரிய படங்கள் தோற்றுப் போனால் உடனே அதை சம்பந்தப்பட்ட இயக்குநரின் பெயரைக் குறிப்பிட்டு ‘அவருக்கு அமைந்த ஆக்’ என்று கிண்டலடிப்பார்கள். இப்போது மணிரத்னத்தின் ஆக் என்று ராவண் இந்திப் படத்தை கிண்டலடிக்கிறார்கள்.

இதுபற்றி ராம்கோபால் வர்மா தனது ட்விட்டரில் எழுதியுள்ளார். கூடவே இதுதான் சமயமென்று தனது எதிரியாகக் கருதும் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “தோல்வியின் சிகரமாக எனது ஆக் படம் அமைந்துவிட்டது. யார் படம் தோற்றாலும் உடனே அதை அவர்களது ஆக் எனக் கூறுகிறார்கள். ஒப்புக் கொள்கிறேன். கைட்ஸ் தோற்றது… உடனே அதை ஹ்ரித்திக் ரோஷனின் ஆக் என்றார்கள், மணி ரத்னத்தின் ராவண் தோற்றுவிட்டது. அதை மணியின் ஆக் என்கிறார்கள். ஸோ… எனது படம் தோல்விக்குக் கூட பெஞ்ச் மார்க்காக உள்ளது.

இப்போது எனக்கு ஒரு சின்ன யோசனை… மணியின் ராவணனை மை நேம் ஈஸ் ராவண் என நான் ரீமேக் செய்கிறேன். எனது ஆக் படத்தை ராவண் கி குர்பான் என மணி ரீமேக் செய்யட்டும்… என்ன ஆகிறது என்று பார்க்கலாம்” என்றார்.

குர்பான், மை நேம் ஈஸ் கான் இரண்டுமே கரண் ஜோஹரின் படங்கள். அவை தோல்விப் படங்கள் என சொல்லிக் காட்ட இந்த ட்விட்டர் செய்தியை ராம்கோபால் வர்மா எழுதியுள்ளார்.

ஆனால் இதைப் பார்த்து சும்மா இருக்கவில்லை கரண் ஜோஹர். ” உனக்கு ரொம்ப காமெடி சென்ஸ் இருக்கு ராமு.. ஆனா அதை உன் படத்துல ஒருபோதும் காட்டியதில்லையே!” என்று பதிலுக்கு வாரியுள்ளார்.

அமிதாப்புக்கு என் நம்பர் தெரியுமே! -மணிரத்னம்

ராவண் படத்தின் எடிட்டிங் மோசம்… அதனால்தான் படம் குழப்பாக உள்ளது. படத்துடன் ஒன்று முடியவில்லை என அமிதாப் பகிரங்கமாக விமர்சித்திருந்தார் அல்லவா…

இதற்கு மணிரத்னம் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “அமிதாப் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். இணையதளத்தில் குறிப்பிடுவதற்கு முன்னதாக அந்தக் கருத்தை என்னிடம் அவர் போனில் கூறியிருக்கலாம். என் போன் நம்பர் அவரிடம் உள்ளது.

படத்தைப் பற்றி கருத்து கூற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. எப்போதுமே ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தருகிற நான், அவர்களுடைய கருத்தையே ஏற்றுக்கொள்வேன்.

‘ராவணன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்த அடுத்த 6 வது நிமிடத்திலேயே ராவணன் கதையுடன் ஒன்றி விடுகிறார்கள் ரசிகர்கள். இந்தியா முழுக்க ரசிகர்களின் ரசனை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ரசிக்கப்படும் காட்சிகள்தான் மும்பையிலும் ரசிக்கப்படுகிறது”, என்றார்.
8 thoughts on “கைட்ஸ், ராவணன் தோல்வி… ரிலையன்ஸ் பிக் நிறுவனத்துக்கு நஷ்டம் ரூ 100 கோடி!

 1. கிரி

  //அமிதாப் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். இணையதளத்தில் குறிப்பிடுவதற்கு முன்னதாக அந்தக் கருத்தை என்னிடம் அவர் போனில் கூறியிருக்கலாம். என் போன் நம்பர் அவரிடம் உள்ளது//

  இருக்கட்டுமே! 🙂

  வலைப்பதிவர்கள் கொள்கைப்படி!! தனிப்பட்ட முறையில் பேசினால் கூட அதை(கூட)யும் பதிவில் போட்டு மானத்தை வாங்குவது ஒரு பதிவை கூட்டுவது தான் வழக்கம் 😉

  So now Amithap has proved he is a professional !!! blogger LoL

  மணி சார் போன் பேசுவது எல்லாம் அந்தக்காலம் இப்பெல்லாம் ட்வீட்டு ரிப்பீட்டு னு போறாங்க! நீங்களும் ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கி இதற்கு பதில் சொல்லுங்க 🙂

 2. sakthika

  ஆணைக்கும் அடி சறுக்கும் ……………. மணிக்கும் படம் சறுக்கும் ……………..

 3. parthiban

  @ ரப்பானி

  இப்படி செய்தி பறிப்பி விட்டால் வரி கட்டாமல் தப்பி விடலாம் என்று உங்களுக்கு யார் சொன்னது??? ஆயிரம் டயலாக் விட்டாலும் நாளைக்கு அக்கௌண்ட்ஸ் புக்ஸ் தான் பேசும்…

  (அதை எப்படி சரி செய்வது என்பதும் அவர்களுக்கு தெரியாமல் இல்லை)

  என்றும் அன்புடன்,
  நெ. பார்த்திபன் .
  http://parthichezhian.blogspot.com/

 4. Manoharan

  ஆனால் நம்ம ஊரில் ராவணனுக்கு இன்னும் கூட்டம் நன்றாக இருக்கிறதே.
  தமிழில் இது தாக்கு பிடித்துவிடும் போலத்தான் தெரிகிறது. பார்ப்போம்.

 5. bala

  பாவம் மணி இன்னும் உனக்கும் உன் பொண்டாட்டி கு வெளி நடப்பு விஷயம் குட தெரியல அட சி உன் படம் எங்க ஊருல 4 நாள் குட ஓடல வெட்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல படம் நல்ல இருக்குனு உன்ன எல்லாம் ஜோட்ட ல — தொட்டு அடிக்கணும்

 6. M.S.Vasan

  //பெரிய படங்கள் தோற்றுப் போனால் உடனே அதை சம்பந்தப்பட்ட இயக்குநரின் பெயரைக் குறிப்பிட்டு ‘அவருக்கு அமைந்த ஆக்’ என்று கிண்டலடிப்பார்கள். இப்போது மணிரத்னத்தின் ஆக் என்று ராவண் இந்திப் படத்தை கிண்டலடிக்கிறார்கள்//
  நாங்க ‘ஆக்கர்’ அடுச்சுட்டான்லேன்னு பம்பர ஆட்டத்துல சொல்லுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *