BREAKING NEWS
Search

கேன்சர் ‘பரிசு’ தரும் செல்போன்கள்!

கேன்சர் பரிசு தரும் செல்போன்கள்!

செல்போன்கள் இல்லாமல் வாழ முடியுமா என இன்றைய தேதிக்கு யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன்… கேட்டவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, காதில் செல்போனை இன்னும் அழுத்தமாகப் பதித்தபடி பேசிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

சாலையில் வண்டி வருகிறது, எருமை வருகிறதா என்றெல்லாம் கூட கவனிக்கிற நிதானமின்றி செல்போனில் வாய்களை பிஸியாக்கிக் கொண்டு நடக்கிற பெண்கள் ஏராளம்.

அவர்களுக்காகத்தான் இந்த செய்தி….

செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்ற முந்தைய ஆராய்ச்சி முடிவு 100 சதவீதம் உண்மையானதே என நிரூபித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

செல்போன் இன்று உலகின் தவிர்க்க முடியாத சமாச்சாரம். வல்லரசு, நல்லரசு, ஏழை அரசு என்ற பேதங்கள் ஏதுமின்றி, சோமரசம் பேட்டையிலிருந்து சோமாலியா வரை எங்கும் கொடிகட்டிப் பறக்கிறது செல்போன் பிஸினஸ்.

உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதனால் நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு… வாய் பிளக்க வைக்கிறது. ரூ. 150 லட்சம் கோடி!

செல்போன் பயன்பாட்டால் கிடைக்கும் நன்மைகளுக்கு இணையாக தீமைகளையும் அவ்வப்போது எடுத்துச் சொல்லி வருகிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் அவையெல்லாம் பெரும்பாலும் செவிடன் காது சங்கு சமாச்சாரம்தான்.

ஆனால் இப்போது வீசப்பட்டுள்ள கேன்சர் அஸ்திரம் பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டதல்ல… முழுவதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவிஸ், “செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் மூளையில் கட்டி மற்றும் புற்று நோய் ஏற்படும்.

இதை தவிர உடலில் உள்ள நுண்ணிய உறுப்புகள் பலவற்றின் இயக்கங்களும் பாதிக்கும். டிஎன்ஏ அமைப்பில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

அதனால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். இது தொடர்பாக அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ‘ஆன்’ செய்யப்பட்ட நிலையில் செல்போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு விரைவிலேயே உயிரணு எண்ணிக்கை குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை நாம் உருவாக்க முடியாது.

இதையெல்லாம் விட முக்கியம், செல்போனால் பெண்களுக்கு வரும் தொல்லைகள்தான். பெரும்பாலான பெண்கள் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் 3 மணி நேரம் கூட செல்போனில் பேசுகின்றனர். இவர்கள் உடனடியாக புற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.

இவர்களின் கருமுட்டையில் போதிய உயிரணுக்கள் இல்லாமலும் போகும். ஏற்கெனவே மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டு, அவமானத்துக்கு உள்ளாகி வரும் பெண்கள், அதிக செல்போன் பயன்பாடு காரணமாக மேலும் விரைவில் மலட்டுத்தன்மையை அடைகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இவர் The Secret History of the War on Cancer என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் எந்த அளவு கேன்சர் நோய்க்கு காரணமாகிறது என்ற உண்மையைச் சொல்லும் புத்தகம் இது.

செல்போனால் வரும் கேன்சர் குறித்து தான் கண்டறிந்த பல உண்மைகளையும் ‘டிஸ்கனெக்ட்’ என்ற புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளார் தேவ்ரா டேவிஸ்.

புத்தகத்துக்கு மட்டுமல்ல, எலக்ட்ரானிக் குப்பைகள் நிறைந்த இன்றைய சூழலுக்கே ரொம்ப பொருத்தமான தலைப்புதான்!
2 thoughts on “கேன்சர் ‘பரிசு’ தரும் செல்போன்கள்!

  1. Manoharan

    8 வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செல் பேசும் பழக்கம் எனக்கு இருந்தது . அதன் காரணமாக தலைவலி அடிக்கடி வர ஆரம்பித்தது. செல் பேசுவதை நிறுத்தினால் தலைவலி வருவதில்லை. இதை கோவையில் உள்ள புகழ் பெற்ற டாக்டரிடம் சொன்னபோது செல்போனால் தலைவலி வருவது நிரூபிக்கப்படவில்லை எனவும் , எனக்கு வந்திருக்கும் தலைவலி Stress and Depression காரணமாக வந்திருக்கிறது எனவும் கூறினார். ஆனால் எனக்கு காரணம் தெரிந்துவிட்டது . அதிலிருந்து செல்போன் பேசுவதை குறைத்துக்கொண்டேன் . ஆனால் தலைவலி தொடர்ந்தது. பின் தலையில் MRI Scan எடுத்துப் பார்த்தேன் . ஒன்றும் பிரச்சனையில்லை. இப்போது அதே டாக்டர் தொடர்ந்து செல் பேசியதால் என் இடது பக்க மூளையில் Coating போன்று இருக்கும் ஒன்று உரிந்து வந்துவிட்டதாகவும் அதனால் செல் பேசுவதை குறைத்துக் கொள்ளுமாறும கூறியிருக்கிறார். கடந்த 4 வருடங்களாக என்னால் இடது பக்கம் ஒரு அளவுக்கு மேல் சத்தத்தை கேட்கமுடியாது. அவ்வளவு ஏன், காரில் போகும்போது இடது பக்கம் அமர்ந்திருக்கும் என் மனைவி தொடர்ந்து 10 நிமிடம் பேசினால் தலையும் காதும் வலிக்க ஆரம்பித்துவிடும். அது நான் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய வலி. இப்போது நான் நினைத்தாலும் இடதுபுறம் செல் பேச முடியாது. நாம் நினைப்பதைவிட செல் போன் பாதிப்புகள் மிக அதிகம்.

    _________________

    Please write it as an article Manohar. It will useful to all our friends.

    -Vino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *