BREAKING NEWS
Search

கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத ‘தலைவர்’!

ரஜினி 60 ஸ்பெஷல்-1: திருச்சி ரசிகர்களின் அசத்தல் திட்டங்கள்!

கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத இந்திய கலாச்சாரத்தின் கண்ணியமே பல்லாண்டு வாழ்க..!’ இப்படி ஒரு பஞ்ச் தலைப்பு வைத்து, 80 அடி நீளம், 7 அடி உயரத்துக்கு திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள 66 பிட் போஸ்டர்தான் இப்போது திருச்சி நகரப் பரபரப்பு!

01Draji3 copy

ரஜினி தொடர்புடைய சாதாரண நிகழ்ச்சியிலிருந்து பட வெளியீடு வரை போஸ்டர்கள், பேனர்கள் வைப்பதில் தூள் கிளப்புபவர்கள் திருச்சி மன்றத்தினர். படம் வெளியாகும்போதே இப்படி அசத்துபவர்கள், தலைவர் ரஜினியின் 60 வது விழா… மணி விழா எனும்போது சும்மா இருப்பார்களா…

விளம்பரம் மட்டுமல்ல, ரஜினி 60 சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிலும் மூக்கில் விரல் வைக்குமளவு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் தங்கள் மாவட்டத் தலைவர் கர்ணன் தலைமையில்.

நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதத்துக்கு ‘தலைவர் 60’ எனும் பெயரில் திருவிழாவே கொண்டாடுகிறார்கள் இந்த நண்பர்கள்.

கோயில்களில் ரஜினி குடும்பத்தின் பெயரில் ஒரு மாதத்துக்கு சிறப்புப் பூஜை, அன்னதானம் போன்றவை ஒரு பக்கமிருக்க, ஏழை முதியோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு அரசு செய்யும் உதவிகளை இந்த ரசிகர்களே தங்கள் சொந்த உழைப்பில் செய்கிறார்கள் என்பது நிஜமாகவே பிரமிக்க வைக்கும் சமாச்சாரம்.

01Draji1 copy

தங்கள் சொந்தப் பணத்தை (இதற்காகவே சீட்டுக் கட்டி சேர்த்திருக்கிறார்கள்!) இந்த நற்பணிகளுக்கு செலவிடுகிறார்கள், ரஜினி என்ற நல்ல மனிதரின் பெயரில்.

இங்கே நீங்கள் பார்க்கும் இந்தப் போஸ்டரை வடிவமைத்ததிலிருந்து ஒட்டப்படும்வரை உடனிருந்து கவனித்துக் கொண்டவர்கள் திருச்சி ரசிகர் மன்ற அமைப்பாளர்கள் தென்னூர் உதயா மற்றும் ராயல் ராஜ்.

இவர்களுடன் மன்றத்தின் பிற ரசிகர்களும் இணைந்து நற்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இத்தனை பெரிய போஸ்டர் அடித்திருக்கிறீர்களே… மற்றவர்கள் விமர்சிக்க மாட்டார்களா? என்ற கேள்விக்கு ராயல் ராஜ் நம்மிடம் கூறிய பதில் அர்த்தமுள்ளது…

“நல்ல விஷயத்தை முடிந்தவரை நாலுபேருக்கு பரப்பணும்… தலைவர் கொள்கை அது. நம்ம தலைவரோட நல்ல குணங்களை முடிந்தவரை பெரிய அளவில் வெளிச்சம் போடணும். அது இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமா அமையும். திரைத்துறையில் தலைவர் ரஜினியைப் போன்ற கண்ணியமிக்க, அயராத உழைப்புமிக்க, தனிமனித ஒழுக்கம் நிறைந்த, நற்சிந்தனை கொண்ட மனிதரைப் பார்ப்பது மிகவும் அரிது. திரையில் அவர் ஆயிரம் கெட்டப்புகள் போட்டாலும், வாழ்க்கையில் அவருக்கு ஒரே கெட்டப்தான்… அது அற்புதமான மனிதன். அந்த மனிதனுக்கு ஏதோ எங்களாலான மரியாதையைக் காட்டுகிறோம் இப்படி…!” என்றார்.

நெத்தியடி போங்க!

குறிப்பு: தர்மத்தின் தலைவன் ரஜினிகாந்த் அறக்கட்டளை எனும் பெயரில் திருச்சி மாவட்ட ரசிகர்கள் மேற்கொள்ளவிருக்கும் நற்பணிகளின் முழு விவரங்களும் அடுத்த பதிவில்…

-வினோ
12 thoughts on “கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத ‘தலைவர்’!

 1. jawahar

  நம்ம தலைவரோட நல்ல குணங்களை முடிந்தவரை பெரிய அளவில் வெளிச்சம் போடணும். அது இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமா அமையும். திரைத்துறையில் தலைவர் ரஜினியைப் போன்ற கண்ணியமிக்க, அயராத உழைப்புமிக்க, தனிமனித ஒழுக்கம் நிறைந்த, நற்சிந்தனை கொண்ட மனிதரைப் பார்ப்பது மிகவும் அரிது. திரையில் அவர் ஆயிரம் கெட்டப்புகள் போட்டாலும், வாழ்க்கையில் அவருக்கு ஒரே கெட்டப்தான்… அது அற்புதமான மனிதன். அந்த மனிதனுக்கு ஏதோ எங்களாலான மரியாதையைக் காட்டுகிறோம்

 2. ரஞ்சன்

  நல்ல ரசிகனுக்கு அழகு, எதையும் எதிர்பார்க்காமல் தலைவர் வழியில் நன்மைகளைச் செய்வதுதான். நிச்சயம் பலனிருக்கும். அதுச சந்தேகமே வேணாம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் கர்ணன், உதயா அண்ட் ராயல் ராஜ்.

 3. naren

  திருச்சி ரஜினி ரசிகர்கள் எப்போதும் கலக்கல் தான்… its a special festival

 4. r.v.saravanan

  கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத இந்திய கலாச்சாரத்தின் கண்ணியமே பல்லாண்டு வாழ்க..!’

  dialague super………

  kalakunga thiruchi rasigargaley

 5. r.v.saravanan

  தங்கள் சொந்தப் பணத்தை (இதற்காகவே சீட்டுக் கட்டி சேர்த்திருக்கிறார்கள்!) இந்த நற்பணிகளுக்கு செலவிடுகிறார்கள், ரஜினி என்ற நல்ல மனிதரின் பெயரில். போஸ்டர் ஒட்டப்பட vendum

  ஏழை முதியோர்களுக்கும், makkalukkum, மாணவர்களுக்கும் niraiya seiyungal

  congrats

 6. vijay

  இந்தப் போஸ்டரை வடிவமைத்ததிலிருந்து ஒட்டப்படும்வரை உடனிருந்து கவனித்துக் கொண்டவர்கள் திருச்சி ரசிகர் மன்ற அமைப்பாளர்கள் தென்னூர் உதயா மற்றும் ராயல் ராஜ்.

  ALL THE BEST AND THANKS TO ALL
  From CHIDAMBARAM THALAIMAI MANDRAM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *