BREAKING NEWS
Search

குஷ்புவை வரவேற்கும் முதல் ஆள் நானே! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

குஷ்புவை வரவேற்கும் முதல் ஆள் நானே! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

டிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி… அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் சுதர்ஸனமும் குஷ்புவை வரவேற்று பேட்டியளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு வரவேண்டும். அவருக்காகக் கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறோம் என்று கூவிக் கூவி அழைக்க ஆரம்பித்துள்ளனர் அக்கட்சியின் தலைவர்கள்.

குறிப்பாக, மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சிக்கு வர முழு தகுதியுடையவராகிவிட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் இரு தினங்களுக்கு முன் பேட்டியளித்தனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரம் போன்ற பல விஷயங்களில் குஷ்புவின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறதாம்.

குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

குஷ்பு காங்கிரசில் சேர்ந் தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.

குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சினைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப் படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.

பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர்…,” என்றார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், “நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன்.

குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும்…” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் குஷ்புவை காங்கிரசுக்கு வரவேற்று உள்ளார்.

கோபத்தில் கோபண்ணா!

ஆனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஏ.கோபண்ணா குஷ்பு கருத்தை விமர்சித்து உள்ளார். அவர் கூறியதாவது:

திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்சநீதி மன்றமd உறுதிபடுத்தி உள்ளது.

சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டு மானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது…” என்றார்.
8 thoughts on “குஷ்புவை வரவேற்கும் முதல் ஆள் நானே! – ஈவிகேஎஸ் இளங்கோவன்

 1. குமரன்

  குஷ்புவுக்குத் திருமணம் ஆகி இரு அருமையான குழந்தைகள் இருப்பது இவர்களுக்குத் தெரியாதா?

 2. Muthu

  இவனே ஒரு உருப்படாத நாய்…. பெரியாரின் பேரை கெடுக்க பிறந்த கருங்காலி! இவன் எண்ணமெல்லாம் பெண்கள் மீதும், பொன்கள் மீதும் தான் இருக்கும்………..

  இவனை கண்டாலே எனக்கு பற்றிக் கொண்டு வருது……….த்த்தூதூ………….

 3. palPalani

  வாத்தியார் மகன் மக்கு…
  போலீஸ்காரர் மகன் திருடன்…
  நல்ல தலைவனின்(EVKS) மகன் செம்ம ஜால்ரா மன்னன்…

 4. reja

  ஈவீகேஎஸ் அவர்களே காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்பதற்கு வேறு ஆளே இல்லையா போயும் போயும் ஒரு கூத்தாடி தான் கிடைச்சால.

 5. raja

  ஈவீகேஎஸ் அவர்களே காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்பதற்கு வேறு ஆளே இல்லையா போயும் போயும் ஒரு கூத்தாடி தான் கிடைச்சால.

 6. அத்திக்கடைs.m.அசரப் அலி

  ஈவிகேஎஸ் இளங்கோவன் சார் அந்த வண்டி நல்லா ஆக்ஸிடெண்ட் ஆன வண்டி இப்போ அது பிஸாம ஒரு இடத்தில் பார்க்கு பன்னி இருக்கு அந்தவண்டி ஸ்டாடாவும் என்று நம்பி அதில் பிரயாணம் செய்ய வேண்டாம் பின்னால அதால பெறிய பிறச்சினை வரும்.

 7. Kusuvini

  அவல வரவேற்கிறது சரி… எங்க வரவேற்பரைக்கா? இல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *