BREAKING NEWS
Search

குமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்!

குமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்! – கேள்வி பதில் பகுதி

மீண்டும் குமுதமும் விகடனும் ஆரம்பித்துவிட்டார்களே… தயவு செய்து இந்தச் செய்திகளில் எந்த அளவு உண்மை என்று தலைமை மன்றத்தில் விசாரித்து சொல்லவும்…!

எம் மாரியப்பன், ரசிகர், தூத்துக்குடி

03

அந்தக் கட்டுரையின் முகப்பு படம்...

வேறொன்றுமில்லை… எந்திரன் ரிலீஸ் நெருங்குகிறதே.. என்ற ஒற்றை வரி பதிலே இதற்குப் போதும்தான்.

இருந்தாலும் இதற்கு விரிவான பதிலாக இன்று ‘ரஜினிபேன்ஸ் டாட்காம்’ தளத்தில் வெளியாகியுள்ள விளக்கம் மற்றும் தலைமை மன்ற நிர்வாகி சுதாகரின் பதிலையே உங்களுக்கும் தர விரும்புகிறேன்.

வார – மாத – புலனாய்வுப் பத்திரிகைகளில் ரஜினியைப் பற்றி வரும் சாமர்த்திய ஜோடிப்புகளைப் படித்து, அதை தலைமை மன்றத்திடம் விசாரித்து பதிலெழுதி நமக்கே களைப்பாகிவிட்டது… அதேநேரம் தலைவர் இதுபோன்ற கட்டுரைகள் மற்றும் ஜோடிப்புகளுக்கு விளக்கம் சொல்லாமல் தன்வழியில் போய்க் கொண்டே இருப்பதன் அர்த்தமும் புரிந்தது…

குமுதம் ரிப்போர்ட்டர், ரஜினி வெளி மாநிலத்தில் போய் ரகசியமாக 60ம் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கட்டுரை வெளியிட, அடுத்த நாளே குமுதம் வார இதழ் இன்னொரு கவர் ஸ்டோரி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையிலும் Pucca Misleading மட்டுமே நோக்கமாக இருக்கிறது.

தலைவர் படப்பையில் ஆஸ்ரமம் கட்டுவதாகவும், எந்திரன் மட்டுமே அவரது கடைசிப் படம் என்றும் கட்டுரை தெரிவிக்கிறது.

எந்திரனுக்குப் பிறகு, அமைதியாக தலைவர் இந்த ஆஸ்ரமம் பக்கம் ஒதுங்கிவிடுவார் என்றும், தனது ரசிகர்களையும் அவர் ஆன்மிகத்துக்கே இழுக்கப் போகிறார் என்றும், ரஜினியின் கூடவே இருந்து கவனித்தவர்கள் மாதிரி புனைந்து தள்ளியிருக்கிறார்கள்.

ரஜினி ஆஸ்ரமம் கட்டுவதும், ஆன்மீகத்தை நேசிப்பதும் ரசிகர்களுக்குப் புதிய விஷயமல்ல. இவை பல பத்திரிகைகளில் வெளியாகிவிட்ட செய்திகள். இதற்கும் அவரது எதிர்கால திட்டங்களுக்கும் தேவையற்ற முடிச்சுக்களைப் போட்டுக் குழப்பி வருகின்றன பத்திரிகைகள். அதுவுமில்லாமல் தனது ஆன்மீகத்தை அவர் பப்ளிசிட்டி ஸ்டன்டாக பயன்படுத்தியதில்லை. யார் மீதும் திணிக்கவும் இதுவரை முற்பட்டதில்லை. அரசியல், மதங்கள், கடவுள்களைத் தாண்டிய ரசிகர்களே அவரைச் சுற்றி இருப்பவர்கள் என்ற அடிப்படையைக் கூட இவர்கள் புரிந்து கொள்வதில்லை!

‘எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து தலைவர் டப்பிங் வரை போய்விட்டார்’ என படத்தின் பிஆர்ஓ நிகில் கூறியுள்ளார். எனவே படம் வெளியாகும் தருணத்திலோ, வெளியான பிறகோ தலைவர் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அவரவர் மனதுக்கேற்ப கதைகள் புனைந்து வருகிறார்கள்.

தேவையற்ற, கற்பனையான விஷயங்களைப் பெரிதாக்கி, உள் நிலவரம் என்னவென்று தெரியாத ரசிகர்களை கற்பனையான உலகத்தில் மிதக்கவிட்டு, படம் வெளியாகிற தருணங்களில் வேண்டுமென்றே தாக்குதலைத் தொடுப்பது இவர்களின் சமீபத்திய ட்ரெண்ட். ரசிகர்கள் சரியான புரிதலோடு இருக்க வேண்டும்.

இது குறித்து தலைமை மன்ற நிர்வாகி சுதாகரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

“எந்த விஷயமாக இருந்தாலும் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார். இந்த கட்டுரைகள் பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை, அவை முற்றிலும் கற்பனையானவை என்பதைத் தவிர!” என்றார் பளிச்சென்று!

குறிப்பு: குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் பக்கங்களை நமக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர் மாரியப்பனுக்கு நன்றி.

******

வினோ-

உசுப்பேற்ற வேண்டாம், கொஞ்சம் விசாரித்துவிட்டுச் சொல்லுங்கள்… எந்திரன் ஏப்ரல் வெளியீடா?

சுரேஷ்குமார், திருச்சி

SS-thalaivar-2

தை இப்போதே சொல்வது கஷ்டம். ஆனால் சன் பிக்சர்ஸ் வைத்திருக்கும் லைன்அப்பைப் பார்த்தால் அதற்கு வாய்ப்புகள் குறைவு. காரணம் வேட்டைக்காரன், ஜக்குபாய் உள்ளிட்ட 4 படங்களுக்கு தலா ஒரு மாதமாவது அவர்கள் விளம்பரம் தந்து கரையே(ற்)ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் எந்திரனுக்காக எந்த லைன்அப்பும் மாறும்!

******

மிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழியே இல்லையா… இன்னும் எத்தனை காலத்துக்கு பிரியாணி, குவார்ட்டருக்கு தங்களை விற்றுக் கொள்ளப்போகிறார்கள் வாக்காளர்கள்? (உடனே. ரஜினி வந்தால் மாறும் என்று கூறி கடுப்பேற்றாதீர்கள்!)

ஷண்முகராஜன், திருமுல்லைவாயல், சென்னை

rajini1

நிச்சயம் இப்போதைக்கு இல்லை. குறைந்தது இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளதல்லவா! (நீங்க எதிர்ப்பார்த்த பதிலை நான் சொல்லவே இல்லையே!!)

-வினோ
6 thoughts on “குமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்!

 1. m.mariappan.

  Dear Sir,

  Thank you for your quick response about kumutham issue.
  All rajini fans known about our thalaivar.
  Your given clearly answer to our friends. It’s enough for all questionor.

  We should follow to only our thalaivar.

  BY
  M.MARIAPPAN.
  TUTICORIN RAJINI FANS OCEAN

 2. r.v.saravanan

  appada…. mendum question and answer

  thanks vino please continue in question and answer in daily

  yen solrenna unga kuda talk pandradu pol irukku

 3. kikk

  waste guys always saying thaliva . He is getting cores of ruppes by acting. we wasting by seeing . some intellectual wasting their life by saying thaliva . god waste save you

 4. கிரி

  Kikk நீங்க சொல்வது ஒண்ணுமே புரியலையே!

  Kikk நீங்க சொன்னதை படித்து தலை கிர்ர்ர் னு இருக்கு

 5. Shankar

  மீண்டும் கேள்வி பதில். நன்றி என்வழி ஆசிரியரே. கிட்டத்தட்ட லஞ்சம் கொடுத்து ஓட்டுப் பெறுவது என்பது முறையாகவே ஆக்கிவிட்டனர் (திருமங்கலத்திற்கு பின்னர்). ஒன்றரை வருடங்களில் ஒன்றுன் முன்னேராது….இருக்கவே இருக்கிறார் அண்ணன் நவீன் சாவ்லா..
  ஐயா க்கிக் என்ன சொல்ல வர்ரீர்…எங்களுக்கு பிடித்தவர்களை தலைவர் என்று சொல்வது , உங்களுக்கு வேஸ்ட் என்றா? இனிமேல் தமிழில் எழுதவும். உங்கள் ஆங்கிலம் புரிந்து கொள்ள கடினமாக இருக்கு…

 6. Duppuku

  ஹலோ kikk,
  எங்க தலைவர தலைவர்ன்னு குப்பிடறோம், உங்களுக்கு ஏன் அய்யா காண்டு.

  கேள்வி பதில்கள் அப்படியே தலைவர் ஸ்டைல்-ல். சூப்பர் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *