BREAKING NEWS
Search

கிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்!

கிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்!

கிஷோர் குமார்…

இந்தியா தவமிருந்து பெற்ற கலைஞர்களில் முதன்மை நாயகன் இவர். இவரது குரலுக்கு இனம், மதம், மொழிகளைக் கடந்து இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பல கோடி ரசிகர்கள்.

19thanniv

1929-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி வங்காளத்தில் பிறந்து, 40 ஆண்டுகள் இந்தி இசையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த இந்த மாபெரும் கலைஞனை, 1987, அக்டோபர் 13-ம் தேதி கலைமகள் மீண்டும் தன்னிடமே அழைத்துக் கொண்டாள்…

ஆனால், நல்ல இசை ரசிகர்கள் அவர் இசையுடனே இன்னும் வாழ்கிறார்கள்.

நவரசங்களையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ தன் குரலில் அமுத மழையாய் பொழிந்துவிட்டுச் சென்ற அற்புதமான பாடகர் கிஷோர் குமார்.

அவர் மரணத்துக்குப் பின் பிறந்து, இன்று இளைஞர்களாய் துள்ளித் திரிபவர்களும்கூட அவரது குரலுக்கு அடிமையாகி, ‘கிஷோர் தா’ என செல்லமாய் அழைப்பதைக் கேட்டு இதயம் சிலிர்க்கிறது.

கிஷோர் குமார் – ராகுல் தேவ் பர்மன் (ஆர் டி பர்மன்) இருவரும் இந்திய இசையில் படைத்த சாதனைகளுக்கு இணையே இல்லை. காலத்தை வென்ற எத்தனை எத்தனை பாடல்களை இந்த இரு மேதைகளும் படைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்…!

மிகுந்த கலகலப்பும், நகைச்சுவை உணர்வும் கொண்ட இந்த மாபெரும் கலைஞன் எந்த சூழலிலும் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவராகத் திகழ்ந்தார்.

இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்ஸியை  எதிர்த்தவர் கிஷோர் குமார். அதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது, இருமுறை வேறு பாடகர்களுக்குத் தரப்பட்ட கொடுமை இந்த நாட்டில்தான் அரங்கேறியது.

ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக, இயக்குநராக, பாடலாசிரியராக… பன்முகம் கொண்ட கலைஞன்.

இன்று அவரது 80 வது பிறந்த நாள். இசையுலகில் என்றும் சிறந்த நாள்!

அந்த இசை மேதையை நினைவு கொள்ள சில இனிய பாடல்கள். மொழி எல்லைகளை மறந்து இசையெனும் பெருவெளியில் எல்லையில்லா இன்பம் காணுங்கள்!

கிஷோர் குமார் ஆட்டோகிராஃப்!

கிஷோர் குமார் ஆட்டோகிராஃப்!

ந்தத் தொகுப்பில் வரும் முதல் பாடல் இடம் பெற்ற படம் ஆந்தி (Aandhi). சஞ்சீவ் குமார் – சுசித்ரா சென் நடித்த, பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம். ஸ்லம்டாக் மில்லியனேருக்காக ஆஸ்கார் விருது பெற்ற குல்சார்  எழுதி இயக்கித் தயாரித்த படம். இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் பல தடைகளைச் சந்தித்து வெளியானது ஆந்தி.

உலகின் மிகச் சிறந்த பத்து பாடல்களில் நிச்சயம் இந்தப் பாடலுக்கு ஒரு இடம் இருக்கும். அத்தனை மென்மை, இதயத்தை வருடம் மெல்லிய சோகம் ததும்பும் பாடல். கிஷோர் குமார் – ஆர் டி பர்மன் – குல்சார் கூட்டணியில் இசைப் புரட்சியே நிகழ்ந்த காலமது!

‘என் வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது… ஆனால் நீ இல்லாததால் அது வாழ்க்கையாக இல்லாமல் இருக்கிறது…’ -இப்படித் தொடங்கும் பாடலின் ஒவ்வொரு வரியும் ஜீவனுள்ள கவிதைகள்…

இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் அதற்கே ஒரு தனி பதிவு வேண்டும்…

தேரே பினா ஜிந்தகி…
படம்: ஆந்தி (1975)
உடன் பாடியவர்: லதா மங்கேஷ்கர்

ல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த மிகச்சிறந்த பாடல் இது.  பாடலைப் பாடிய கிஷோர் குமாரும்  நடித்த அமிதாப் பச்சனும் கேட்பவரின் / பார்ப்பவரின் உயிரை உருகச் செய்திருப்பார்கள்.

ஓ சாத்தி ரே…
முகுந்தர் கா சிக்கந்தர் (1978)
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி

ர்டி பர்மன் – கிஷோர் குமார் கூட்டணியின் மற்றுமோர் சிறந்த பாடல். சாகர் படத்தில் இடம்பெற்றது. படத்தின் நாயகர்கள் ரிஷிகபூர் – கமல்ஹாசனைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்ட மகத்தான இசை.

எண்பதுகளில் காதலர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இந்த காதல் கீதத்தை அசைத்துக் கொள்ள இன்னொரு பாடல் வரவில்லை!

சாகர் கினாரே…
படம்: சாகர் 1985
இசை: ஆர் டி பர்மன்
உடன் பாடுபவர்: லதா மங்கேஷ்கர்

ம்பது வயதைக் கடந்தவர்களுக்கு, இழந்த இளமையைத் திரும்ப வைக்கும் இந்தப் பாடல்.  இன்றைய இளைஞர்களுக்கோ புது அனுபவத்தைத் தரும் உற்சாகப் பாடல்.

கிஷோரின் குரலும் சச்சின் தேவ் பர்மனின் இசையும் (அந்த மவுத் ஆர்கன் வாசித்தது ஆர் டி பர்மன்), ராஜேஷ் கண்ணாவின் துள்ளலான நடிப்பும்  எவர் கிரீன் பாடலாக இதை மாற்றிவிட்டது.

மேரி சப்னோ கி ராணி கப்…
படம்: ஆராதனா (1969)
இசை: எஸ் டி பர்மன்

‘இதயம் என்வசமில்லை…’ என தமிழ்க் கவிஞர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்களே… அந்த உணர்வை, அனுபவத்தை இந்தப் பாடலைக் கேட்டு முடித்ததும் நிச்சயம் உணர்வீர்கள்.

தொடக்கத்தில் வரும் மெல்லிய இசையும், அதைத் தொடர்ந்து உயிரை உருகச் செய்யும் கிஷோரும் ஆத்மார்த்தமான குரலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும்…

இறைவன் மிகவும் இரக்கமற்றவன்… இப்படி ஒரு குரலை உலகுக்குக் கொடுத்து, அந்த இன்பத்தை முழுமையாய் அனுபவிக்கும் முன் பறித்துக் கொண்டானே..!

குறிப்பு: இந்தப் பாடல் இடம் பெற்ற ‘குத்ரத்’ படத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு பின் கன்னடம், தமிழில் பெரும் வசூல் புரட்சி நிகழ்த்திய மணிச்சித்ரதாழு, ஆப்தமித்ரா மற்றும் சந்திரமுகியின் மூல வடிவம் இது. மீண்டும் இந்தியில் பூல் புலைய்யா என வெளியாகி சக்கைப் போடு போட்டது!

ஹமே தும்ஸே ப்யார் கித்னா…
படம்: குத்ரத் (1981)
இசை: ஆர் டி பர்மன்

-சங்கநாதன்

குறிப்பு: ஆகஸ்ட் 4- கிஷோர் குமார் பிறந்த தினம்!
5 thoughts on “கிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்!

 1. Deepan Manoj

  Wow… I really didn’t expect this from a Tamil site. I’m a north Indian settled in Trichi. One of a Rajini fan introduced me to your website. Though I couldn’t read well Tamil, I just visit for the musical updates from you. B’cause your taste is exceptional.

  When I casually browsing Today, I just shocked with immense happiness and enjoyed the extra-ordinary songs you presented here…

  Sir, it is really an unforgettable moment. When heard the song Tere bhina Jindagi se kohi…. and Hume Tumse Pyar kitna… I simply forget myself.

  Thank you very much for presenting such a wonderful experience in the morning…

 2. Suresh கிருஷ்ணா

  மிகச் சிறந்த பாடல்கள். கடைசி பாடலுக்கு நீங்கள் கொடுத்த குறிப்பு நூறு சதவிகித உண்மை. ‘இதயம் என்வசமில்லை!’.

  வாழ்க கிஷோர் குமார் புகழ்!
  -Suresh கிருஷ்ணா

 3. kalpana

  வாழ்க கிஷோர் குமார் புகழ்!
  -Suresh கிருஷ்ணா

  ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு, இழந்த இளமையைத் திரும்ப வைக்கும் இந்தப் பாடல். இன்றைய இளைஞர்களுக்கோ புது அனுபவத்தைத் தரும் உற்சாகப் பாடல்.

  கிஷோரின் குரலும் சச்சின் தேவ் பர்மனின் இசையும் (அந்த மவுத் ஆர்கன் வாசித்தது ஆர் டி பர்மன்), ராஜேஷ் கண்ணாவின் துள்ளலான நடிப்பும் எவர் கிரீன் பாடலாக இதை மாற்றிவிட்டது.

 4. ஜீவா ஃப்லோரா

  உங்கள் இசையின் ரசனை மிகவும் அருமை.கிஷோருக்கு அஞ்சலி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்ட போதே தங்களின் இசை ஆர்வம் தெளிவாகிவிட்டது.கடமைக்கு என்று அல்லாமல் நேர்த்தியான மானசீகமான படைப்புக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
  ___________
  நன்றி ஜீவா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *