BREAKING NEWS
Search

கிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு! – ரஜினி தமாஷ்

கிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு! – ரஜினி தமாஷ்

ந்திரனில் இடம்பெற்றுள்ள கிளிமாஞ்சாரோ பாடலின் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் வந்தபிறகு ரிகர்சல் பண்ணி வைத்திருந்த டான்ஸ் மறந்து போச்சு, என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தினகரன் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் பேட்டி:

“முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்… முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல்.

மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட்டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும் – அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிரலாம்னு 20, 30 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன்.

அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க… அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க. மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க.

நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க… சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது.

என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க.

முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே எல்லாரும் கைதட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா மாதிரி இருந்தாங்க. அந்த உடம்புலயே ரிதம் இருக்கு. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டு அப்படியே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க…”, என்று கூறியுள்ளார்.
18 thoughts on “கிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு! – ரஜினி தமாஷ்

 1. sing

  அக்டோபர்-1 தமிழ்நாடு டிராபிக் டே உடனடியாக வேளைக்கு செல்பவர்கள் கொஞ்சும் முன்கூட்டியே செல்லுங்கள் ,அப்பறம் ……
  இன்னும் மூன்று நாட்கள் தான் ……..

 2. kicha

  Ivar eapavume thannai thaazhthi, pirarai uyarthiye pesarare!

  Indha guname ungalai ivlo uyarathil vachuruku thalaivaa…

 3. kicha

  Vino sir, neenga eappo padam parka poringa?
  ____________________
  கிச்சா,
  30-ம் தேதி நள்ளிரவு!
  -வினோ

 4. பாலா

  /**கிச்சா,
  30-ம் தேதி நள்ளிரவு!
  -வினோ**/

  நாங்க எல்லாம் 1-ம் தேதி காலை 7.00 தான்.

 5. கிரி

  //kicha says:
  September 27, 2010 at 7:42 pm
  Vino sir, neenga eappo padam parka poringa?
  ____________________
  கிச்சா,
  30-ம் தேதி நள்ளிரவு!
  -வினோ//

  இங்க சிங்கப்பூர் ல டிக்கெட் கொடுக்க மாட்டேங்குறாணுக,,வெண்ணை பசங்க.. ரெக்ஸ் திரையரங்கில் இன்று தருவதாக கூறி தரவில்லை என்பதால் சிறு அல்லது பேரு வாக்குவாதம் நடைபெற்றது.. IC நம்பர் வாங்கிட்டு அனுப்பி இருக்காங்க.

  இப்படி நாங்க கடுப்புல இருக்கிறோம் இவரு வியாழக்கிழமை ங்கறாரு பாலா காலையில தாங்கங்காறாரு.. யோவ்! என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க..

  மனுசன கடுப்படிக்காதீங்க! கொலை வெறில இருக்கிறேன்.

  __________

  இது ஒரு ‘விவிவிவிவிஐபி ஷோ’ ராசா.. நாமளும் ஓரமா ஒட்டிக்கிட்டோம். அவ்ளோதான்! தலைவர் ரசிகனா இருக்கிறதுக்கு கிடைச்ச மரியாதைன்னு வெச்சுக்கங்களேன்.. Cooool!!
  -வினோ

 6. குறை

  மலேசியல டிக்கெட் இன்னும் தரல தமிழ்நாடு தேவலாம்

 7. பஹ்ரைன் பாபா

  ஷார்ஜா
  அதாகப்பட்டது நான் வரும் வியாழக்கிழமை காலை (30 /9 /2010 ) 7 :30 க்கு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.. எல்லாருக்கும் முன்னாள் இந்திரனை தரிசனம் செய்யப்போகிறேன்..
  வர்ட்டா..

 8. r.v.saravanan

  இது ஒரு ‘விவிவிவிவிஐபி ஷோ’ ராசா.. நாமளும் ஓரமா ஒட்டிக்கிட்டோம். அவ்ளோதான்! தலைவர் ரசிகனா இருக்கிறதுக்கு கிடைச்ச மரியாதைன்னு வெச்சுக்கங்களேன்.. Cooool!!
  -வினோ

  ஆஹா சூப்பர்
  வினோ அப்ப வெள்ளிகிழமை காலையிலே படம் பற்றிய பதிவு போட்டுடுங்க
  படிக்க காத்திருக்கேன்

 9. Suresh Kumar

  In Plymouth, USA ticket for the first week is 20$. Normally it is 10 or 15$ only. Because of demand and expectation price is jacked… hmmm Distributor across the world are looting money..

 10. கிரி

  நாங்களும் வாங்கிட்டோமில்ல.. சிங்கப்பூர் ல் இரவு 8.30 மணிக்கு… ஹி ஹி ஹி உங்களுக்கு முன்னாடி நாங்க பார்க்க போகிறோம்.

  இது எப்படி இருக்கு! ச்சும்மா அதிருதில்ல 🙂

  _________________

  கலக்குங்க…
  -வினோ

 11. r.v.saravanan

  வினோ நான் AGS தியேட்டர்லே டிக்கெட் வாங்கிட்டேன் படம் பார்க்க

 12. Abhinav (அபினவ் )

  ஐஸ்வர்யா ஈ பிலிம்லும் ?? interesting அர்ரிக்கே!!!!!! ஐஸ்வர்யா தமிழ் டேரியோன் ?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *