BREAKING NEWS
Search

கிலானி, அருந்ததிராய் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

இந்தியாவுக்கு எதிரான பேச்சு: கிலானி, அருந்ததிராய் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

டெல்லி: இந்திய அரசுக்கு எதிராகப் பேசியதாக கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் காஷ்மீர் மாநில பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் இயக்க தலைவர் சையத்அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததிராய், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருமான எஸ்.ஏ.ஆர்.கிலானி, காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் சவுகத் ஹுசைன், மாவோ இயக்க தலைவர் வாரா வாரா ராவ் ஆகியோர் இந்திய அரசுக்கு எதிராக பேசியதாக புகார் செய்யப்பட்டது.

இதை அவர்கள் மறுத்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சுசில் பண்டிட் என்பவர் டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியாவுக்கு எதிராக அவதூறாக அவர்கள் பேசவில்லை என தெரிவித்திருந்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அந்த அறிக்கையை தள்ளுபடி செய்தது.

குறிப்பிட்ட 7 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அடிப்படை ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சரியான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு நவிதா குமாரி பாகா டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு தள்ளி மவைத்தார்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து விடுதலைப் பெற விரும்புவதாகவும், ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் அருந்ததி ராய் பேசியிருந்தார். அதே கூட்டத்தில், காஷ்மீர் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பேசிய கிலானி, இந்தியாவை கடுமையாகச் சாடியிருந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *