BREAKING NEWS
Search

கிராம்மி விருதுக்கு தயாராகும் ஆஸ்கர் நாயகன்!

கிராம்மி விருதுக்கு தயாராகும் ஆஸ்கர் நாயகன்!

ஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதோ இன்னுமோர் சிறப்பு காத்திருக்கிறது.14862859_rahmanpress4

இசை உலகில் ஆஸ்கர் எனப்படும் கிராம்மி விருதுகளுக்கு, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏற்கெனவே ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் இந்தப் படத்துக்காக ரஹ்மானுக்கு வழங்கப்பட்டன.

இப்போது மீண்டும் ஸ்லம்டாக் மில்லியனரின் ‘ஜெய் ஹோ…’, சிறந்த பாடலுக்கான கிராம்மி விருதின் தெரிவுப் பட்டியலில் (Nominations) இடம் பெற்றுள்ளது.

அதே படத்தின் சவுண்ட் டிராக் அமைத்ததற்காகவும் கிராம்மி விருதுக்கு ரஹ்மானின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கிராம்மி விருதுக்கு முதல் முறையாக, ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கிராம்மி விருதுகள் வழங்கும் விழா, வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதி லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள ஸ்டாப்லெஸ் சென்டரில் நடைபெறுகிறது.

தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஒருவர் கிராம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறை.

ஆனால் இதற்கு முன் இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்து இங்கிலாந்தில் செட்டிலாகி, இப்போது ஹாலிவுட் வரை புகழ் பரப்பியுள்ள மாதங்கி அருள் பிரகாசம் ஏற்கெனவே இருமுறை கிராம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து பண்டிட் ரவி ஷங்கர், ஜாகீர் ஹூசைன், கடம் வித்வான் விக்கு வினாயக்ராம் மற்றும் பண்டிட் விஸ்வ மோகன் ஆகிய நால்வர் மட்டுமே இந்த கிராம்மி விருதைப் பெற்றுள்ளனர்.




3 thoughts on “கிராம்மி விருதுக்கு தயாராகும் ஆஸ்கர் நாயகன்!

  1. anand

    தங்களது செய்தி குறிப்பை சரி செய்யவும்,
    தமிழகத்தை சேர்ந்த திரு . விக்கு விநாயக்ராம் கடம் வித்வான் பல ஆண்டுகளுக்கு முன்பே கிராமி விருதை வென்ற தமிழர் ஆவர்..
    ரஹ்மான் அவர்கள் நம்முக்கு இப்பொழுது மேலும் பெருமை சேருகிறார்…
    வாழ்த்துக்கள்…
    _______

    Thanks… corrected

  2. r.v.saravanan

    தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஒருவர் கிராம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறை.

    valthukkal ரஹ்மான்

  3. Muthu

    ஏ.ர். ரஹ்மானுக்கு கிராம்மி விருது கிடைக்க நல்வாழ்த்துகள்…

    ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *