BREAKING NEWS
Search

‘கிராபிக்ஸ் நாயகி’ சௌந்தர்யா!

‘கிராபிக்ஸ் நாயகி’ சௌந்தர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரு வாரிசுகளுமே தங்களுக்கு விருப்பமான துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்… கலைமாமணி விருதெல்லாம் வாங்கியவர். நாட்டிய மேதை டாக்டர் பத்மா சுப்ரமணியத்திடமே பாராட்டுக்களை வென்றவர்.

இளைய மகள் சௌந்தர்யா ரஜினியோ கோலிவுட் செல்லம்.

கிராபிக்ஸ் துறையில் இளம்புயலாய் கலக்கிக் கொண்டிருப்பவர். சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என மெகா பட்ஜெட் படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பொறுப்பேற்ற அவர், இந்தியாவிலேயே முதல் முறையாக ரஜினியை வைத்து முழு நீள அனிமேஷன் திரைப்படம் ஒன்றையே உருவாக்கி வருகிறார்.

இது ஒரு சர்வதேசப் படம்… இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமையை ரஜினிக்குத் தரப்போகும் படம்!

இந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சௌந்தர்யாவை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் 20 பேரில் ஒருவராக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

சௌந்தர்யாவுக்கு ‘கிராபிக்ஸ் நாயகி’ என்றும் அந்தக் கட்டுரையில் பட்டம் சூட்டியுள்ளனர்.

இந்தியா டுடேவில் இடம்பெற்ற அந்த செய்தி:

10-soundarya-copy

இந்த கௌரவம் குறித்து என்ன நினைக்கிறார் சௌந்தர்யா ரஜினி?

“மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் என்றுமே மனதுக்குப் புதிய பரவசத்தையும், இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தையும் தரும். அப்படித்தான் இதை எடுத்துக் கொள்கிறேன்.

எனக்கு முன் இப்போதுள்ள சவால், ‘சுல்தானை மிகச் சிறந்த படமாக அப்பாவின் ரசிகர்களுக்குத் தரவேண்டும்’, என்பதே. நிச்சயம் பெருமைக்குரிய படமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது..” என்கிறார் ‘நம்ம வீட்டு இளவரசி’!

-வினோ
13 thoughts on “‘கிராபிக்ஸ் நாயகி’ சௌந்தர்யா!

 1. வடக்குப்படி ராமசாமி

  வாழ்த்துக்கள்!

  அஞ்சு நிமிசத்துல கம்ப்யூட்டர் டிசைன்ல அசத்துற, எட்டாவது/ பத்தாவது படிச்சிட்டு வெறும் ஐநூருக்கும் ஆயிரத்துக்கும் கலக்குற சிவகாசி இளைஞர்களையும் இவங்க எழுதினா நல்லா இருக்கும்.

 2. Kirishanthan

  sorry, its not true, The Graphics from kollywood never compared to Hollywood.

  wateched ago few days Sultan trailer.. its worst Graphices, Rendering, Effects, Modelling, Camera, Animation…. its like what Hollywood did ago 20 years..

  Kollywood = 1%
  Hollywood = 100 %

 3. Manoharan

  Sultan’s real completed trialor has not been screened yet. Dont underestimate Soundarya. Let the real Trialor comes. Eventhough it may not matches Hollywood it will be the best one in Indian cinema. Our Princess will not let us down.

 4. prakash

  I am also not convinced about how much Indian animation has been improved over the years. Lets hope that Soundarya gives atleast decent animation film. I am also worried abt the response of indian audience over animation films. Still we are not into that groove like hollywood. Lets wait and c.

 5. மாப்பிள்ளை

  naan potta comment aa publish pannalaiyee
  haiyoooo ….. haiyoooo ….

 6. Kamesh`

  Hi Vinoji,

  Nice news about our thalaivar’s princess… its sad that we people do not appreciate, encourage what our people do instead we try to degrade their workmanship by comparing and pulling them down.. Well she might not consider these comments but its not good to post something like what our Kirishanthan expresses and all…

  Waiting to see the trailor in its original form…

  Kamesh

 7. Muthu kumar

  Kirishanthan sir, You watched the trailer with2D only. But it is a 3D film. So it will be great to look it in 3D. So don’t worry.

 8. ரஜினிகாந்த்

  சுல்தானைப்பற்றிய நிஜமான செய்தி…

  சதவிகிதம் முடிந்த படத்தை பார்த்த அட்லாப்ஸ் சௌந்தர்யா கையில் இருந்தால் படம் தேறாது என உணர்ந்து… படத்தை அவர்களே மீண்டும் எடுத்து தேறும் அளவுக்கு இப்போது வேலை பார்த்து வருகின்றனர் .. ரஜினிகாந்த் மீண்டும் திட்டவட்டமாக மீண்டும் படம் பண்ணி தரவேண்டும் என கேட்க, ரஜினியும் மக்கு மகளுக்காக மீண்டும் மசாலா படம் ஒன்று நடித்து தருவதாக உறுதி அளித்துள்ளார்..

  தாங்களே நம்பிக்கை இல்லை என்றால்..விசாரிக்கலாம்..

  ஹாலிவுட் துரத்தி அடித்த சௌந்தர்யாவை.. தன் ஸ்டுடியோவிலும் செய்ய வக்கு இல்லாமல் , பெரும்பாலான பகுதியை குறைந்த விலைக்கு Philippines நாட்டில் மிக மட்டமாக அனிமேஷன் வேலை நடந்தா என விசாரிக்கவும்.. தங்கச்சிக்கு தெளிவான சினிமா அறிவும் கிடையாது, அனிமேஷன் அறிவும் கிடையாது என்பது சினிமா வட்டாரத்தில் பொதுவாக பேசப்பட்டு வரும் செய்தி..

 9. வழிப்போக்கன்

  வடக்குப்படி ராமசாமி க்கு நன்றி..

  சிவகாசி பசங்க பத்தி எழுத சொன்னதுக்கு….

 10. Billa

  கமல் பொண்ணு மாதிரி இந்த பொன்னும் நடிக்க போயிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *