BREAKING NEWS
Search

காவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு!

காவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு!

சென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில், சத்யா மூவீஸ் தயாரிப்பில் பெரும் வெற்றி பெற்ற காவல்காரன் தலைப்பைச் சூட்ட விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்புக்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படத்துக்கு ‘காவல் காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நயன்தாரா-திலீப் நடித்து சித்திக் இயக்கிய மலையாளப்படம், ‘பாடிகார்ட்’. இந்த படத்தை விஜய்-அசின் ஜோடியை வைத்து தமிழில் ரீமேக்குகிறார்கள். முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். தமிழ் படத்தையும் சித்திக்கே இயக்குகிறார்.

இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்ற எம்.ஜி.ஆர். படத்தின் பெயரை வைத்திருந்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை (பழைய படங்களின் தலைப்பைப் பயன்படுத்தும்போது அதற்குரிய அனுமதியை அதன் தயாரிப்பாளரிடமிருந்து பெற வேண்டும்).

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து சத்யா மூவிஸ் தயாரித்து 1967-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி கண்ட படம் ‘காவல்காரன்’. இந்த தலைப்பை விஜய் படத்துக்கு வைக்கக் கூடாது என்று சத்யா மூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சத்யா மூவிஸ் நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், “விஜய் இப்போது நடித்து வரும் புதிய படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பின் உரிமையை யாருக்கும் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே அந்த படத்துக்கு காவல்காரன் என்று பெயர் வைப்பதற்கு அனுமதிக்க கூடாது” என்று குறிப்பிட்டிருந்தது.

இதை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஜய் படத்தின் தயாரிப்பாளருக்கு, “பழைய பட தலைப்பை வைக்கும்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து அனுமதி பெறுவதுடன், மறுப்பு இல்லாத சான்றிதழும் வாங்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் அந்த தலைப்பை வைக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விதி இருக்கிறது. எனவே உங்கள் படத்துக்கு வேறு தலைப்பை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கடிதம் அனுப்பியது.

இதை தொடர்ந்து விஜய் படத்தின் பெயர் ‘காவல் காதல்’ என்று மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




5 thoughts on “காவல்காரன் தலைப்பு… சத்யா மூவீஸ் எதிர்ப்பு!

  1. krishsiv

    பாவம் இந்த பையனோட இந்த பொழப்புளையும் மண் விழுந்துடுச்சு …

    எனகென்னமோ தலைப்ப use பண்றது பிரெச்சனை இல்லை
    அத நீ use பண்றது தான் பிரெச்சனை

  2. Dinesh

    ஒரு தலைப்பு கூட ஒழுங்கா கேட்டு வைக்க மாட்டீங்களா… இந்த படத்துக்கு இருக்குற பிரச்சினை பத்தாதுண்ணு இப்போ இந்த பிரச்சினை வேரயா?

  3. Juu

    பாவம்யா அந்த புள்ள,ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது,
    Wound Leg agian wounds!!!
    Destoryed family again destroys!!!

  4. krish

    Simply don’t scold Vijay, and beware he is a wounded tiger and after THALIVER he has an amazing mass support.I am sure he is going to come out with atleast 2hits out of his next 3 movies.
    cheers
    krish.

  5. Raj Devar

    அருணாசலம் ரீமிக்ஸ் ;

    * ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

    ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *