BREAKING NEWS
Search

காலில் விழுந்த ஐஸ்… நெகிழ்ந்த ரஜினி!

காலில் விழுந்த ஐஸ்… நெகிழ்ந்த ரஜினி!

ந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றனர்.

படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜூலை 7-ம் தேதி இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.

படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் பிரியா விடை பெற்றனர்.

அப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் எதுக்கும்மா?’ என்றவர், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். ‘நீயும் எனக்கு மருமகள் போலத்தான்’ என்று சொல்லி வாழ்த்தினார்.

ஐஸ்வர்யா ராய் பணிவைப் பார்த்து படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக்குழுவினர் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற முயர்சிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, “யாரும் யார் காலிலும் விழுவது தேவையில்லாதது. என் வாழ்த்தும் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு” என்றார்.

பின்னர் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சார்பில் ஆர்டர் செய்யப்பட்ட மிகப்பெரிய கேக் கொண்டு வரப்பட்டது. அதனை ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து வெட்டினர். அவர்களுடன் இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவு இயக்குநர் ஆர் ரத்னவேலு, கலை இயக்குநர் சாபு சிரில் உள்ளிட்ட கலைஞர்களும் இணைந்து கொண்டனர்.

இரு தினங்களுக்குப் பிறகு, கடந்த ஜூலை 9-ம் தேதி இரவு எந்திரன் குழுவினர் அனைவருக்கும் பெரிய விருந்து வழங்கினார் தயாரிப்பாளர் கலாந்தி மாறன் (அதுபற்றிய விவரம் அடுத்த பதிவில் பாருங்கள்!).

எந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று நிருபர்களிடம் நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.

-என்வழி

படங்கள்: www.directorshankaronline.com




9 thoughts on “காலில் விழுந்த ஐஸ்… நெகிழ்ந்த ரஜினி!

  1. DARWIN

    சுபெர்ச்டார் நா சுபெர்ச்டார் தான்

  2. krishsiv

    பின்ன ………… ஸ்டைல் சக்கரவர்த்தி ….கூட நடிச்ச வரலாறில் இடம்பிடித்தார்கள் அல்லவா……..

    இவுங்க உலக அழகி ஆனதிற்கு இவுங்க பண்ண புனியமா தெரியல
    தலைவர் கூட நடிததிற்கு கண்டிப்பா பண்ணிருக்கணும் …கோடி புண்ணியம்

  3. mak

    ‘நீயும் எனக்கு மருமகள் போலத்தான்’ – நல்ல culturee

  4. raja

    Really stunning picture…..He looks very younger than Aish. Looks like Thillu Mullu Rajini..

  5. KADKAT

    இருவர்களின் பணிவே… அவர்களின் உலகம் போற்றும் வெற்றிக்கு உறுதுணை… GREAT

  6. karthik

    மருமகளால.. இதுல உள்குத்து வெளிகுத்து எதுவும் இருக்கா தல.. ?

  7. mahesh

    இந்த போட்டோ வில் எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிகிறது.
    படம் பார்த்து வெளியில் வரும்போது ரசிகர்கள் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம் பொங்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *