BREAKING NEWS
Search

காலில் விழுந்து, பொன்னாடை போர்த்தி, குரூப் போட்டோ எடுத்து… விட்டதைப் பிடிக்கணுமில்ல!

வைகோ… நறநறக்கும் கலைஞர்!

popcorn_scoop_boxes copyழப்போர் முடிந்து 6 மாதங்கள் கழித்து, இப்போது ‘பிரபாகரன் தவறால்தான் இந்த நிலை’ என்று பழிசுமத்திய கருணாநிதிக்கு வைகோ அளித்த பதில்தான் இன்று உலகத் தமிழரிடையே உணர்ச்சிப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வைகோவின் பதில்களில் இருந்த நியாயமான கோபம், உண்மைக்கு கருணாநிதியால் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் தமிழருவி மணியன்.

எப்போதுமில்லாத அளவுக்கு கருணாநிதியை இந்த அறிக்கை சீண்டி விட்டுள்ளதாகவும், இதன் பலனை வைகோவுக்கு நிச்சயம் காட்ட முயலும் ஆளும் தரப்பு என்றும் உளவுத் துறையின் சமீபத்திய சுறுசுறுப்பைப் பார்த்து முணுமுணுக்கிறார்கள் கட்சித் தலைவர்கள்.

கருணாநிதியிடம் சரண்டரான இயக்குநர்கள் சங்கம்!

popcorn_scoop_boxes copyங்கள் கூட்டணிக்கு எதிராக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் அவர்களின் சங்கம் மீதே கடும் கோபத்திலிருந்தார் முதல்வர் கருணாநிதி.

இதனால் அவர்களுக்குத் தருவதாகச் சொல்லியிருந்த நிலத்தையும் ஒதுக்காமல் விட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இப்போதுதான் தேர்தல் சீஸனில்லையே… இடத்தின் அருமை வேறு நமது தன்மான சிங்கங்களான இயக்குநர்களுக்கு தெரியமல்லவா…

எனவே சமாதான படலத்தில் இறங்கிவிட்டனர். விரைவில் கருணாநிதியைச் சந்தித்து காலில் விழுந்து பொன்னாடை போர்த்தி, குரூப் போட்டோ எடுத்து தங்கள் விசுவாசத்தை மெய்ப்பித்து, விட்ட இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளனராம்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *