BREAKING NEWS
Search

கான்வென்ட் பிள்ளை!

கான்வென்ட் பிள்ளை!

school_punishment01

லை சீவி
தளுக்காய் பவுடர் பூசி
ஹை கலர் யூனிபார்ம்மில்
காலர் பட்டன் போட்டு
டை கட்டி
பெல்ட் இறுக்கி
ஷூ மாட்டி
லேஸ் முடித்து
டிபன் பாக்ஸில்
பிரட்டும் வெண்ணையும்
பிஸ்லரியும் வைத்து
செல்லப் பிள்ளையை
சீருந்தில் ஏற்றி
ஸ்கூலுக்கு அனுப்பினால் –

பையன்
பத்து மணியில் இருந்து
வெளியே நீல் டவுன் போட்டானாம்…
ஹோம் வொர்க் செய்யவில்லை என்று..!

ஈ ரா




8 thoughts on “கான்வென்ட் பிள்ளை!

  1. பாசகி

    ஈரா-ஜி உங்க ஃபீலிங்ஸ் புரியுது, இளமைகாலம் ஞாபகம் வந்தா இப்படியெல்லாம் கவிதை எழுத சொல்லும் 🙂

  2. ஈ ரா

    பாசகி,

    காசு மிச்சம் பிடிக்க
    ஒட்ட வெட்டிய
    தலையை மட்டும் சீவினாலே
    தளுக்கென நினைத்து

    கால் சட்டைக்கே
    முடிச்சுதான் பொத்தான் எனில்
    கழுத்து பொத்தான் எதற்கு என்று
    ஒட்டுப்போட்ட உடுப்பினை
    ஒய்யாரமாய் அணிந்து

    அரணாக் கயிறால்
    இடுப்பு இறுக்கி
    செருப்பில்லா கால் நடையாய்
    தொட்டியில் நீர் குடித்து
    கொடுக்காப்பிளியும் தேன் காயும் தின்று
    சத்துணவுக்கு தட்டேந்தும்
    கோடிகளில் ஒருவனாகவே
    கழிந்தது என்
    பள்ளி வாழ்க்கை !

    ஆனால் ஒன்று,

    நான் என்றைக்கும்
    முட்டி போட்டதில்லை…
    என் ஆசிரியர் வழி காட்ட
    பள்ளி இறுதியில் நான்
    முதல் மாணவன்….

  3. பாசகி

    ஈரா-ஜி நான் நகைச்சுவையாத்தான் சொன்னேன், தப்பா நினைக்கலயே? காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடுங்க.

    கவிதை உங்க சமுகபார்வையோட வெளிப்பாடு-னு என்னால புரிஞ்சுக்கமுடியும்.

    தனிப்பட்ட முறையில எனக்கு கான்வென்ட் கல்வி-ல உடன்பாடு இல்லை. மார்க் எடுக்கவும் பணம் பண்ண மட்டுமே கற்றுத்தரப்படற கல்வி என்னை கவரல. இது என்னோட தனிப்பட்ட கருத்து.

  4. ஈரா

    என்ன தல

    பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுதீக?

  5. பாசகி

    //என்ன தல

    பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுதீக?//

    இல்ல ஜி, உங்க வறுமைகால நாட்களை ஞாபகபடுத்திட்டனோன்னு ஒரு குற்ற உணர்ச்சி…

  6. Kamesh (Botswana)

    HI Eee.Raa.

    Long time what a nice poetry .. Kamarajar daasare arumai.. arumai..

    ayya ithu veetulenthu kashtappa aangilatthula ezhutharathu google tamil site konjam sollungappa…

    Kamesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *