BREAKING NEWS
Search

கவிழ்ந்த விமர்சகர்கள், வியந்த நடுநிலையாளர்கள், கலங்கிய ரசிகர்கள்!!

சும்மா வந்துவிடவில்லை எந்திரன் வெற்றி!

டந்த அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து எந்திரன் பெரும் வெற்றி பெற்ற செய்தி வெளியாக வெளியாக, அது குறித்த விமர்சனங்களும் குறைவின்றி குவிந்து கொண்டே இருந்தன.

இந்த வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை மற்றும் இணைய தளங்களிலும் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்த்து, ரசிகர்கள் அல்லாத, நடுநிலையாளர்களே கூட, ‘இது டூ டூ மச்’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தப் படத்தை ஷங்கர் பிரமாதமாய் செதுக்கியிருந்தாலும், சன் பிக்சர்ஸ் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்திருந்தாலும், இந்த பிரமாண்ட வெற்றியின் மூலகர்த்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பது ஷங்கர் – சன் இருவருக்குமே நன்கு தெரியும்!

அந்த மூலகர்த்தா, எந்திரனுக்காக பட்ட பாடுகள், ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ என்ற பெயரில் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பான போது விமர்சகர்கள் தலை கவிழ்ந்தன, நடு நிலையாளர்கள் வியந்தனர், ரசிகர்களோ கண் கலங்கினர்!

நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாயார் இப்படிச் சொன்னார்: “இந்த மனுசனுக்கு என்ன குறை… இப்படியெல்லாம் கஷ்டப்பட வேணாம்னு சொல்லுப்பா…!”

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, தமிழ்க் குடும்பங்களில் ஒரு Household name ஆகவே ரஜினி மாறிப்போயிருப்பதன் பிரதிபலிப்பு இது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அத்தனை ரசிகர்களுமே அன்று அந்தத் தாயின் மனநிலையில்தான் தவித்திருப்பார்கள்!

ரஜினி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த மட்டுமல்ல.. தன்னையே திருப்திப்படுத்திக் கொள்ள இந்த அளவு இறங்கி வந்து, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டாரோ, என்று கேட்க வைத்தது அவர் மேற்கொண்ட முயற்சிகள். சும்மா வரும் வெற்றி நிலைக்காது என்பார் தலைவர் அடிக்கடி. அப்படிச் சொன்னது பிறருக்கு மட்டுமல்ல, தனக்கும் சேர்த்தே என்பதைப் புரியவைத்துவிட்டார்.

அவர் இருக்கும் நிலைக்கு, ‘இதையெல்லாம் செய்ய முடியாது. டூப் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு சின்ன தலையசைப்பிலேயே உணர்த்திவிட்டுப் போயிருக்க முடியும்.

ஆனால், எதிலும் ஒரு ஒரிஜினாலிட்டி வேண்டும், கஷ்டப்பட்டு பெறும் வெற்றிதான் நிலைக்கும், இனிக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதத்தில், ரஜினி உழைத்த உழைப்பு, அனைவருக்கும் ஒரு பாடம்! இந்த உண்மையான மனிதருக்கு, உத்தம கலைஞனுக்கு ரசிகனாக இருப்பதை எண்ணி நிஜமாகவே ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள்!

உண்மை மகத்தானது… அசாதாரண வலிமை வாய்ந்தது. பொய்யர்களையும் புனை சுருட்டுக்காரர்களையும் ரொம்ப சாதாரணமாக ஊமையாக்கிவிடும் சக்திமிக்கது!

நண்பர்கள் பலர் ஒரு யு ட்யூப் லிங்க்கை அனுப்பி, இதில் ரஜினி போல மாஸ்க் அணிந்துள்ள ஸ்டன்ட் கலைஞர் யார்? என்ன?வென்று பலமுறை நம்மிடம் கேட்டிருந்தனர். இயக்குநர் ஷங்கரிடமே அதற்கான பதிலைப் பெற்று பதிவு செய்திருந்தோம். இதோ, இப்போது மேக்கிங் ஆஃப் எந்திரன் மூலம், அந்த ரயில் சண்டைக் காட்சியில் எந்த அளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார் ரஜினி என்பதை உணர்த்தியிருக்கிறார் ஷங்கர். யாரோ ஒருவர் கொடுத்த வீடியோ லிங்கை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதியவர்கள், இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ!

நிஜமாவே ஓடும் ரயில், சரளைக் கற்களுக்கு மத்தியில் நிஜமான தண்டவாளம், சக்கரம் பொருத்தப்பட்ட கால்களுடன் ஓடும் நிஜ ரஜினி.. ஒரு நிமிடம் முதுகுத்தண்டு சிலிர்த்தது. அந்த ஹை வோல்டேஜ் மின்சாராக் கம்பிகளுக்கு மத்தியில், சாதாரண ஸ்டன்ட் கலைஞர்களுக்கு சமமமாய் தானும் ரயில் மீது நின்று சண்டை போட்ட காட்சியும், அந்த பதட்ட நிமிடங்களை தலைவர் விவரித்த விதமும்… சட்டென்று கண்கள் கலங்கி விட்டன. என்னதான் பாதுகாப்புடன் படமாக்கப்பட்டாலும், எந்த இளம் ஹீரோவுக்காவது இந்த தில் இருக்குமா…?

இன்னொரு விஷயத்தையும் இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்… முன்பெல்லாம், ‘அவர் இப்படி மேக்கப் போட்டார்… இவர் இப்படி ரிஸ்க் எடுத்தார்,’ என்று செய்திகள் வரும். அப்போது  ‘ரஜினியைப் பற்றியும் இப்படி செய்தி வர வேண்டும்’ என்று ஒரு சின்ன ஆசை நிறையப் பேருக்கு இருந்தது உண்மைதான்.

ஆனால் இந்த மேக்கிங் ஆப் எந்திரன் பார்த்த பிறகு, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இந்த எண்ணம்தான் நிச்சயம் தோன்றியிருக்கும்: ‘தலைவா… போதும். ரசிகர்களைத் திருப்திப்படுத்த நீங்கள் எடுத்த ரிஸ்க் எல்லாம் போதும். நீங்கள் சொன்னதுபோல, எழுதறவங்க எழுதிக்கிட்டுதான் இருப்பாங்க. உங்களுக்கு ரிவார்ட் தர ரசிகர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து இந்த ரிஸ்க் இனியும் வேண்டாம்!’

தலைவரை ஆறுமணிநேரம் ஒரு டப்பில் படுக்க வைத்த காட்சியிலும் சரி, அவரைப் போல மாஸ்க் செய்ய அவரை உட்கார வைத்து தலையில் அந்த கெமிக்கல் குழம்பை ஊற்றும்போதும் சரி, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, முகத்தோல் உரிந்தது போன்ற கெட்டப்பில் தலைவரை தரையில் துடிக்க வைத்த காட்சியிலும் சரி…மனம் தவித்தது (விகடன் குழுவினருக்கு ஒரு நான்கு முறையாவது இந்த மேக்கிங் ஆஃப் எந்திரனை போட்டுக் காட்ட வேண்டும்!).

இவ்வளவு அரும்பாடுபட்டும், எந்த பெருமைக்கும் சொந்தம் கொண்டாடவில்லை ரஜினி. ‘ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர், ஐஸ்வர்யா அருமை, கலாநிதி மாறன் பிளானிங் பக்கா, பீட்டர் ஹெயின் சிறப்பா பண்ணார்…,’ இப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை ரஜினி சொன்னாரே தவிர, அந்தப் புகழில் தன் பங்கைப் பற்றி துளி கூட அலட்டிக் கொள்ளவில்லை. பெருமையிலும் பெருமை என்றாரே வள்ளுவர்… அந்தப் பெருமைக்கு உதாரணம் ரஜினி என்றால் மிகையல்ல!!

இறுதியில் அந்த ஹாலிவுட் கலைஞர்கள், ஜாக்கி சானின் ஸ்டன்ட் மாஸ்டர் போன்றோர் ரஜினிக்கு சூட்டிய புகழாரம்: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிறவிக் கலைஞர். அவரால் எதையும் செய்ய முடியும். இந்த மாதிரி ஒத்துழைப்பு தந்த நடிகரைப் பார்த்ததே இல்லை. அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது..!” – சிலிர்ப்பாக இருந்தது.

‘நான் செய்யும் எந்த விஷயமும் தமிழருக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும்’ என்று, செய்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறார் ரஜினி!

-வினோ

மேக்கிங் ஆஃப் எந்திரன் வீடியோ:பகுதி -1

பகுதி -2

பகுதி -3

பகுதி-4

பகுதி -5

பகுதி -6

பகுதி-7

பகுதி -8

பகுதி -9

பகுதி-10

பகுதி-11
30 thoughts on “கவிழ்ந்த விமர்சகர்கள், வியந்த நடுநிலையாளர்கள், கலங்கிய ரசிகர்கள்!!

 1. prasanna kumar

  Vino thangal ovvoru rasigarin manadhil irupadhai apadiye oru padhivaga thandhaku nandri………..
  Making of Endhiran pathu andru night seriya thoongavillai naan Thalaivar pathithan nenapu!!!!!!
  Thalaiva yenna bhagyam seideyno un rasigana pirapadharku…….
  Adutha superstar , Adutha rajini ,young superstarnu soluravan ellam idha parungada Chumma verum vaayula vada sudaadinga…
  Thalaivar has once again proved that “NO PAIN NO GAIN”

 2. alladin

  Rajini Sir was so generous in praising everyone, especially Shankar. But, Shankar did not praise Rajini sir as much as he praised Shankar. May be he thought that if he praise Rajini Sir a lot, then his name will be suppressed.

 3. Venkat

  Now wiki pedia.
  Current list of highest-grossing Tamil films of all time Rank Title Studio Gross Year Notes
  1 Enthiran Sun Pictures $61,000,000 2010 [1][2][3][4][5][6]
  2 Dasavathaaram Aascar Films $57,766,000 2008 [7][8]
  3 Sivaji AVM Productions $28,155,000 2007 [9]
  4 Billa Anandha Pictures Circuit $14,078,000 2007 [10][11]
  5 Chandramukhi Sivaji Productions $12,638,000 2005 [12][13][14]
  6 Varalaaru NIC Arts $12,000,000 2006 [15][16]
  7 Anniyan Oscar Films $11,638,000 2005 [17]
  8 Vettaiyaadu Vilaiyaadu 7th Channel Productions $11,000,000 2006 [18][19]
  9 Padayappa Sri Surya Movies $9,354,000 1999
  10 Thiruttu Payale AGS Entertainment $9,000,000 2006 [20][21]

 4. Venkat

  WIKI PEDIA SAYS;

  Current list of highest-grossing Tamil films of all time Rank Title Studio Gross Year Notes
  1 Enthiran Sun Pictures $61,000,000 2010 [1][2][3][4][5][6]
  2 Dasavathaaram Aascar Films $57,766,000 2008 [7][8]
  3 Sivaji AVM Productions $28,155,000 2007 [9]
  4 Billa Anandha Pictures Circuit $14,078,000 2007 [10][11]
  5 Chandramukhi Sivaji Productions $12,638,000 2005 [12][13][14]
  6 Varalaaru NIC Arts $12,000,000 2006 [15][16]
  7 Anniyan Oscar Films $11,638,000 2005 [17]
  8 Vettaiyaadu Vilaiyaadu 7th Channel Productions $11,000,000 2006 [18][19]
  9 Padayappa Sri Surya Movies $9,354,000 1999
  10 Thiruttu Payale AGS Entertainment $9,000,000 2006 [20][21]

 5. Juu

  Before watching this show, I am a blind Hardcore Rajini fan.But Now I am many steps ahead as a Matured Rajini Fan.

  Thalaiva!! You made it again!! “Love you Rajini(sir)!!”.

 6. எப்பூடி

  நிறைய பேருக்கு உண்மையில் இது அதிர்ச்சியான விடயம்தான், எனக்கு எந்திரன் மேக்கிங்கை பார்க்கும்போது அந்த கணத்தில் இருந்த உணர்வுகள்

  அதிர்ச்சி- தலைவரின் ரிஸ்க்கை பார்த்து

  கவலை- இந்த வயதிலும் இப்படி கஷ்டப்படனுமா என்று

  கோபம்- இப்படிப்பட்ட உழைப்பை தங்கள் சுயநலத்துக்காக கொச்சை படுத்தும் விமர்சகர்களை பார்த்து.

  பரிதாபம்- வயித்தெரிச்சல்ல அலெக்ஸ் மாட்டினை துணைக்கிளுத்தவங்களை நினைச்சா

  பெருமை- இப்படிப்பட்ட உழைப்பாளிக்கு ரசிகனாக இருப்பதில்

  நம்பிக்கை- கஷ்டப்பட்டு உழைத்தால் அதற்க்கான பலன் உண்டென்கின்ற.

  பொறுப்பு- தலைவரைப்போல நேர கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டுமென்கின்ற

  மகிழ்ச்சி- காரணம் தெரியவில்லை

  கர்வம்- நானும் ரஜினி ரசிகன் என்பதில்.

  இறுதியாக தலைவரது இந்த இமாலய வெற்றிக்கு காரணம் அதிஸ்டமா? கடவுளா? திறமையா? திட்டமிடல்லா? ஒழுக்கமா? உழைப்பா? என்றால், என்னை பொறுத்தவரை முதலாவது காரணம் உழைப்புத்தான், அதன் பின்னர்தான் எதுவானாலும்.

  நானும் ஒரு உழைப்பாளியின் ரசிகேண்டா………

 7. srinivas

  @வெங்கட்

  விக்கிபீடியா ஒரு ஆதாரமாக பார்க்காதீங்க..

  அதுல மும்பை எக்ஸ்பிரஸ் கூட முதல் இடத்தில இருக்கும்!!!!

  உண்மையான டாப் ஐந்து

  எந்திரன்
  சிவாஜி
  தசாவதாரம்
  சந்திரமுகி
  பில்லா

 8. r.v.saravanan

  எந்திரன் உருவாக்கத்தை பார்த்து விட்டு வியந்தேன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் ரஜினி என்று
  வினோ நீங்கள் சொல்வது போல்
  சும்மா வந்துவிடவில்லை எந்திரன் வெற்றி
  கண்டிப்பாக விமர்சித்தவர்கள் வாயடைத்து போயிருப்பார்கள்

 9. saravanaraj .s.p

  கார்நாடகாவில் போய் உட்கார்ந்துகொண்டு தமிழர்களின் காதுகளுக்கு போய் விடாது என்ற கற்பனையில், இலங்கை நடந்த இந்திய திரைப்பட விழா ஒரு செத்துபோன விவகாரம் என்று திமிராக பேட்டி அளித்ததோடு, விவேக் ஓபராயுடன் சேர்ந்து வவுனியாவில் பள்ளிக்கூடம் கட்ட உதவி செய்வேன் என்றார்.இயக்கம் இந்த பேட்டி உண்மையா என்று கேட்டதற்கு “ உண்மைதான். இப்போதும் அதையேதான் சொல்கிறேன்” என்று சூரியா பதில் அனுப்பி இருந்தாரம். இப்படி பட்ட நிலையில்தான் ரத்தசரித்திரம் படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்க யாரும் முன்வராத நிலையில், அதை வாங்கினார் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி.

  ஆளும் வர்க்கத்தின் கைகளுக்கு ரத்தசரித்திரம் சென்றதும் பெப்ஸி உள்ளிட்ட சங்கங்களே மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில்தான் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தோடு ரத்தசரித்திரம் இசை வெளியீட்டை ஏகப்பட்ட பிரபலங்களை அழைத்து சென்னையில் நடத்தினார்கள். ஒரு டப்பிங் படத்தின் நாம் தமிழர் இசைவெளியீட்டுக்கு இத்தனை அழைப்பாளர்கள் எதற்கு என்று பார்த்தால் எங்கள் ஆள் பலத்தை பாருங்கள் என்று காட்டுவதற்காகத்தானாம்.

  நிகழ்சியில் இசையை வெளியிட வந்திருந்த மணிரத்தினம் அருகில் அமர்ந்திருந்த ராம்கோபால் வர்மா, மணிரத்தினத்துக்கு திரும்பி ஒரு ஹாய் கூடச் சொல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். மணி பலமுறை திரும்பி பார்த்தும் அசையவில்லை வர்மா. மணிரத்னம் பேசும்போது வர்மா வயலன்ஸ் ஸ்பேஷ்லிஸ்ட் என்பதை பெருமையாகச் சொன்னார். தொடர்ந்து பலர் வர்மாவின் ரத்தவெறி பற்றியே பேசிக்கொண்டிருக்க இந்த டப்பிங் படத்துக்கு மொத்த பாடல்களையும்
  எழுதியிருக்கும் விவேகாவையும் பேசகூப்பிட்டார்கள். “ நான் இந்தப் படத்துக்கு பாடல் எழுதும்போது கையில் கையில் பேனா இருந்த மாதிரியே நினைவில் இல்லை. பேனாவுக்கு பதிலாக கத்தியைக் கொண்டு பாடல்களை எழுதியது போல ஒரு உணர்வு.” என்று உண்மையைச் பேசிவிட்டுப்போக சூரியா உட்பட பலரும் அவரை முறைத்தாலும் அரங்கத்தில் அவருக்கு கரவொலி. எதற்காக கைதட்டுகிறார்கள் என்று முதல்முறையாக மணிரத்தினம் பக்கம் திரும்பி கேட்டார் வர்மா. விஷயத்தை மணி ஆங்கிலத்தில் சொல்ல, வர்மா முகத்தில் வன்மச்சிரிப்பு. இந்த படத்தோடு சம்பந்தமில்லாத பாடலாசிரியர்கள் யுகபாரதியையும் முத்துகுமாரையும் நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள்.

  ஆனால் தமிழின உணர்வாளரான யுகபாரதி விழாவை தவிர்த்திருந்தார். தான் வராதது விழா மேடையில் தெரியட்டும் என்று விழாவுக்கு வரவில்லை என்பதயும் அவர் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளருக்கு சொல்லவில்லை போலும். இதனால் யுகாபாரதியை பேச வரும்படி நிகழ்ச்சிதொகுப்பாளர் அழைத்தார். பிறகு முத்துகுமாரை அழைத்தார்கள். தனக்கு எழுதும் தொழிலும் பணமும் மட்டுமே முக்கியம் என்பது போல “ சூரியாவுக்கு அதிகமாக பாடல் எழுதும் பாடலாசிரியர் நான் ” என்று பெருமைபட்டு விட்டு , ரத்தசரித்திரம் பாடலாசிரியரைகூட பாராட்டாமல் போய் விட்டார். இதற்கிடையில் விவேக் ஒபராய் நிகழ்சி முடிந்து வெளியே வரும்போது அவருக்கு கருப்புகொடி காட்டுவதற்காக திடீரென்று நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வெளியே கூடிய நாம் தமிழர் இயக்க தொண்டர்களை அப்புறபடுத்தியதாம் போலீஸ். மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தினர் கூடிவிடுவார்கள் என்பதை மோப்பம் பிடித்து விவேக் ஓபராயின் மேனேஜருக்கு போலீஸ் போட்டுக்கொடுக்க, அடுத்து பேச வந்த விவேக் ஓபராய் “ இல்லோருக்கும் வண்கம். நான் டமிள் மூவி பன்னியிருக்கு. உங்க அதரவு கெக்குறன்” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கடகடவென்று வெளியேரினார் பாடி காட் சூழ…கடைசியாக பேச சூரியா மைக்கைப் பிடித்ததும் பத்திரிகையாளர்கள் சொல்லி வைத்த மாதிரி வெளிநடப்பு செய்தார்கள் அவர் கண் முன்னே!

 10. நாஞ்சில் மகன்

  மேலே எப்பூடி என்பவர் எழுதிய கமெண்டில் தலைவரது இந்த இமாலய வெற்றிக்கு காரணம் அதிஸ்டமா? கடவுளா? திறமையா? திட்டமிடல்லா? ஒழுக்கமா? உழைப்பா?

  நிச்சயமாக திறமைதான் . திறமைசாலியைத்தான் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று ரஜினி சாரே ஒரு பேட்டியி்ல் சொல்லி இருக்கிறார். இது அவருக்கு ஆண்டவன் கொடுத்த திறமை. யாரும் காப்பி செய்ய முடியாத திறமை. எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் திறமை உள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்தான். ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் அழகாய் இருந்தால்தான் நடிக்க முடியும் . அந்த இரும்புகோட்டையை நொறுக்கிய பெருமை ரஜினியைத்தான் சேரும்.

 11. Elango

  உங்கள் தலைப்பு சூப்பர்! உண்மையில் ரசிகர் மட்டும் இல்லை எல்லோருமே கண் கலங்கி இருப்பங்கள்!

 12. Venky

  @ Venkat…
  Dont believe Wiki…below info is an good example for that…

  9 Padayappa Sri Surya Movies $9,354,000 1999

  -Padayappa is Rajini’s own production (Arunachala productions)…not Surya movies…

 13. santhosh

  உத்தம கலைஞனுக்கு ரசிகனாக இருப்பதை எண்ணி நிஜமாகவே ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள்!

  விகடன் குழுவினருக்கு ஒரு நான்கு முறையாவது இந்த மேக்கிங் ஆஃப் எந்திரனை போட்டுக் காட்ட வேண்டும்!)

 14. எப்பூடி

  நாஞ்சில் மகன்

  //நிச்சயமாக திறமைதான் //

  ரஜினியின் திறமையில் எந்த சந்தேகமும் வேண்டாம், ஆனால அவரது கடின உளைப்பால்த்தான் அவரது திறமைக்கு பெயர் கிடைத்தது. வெறும் திறமையை மட்டும் வைத்திருந்தாள் முன்னுக்கு வரமுடியாது, அதற்க்கு கடினமாக உழைக்கவேண்டும். ரஜினியின் இந்த உச்சத்திற்கு அதிஸ்டம், கடவுள், திறமை, திட்டமிடல் ஒழுக்கம், தன்னடக்கம், உழைப்பு என அனைத்தும் முக்கிய காரணிகள். இவற்றில் மிகுதி அனைத்தையும்விட ரஜினியின் உழைப்பு அபாரமானது.

  ஆரம்பகாலங்களில் மொன்று நான்கு வருடங்களுக்கு தினமும் 2 மணி நேரம்தான் தூங்கியிருக்கிறார், மனநிலை சீரில்லாமல் போகுமளவிற்கு உழைத்திருக்கிறார், வருடத்திற்கு 19 படம் விகிதம் மூன்று ஆண்டுகளில் 57 படங்களில் உழைத்திருக்கிறார்.

  இன்றுகூட தலையை கோதினாலே ரசிக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்க தினமும் மணிக்கணக்கில் உடலை வருத்தி ஒப்பனை செய்திருக்கிறார், கற்களிலும் இரும்பு தண்டவாளத்திலும் இந்த வயதிலும் டூப் போடாமல் நடித்திருக்கிறார்.

  ரஜினி என்றுமே உழைப்பைத்தான் அதிகமாக நம்புபவர்

  ராஜாதிராஜாவில் வரும் பாடல்வரி

  “கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறப்பாரு இஸ்ரப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார் ”

  பாட்ஷாவில் நக்மா “அதென்ன உன் வாழ்க்கை உன்கையிலின்னு எழுதியிருக்கிறீங்க, ஆண்டவன்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ” என்று கேட்பார்

  அதற்க்கு தலைவர் “அய்யய்யோ ஆண்டவன் இல்லையின்னா நாமெல்லாம் எங்கைங்க? ஆனா நம்மள நாம கவனிச்சாதான் ஆண்டவன் நம்மள கவனிப்பான்” என்று சொல்வார்

  இவை பாடலாசிரியதும் பாலகுமாரனதும் வரிகளாக இருந்தாலும் அதை தலைவர் தனக்கே உரிய பாணியில் தன் வரிகளைப் போலவே சொல்லியிருப்பார். அதுதான் உண்மையும்.

  தலைவரின் இந்த இமாலய வெற்றிக்கு ‘முதல்’ காரணம் அவரது உழைப்புத்தான் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

 15. karthik

  உண்மை சொல்ல வேண்டுமானால், வியப்பு, பரிதாபம் எல்லாம் ரஜினிய பற்றி புரியாதவர்களுக்கு தான். அவர் இன்று உள்ள நிலைக்கு சும்மா கை வீசிட்டு வந்தாருன்னு நினைத்தீர்கள? நிச்சயம் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்துள்ளது. அனால் அது அவரின் வெற்றிக்கு ஒரு சிறிய பங்களிப்பு தான். அவரிடம் உள்ளது விட முயற்சி. தோல்வியால் துவண்டு போகாத குணம், யோசித்து முடிவு எடுக்கும் திறன், ஆன்மிகம். இன்று நேற்று அல்ல, அவர் படிப்படியாக அவர் தனது ஆண்மிக அறிவை வளர்த்து கொண்டண்டது அவரின் அந்நாள் பேச்சுக்களை கவனித்து வந்தீர்களானால் புரியும்.

  மற்ற படி அவர் நம்முள் ஒருவர். மனிதர்களை புரிந்து கொள்ள தெரியாதவர்கள் தான் அவரின் மீது எரிச்சல் கொள்வர், அல்லது அவரை வைத்து பிறரை மட்டம் தட்டுவார்கள். ஒன்று அவரை கண்மூடித்தனமாக ரசிப்பார்கள் இல்லை வெறுப்பார்கள். இன்று வரை ஒரு ஆன்மிகவாதியாக, ஒரு கலைங்கனாக தன்னை மெருகுஎற்றி உள்ளார். அதில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றால் தான் அவரின் உடலுக்கும் மனதிரும் நல்லது அல்ல. அது போல் அவரை அரசியல் பண்ணுங்க, ராக்கெட் விடுங்கன்னு சொல்லறதும் தமிழ் சினிமாவிற்கு வரலாற்று இழப்பு, பிழை.

 16. karthik

  இன்னும் ஒரு மிக பெரிய பொறுப்பு ரஜினி அவர்களுக்கு உள்ளது. வட இந்தியாவில் இருந்தவர்களுக்கு தான் அந்த உணர்வு புரியும். வட நட்டவணுக எல்லாம் இந்திய சிநேமானாலே ஹிந்தி சினிமான்னு நெனச்சுட்டு இருக்கானுக. அது தவறு, ஹிந்தி சினிமா இந்திய சினிமாவில் ஒண்ணுதான்னு, தமிழ் சினிமா தான் இந்திய சினிமாவின் தலை சிறந்த சினிமா, அப்புறம் தான் ஹிந்தினு நாம நிருபிச்சு காட்டனும். அத அஜித், விஜய், சூர்யா, விக்ரம் செய்ய முடியுமா? இவங்க எல்லோரும் நல்ல நடிகர்கள் தான், ஆனா அவங்க காசு கொடுத்த ஹிந்திக்கு போய்டுவாங்க. யாரால தமிழ் சினிமாவின் புகழை வெளி நாடுகளுக்கு பரப்ப முடியும்? யாரால தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தலை நிமிர்ந்து செல்ல வைக்க முடியும்? ANSWER: THE ONE AND ONLY **SUPER STAR***. ( இப்போ புரிதுன்களா தமிழர்கள் பெருமைபடுற மாதிரி அவர் என்ன செய்ய செய்யணும், செய்ய போறார்னு!!! ).

 17. Ganesan

  கோடானு கோடி ரசிகர்களின் மனதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள் வினோ சார். மிக்க…………………………………………………………………………………………………………..
  …………………………………………………………………………………………………………………..
  ……………………………………………………………………………………………………..க நன்றி.

 18. Manoharan

  உண்மையில் நாம் அனிமேசன் என்று நினைத்த பல காட்சிகளை ரஜினி லைவாக செய்துள்ளது பிரமிப்பாக உள்ளது. லைவாக நடித்துவிட்டு அதை அனிமேசனாக இருக்கும் என்று நினைக்கவைத்ததுதான் ரஜினியின் தத்ரூபமான நடிப்புக்கு மிக சிறந்த உதாரணம். ஆழமாக இதை யோசித்தால் நிச்சயம் ரஜினிக்கு இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர் விருது கூட பத்தாது.
  மேக்கப் மேனை நம்பியே படம் எடுக்கும் கமலை பாராட்டுபவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

 19. M.MARIAPPAN

  தலைவர் பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது இனம் மொழி நாடு என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் எந்திரன் யாராலும் வீழ்த்த முடியாத ஹிமாலய சாதனை படைத்து கொண்டு இருக்கிறது . மேலும் தீபாவளி படங்கள் எதுவும் சரி இல்லை ,ஆகவே எந்திரன் மேலும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது , ஆனால் ஆடுகளம் படத்தை சன் PICTURES எடுத்து உள்ளது இதனால் எந்திரனுக்கு ஏதும் பாதிப்பு வருமா ?
  எந்திரன் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் போது , அடுத்த படத்துக்கு என்ன அவசரம் . இதில் ஏதும் உள்குத்து வேலை நடக்குதா ?. இது சம்பந்தமாக எதாவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . என்றும் தலைவர் வழியில் MR . வினோ நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .

 20. DEEN_UK

  ////அந்த மூலகர்த்தா, எந்திரனுக்காக பட்ட பாடுகள், ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ என்ற பெயரில் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பான போது விமர்சகர்கள் தலை கவிழ்ந்தன, நடு நிலையாளர்கள் வியந்தனர், ரசிகர்களோ கண் கலங்கினர்!////
  முழுக்க முழுக்க உண்மையான வரிகள்.. தலைவர் மீது மோல்ட் ஊற்றும் போதும்,அவர் அமைதியா எல்லாவற்றையும் தாங்கி கொண்டு பொறுமையாக அமர்ந்து இருந்த காட்சியும்,மேலும் சில காட்சிகளில் அவர் பட்ட கஷ்டத்தை பார்த்த போது ,என்னை அறியாமல் எனது கண்களில் சில கண்ணீர் துளிகள் வந்து உண்மை….தலைவன் ஸ்க்ரீனில் சும்மா நின்றாலே ,படம் வெற்றி என்பது எழுதப்பட்ட விதியாக இருந்தாலும்…நம்மை சந்தோஷ படுத்த இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்….அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்போது அவரது வெற்றி வாழ்க்கையில் எந்திரன் ஒரு வைர கிரீடமாக அமைந்துள்ளது.மேலும்,வளரும்,வளர்ந்த நேற்றைய காளான் நடிகர்களுக்கு ஒரு பாடமாக தலைவர் உழைப்பு அமைந்துள்ளது..என் தங்க தலைவனுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்…

 21. MICSON

  அருமையான கட்டுரை . making of enthiran காண்பித்த போது உண்மையிலே அழுது விட்டேன் .இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தும் ஒரு வார்த்தை கூட பெருமையா சொல்லாம ,ஏதோ பத்து வேஷம் போட்டு நடிச்ச ஒரு மகா (?) நடிகனை புகழ்ந்து பேசும் தலைவா ! உனது புகழ்ச்சிக்கு அவர் தகுதியில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக் கொள்கிறேன் . உனது நடிப்பு திறன் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்பது அவர் உன் மீது வைத்துள்ள அன்பிற்கு(!)
  ஒரு சின்ன ஆதாரம் .

 22. எப்பூடி

  //ஏதோ பத்து வேஷம் போட்டு நடிச்ச ஒரு மகா (?) நடிகனை புகழ்ந்து பேசும் தலைவா ! உனது புகழ்ச்சிக்கு அவர் தகுதியில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக் கொள்கிறேன் . உனது நடிப்பு திறன் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்பது அவர் உன் மீது வைத்துள்ள அன்பிற்கு(!)
  ஒரு சின்ன ஆதாரம் .//

  நான் என்னதான் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்தாலும் கமல் படங்களையும் ரசிப்பவன், தலைவரது தனிப்பட்ட பண்புகளில் பலவற்றை பின்பற்ற விரும்பும் நான் பலரும் விமர்சிக்கும் கமலத்து தனிப்பட்ட வாழ்க்கையின் ஒருபக்கத்தை ஒருபோதும் விமர்சிப்பதில்லை. ஆனால் எனக்கு கமலிடத்திலிருக்கும் மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எப்போதெல்லாம் ரஜினியை பற்றி கேட்டாலும்.

  “முன்பெல்லாம் நாங்கள் சிங்கப்பூரில் ஷூட்டிங்கில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்குவோம், இருவரும் பாலச்சந்தரின் மாணவர்கள், ரஜினி தன்னை தேடுகிறார், நான் சமூகத்தில் தேடுகிறேன், இருவரும் தனித்தனியாக நடிப்பதாக முடிவெடுத்தோம் ”

  அப்பிடியிப்பிடியின்று சொல்கிறாரே தவிர எப்போதும் ரஜினியின் திறமையை பற்றியோ வளர்ச்சியை பற்றியோ படங்களைப்றியோ வாயே திறக்க மாட்டேன் என்கிறார். இது அவர் திட்டமிட்டுத்தான் இப்படி பேசுகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.

 23. KICHA

  oru boxla 6 mani neram irukum bodhu thalai mattum velia therium scene, ennala adhai parkave mudila. Manasuku romba kastama irundhudhu.

  Dubbing pesumbodhu, andha sirippu…. chance illai. Thalaivaaaaaa!

 24. Anand

  சூப்பர் வினோ சார்… Making of Enthiran பார்த்து எங்க மனசில இருந்ததை அப்படியே எழுதிருக்கிங்க.
  எந்திரன் making பார்க்கும்போது வந்த கண்ணீர், உங்கள் கட்டுரையை படிக்கும் போதும் வந்தது.
  தலைவர் பட்ட கஷ்டங்களை பார்த்து கண்கலங்கியது. சொல்ல வார்த்தைகளே இல்லை. அவர் திறமைக்கும், உழைப்புக்கும், பட்ட கஷ்டங்களுக்கும் மாபெரும் வெற்றியை ஆண்டவனே கொடுத்துவிட்டான்…………
  One and Only Superstar …( சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும்)…
  தலைவா………… என்ன தவம் செய்தோம் நாங்கள் உன்னை பெறுவதற்கு?

  Thank’u so much வினோ சார் உங்க கட்டுரைக்கு…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *