BREAKING NEWS
Search

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

சங்க என்ற படத்தில் ஒரு வசனம் வரும்… ‘டொனேஷன், டெர்ம் பீஸ், ட்யூஷன், அதிலும் ஸ்பெஷல் ட்யூஷன்… என புடுங்கறான் புடுங்கறான் புடுங்கிகிட்டே இருக்கான் புடுங்கி’ என்பார் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையில் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை. அந்த வசனத்துக்கு திரையரங்கில் கிடைத்த கைத்தட்டலே, மக்களின் நொந்த மனதுக்கு சாட்சி.

கல்வியை உச்சலாபம் வைத்து விற்கும் இழிபிறவிகளை விட மோசமான ஜென்மங்கள் உலகில் யாரும் இருப்பார்களா என்று கேட்டால், இல்லையென்றே சொல்வேன். ஔவை சொன்ன இழிகுலத்தோர் வேறு யாருமல்ல… இவர்கள்தான்.

திருட்டு அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், நாட்டை ஏய்க்கும் தொழிலதிபர்கள்… இவர்களுக்கெல்லாம் மேலான ஒரு மோசடிக் கும்பல் உண்டென்றால் அது கல்வியை விற்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அவற்றை நடத்தும் மோசடி ட்ரஸ்ட்கள்தான்.

வகுப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ஒரு நாளில் அல்லது வாரத்தில் நிச்சயம் ஒரு முறை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் கறந்துவிடும் பள்ளிகள் ஏராளம். இந்த தனியார் பள்ளிக்கூட தூண்களில் சாய்ந்து நின்றால்கூட காசு கொடுங்க என்று கையில் பிரம்போடு நிற்பார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு கொள்ளை, கட்டணம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

புரசைவாக்கத்தில் ஒரு பள்ளியில் ப்ரீ கேஜி அட்மிஷனுக்கு ரூ 50 ஆயிரம் நன்கொடை தந்தால்தான் உண்டு. சேத்பட்டில் உள்ள அந்த புகழ்பெற்ற பள்ளியில் ரூ ஒன்று முதல் 3 லட்சம் வரை நன்கொடை தர வேண்டும். இங்கெல்லாம் சாமானியன் வீட்டுப் பிள்ளை படிக்கவே முடியாது.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது. இங்கெல்லாம் கௌரவத்துக்காக பிள்ளைகளைச் சேர்க்கும் நடுத்தரவாசிகள்தான் பலியாடுகள்.

எத்தனையோ ஆண்டுகள் எத்தனையோ தனி நபர்கள், அமைப்புகள் முறையிட்டும் தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் முறைப்படுத்தப்படாமலேயே இருந்தன. ஆனால் திமுக அரசு சற்றுத் துணிந்து இந்தக் கொள்ளைக்கு ஒரு கடிவாளம் போட்டுள்ளது.

நீதிபதி கே கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதுகூட சற்று அதிகமான கட்டணம் என்றாலும், இதற்கு முன் அடிக்கப்பட்ட கொள்ளையோடு ஒப்பிட்டால் எவ்வளவோ பரவாயில்லை எனும் அளவு நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண நிர்ணயம் மற்றும் அதில் அரசு காட்டிய உறுதி நிச்சயம் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு பெரிய இடியாகத்தான் இருந்திருக்கும்.

இந்​தக் கட்​ட​ணங்​களை தமிழகத அரசு ஏதோ குத்துமதிப்பாக நிர்ணயிக்கவில்லை. மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​ ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஸ்டாலின் வார்த்தையில் சொல்வதென்றால், “ஒவ்​வொரு பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின் அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​ நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக் குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படிவத்தை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி வழங்​கி​யது.

இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701 பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​ ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிடாமல், படிவங்கள் தராத பள்ளிகள் பற்றியும் விசாரித்து, அவற்றின் தரம், தேவைக்கேற்ப ஓராண்டுக்கான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது அரசு. பள்ளியை நடத்தும் தாளாளருக்கு எவ்வளவு லாபம் என்பதையும் நிர்ணயித்து, அதை கட்டணத்துடன் சேர்த்துள்ளது அரசு. நிச்சயமாய் இந்தக் கட்டண விகிதப்படி வசூலித்தால் பள்ளியை நடத்துபவருக்கு எந்த நஷ்டமும் வராது.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் விவரம் இது: அதி​க​பட்​ச​மாக மேனி​லைப் பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9 ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு அறி​விக்​கப்​பட்​டள்ளது.​..”

அரசு கலர் டிவி கொடுத்தபோது கூட மக்கள் இத்தனை மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். அந்த அளவு பெற்றோரை நிம்மதிப் பெருமூச்சுவிடவைத்துள்ளது இந்த அறிவிப்பு.

ஆனால் இந்த கட்டணங்களை வழக்கம்போலவே ஏற்க மறுத்து நீதிமன்றத்துக்குப் போனார்கள், தன்னிச்சையாக சுரண்டிக் கொழுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள்.

தீர விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று, அந்த மனுக்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசின் கட்டண விகிதம் சரியானதுதான் என்று தீர்ப்பளித்தனர். இது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஆனால் இந்த நேரத்தில்தான் தாங்கள் எப்பேர்ப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர் தனியார் பள்ளி தாளாளர்கள்.

இனி நீதிமன்றத்தை நம்பப்போவதில்லையாம்… அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையைச் சந்திப்பார்களாம்.

அதெப்படி அரசியல் ரீதியாகச் சந்திப்பார்கள்? இதோ தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி:

“எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளில் குறைந்தபட்சம் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் குடும்பம் என கணக்கிட்டால் கிட்டத்தட்ட 50 லட்சம் ஓட்டுக்கள் தேறும்.

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் வாக்குறுதி அளிக்க முன் வருகிறதோ அந்த கட்சிக்குதான் இந்த ஓட்டுகள் என முடிவெடுத்துள்ளோம். தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டுக் கொள்ள அனுமதி தர வேண்டும். அரசு தலையிடக் கூடாது என்பதே எங்களின் ஒட்டு மொத்த கோரிக்கை.

முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் நிலைமை இப்போது நன்கு புரியும். அவர் இப்போது உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்….”

-போலிச் சாமியார்கள் கூட கிட்டே நெருங்க முடியாது. அத்தனை அயோக்கியத்தனமாக கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள் இந்தக் கயவர்கள்.

நாங்கள் கல்விச்சேவை செய்கிறோம் என்று கூறிக் கொண்டுதான் இவர்கள் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தங்கள் வியாபார முகத்தைக் காட்டுகிறார்கள்.

இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதே, இந்​தப் பள்ளி​கள் கொடுத்த வரவு,​​ செலவு, எதிர்கால தேவை போன்ற கணக்​கீடு​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான்.​ ஆனால் அதை இப்போது ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். காரணம் ரொம்ப சிம்பிள்… பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் அடிக்கும் மறைமுகக் கொள்ளை இதனால் பாதிக்கப்பட்டு விட்டது என்பதே.

பிரி கேஜிக்கும் எல்கேஜிக்கும் கூட கம்ப்யூட்டர் கட்டணம், நூலகக் கட்டணம், ஸ்போர்ட்ஸ் கட்டணம், நீச்சல் கட்டணம் என தினுசுதினுசாகக் கொள்ளையடித்ததை இனி தொடர முடியாதே என்ற ஆத்திரத்தில், இப்போது தேர்தல் அரசியலைக் கையிலெடுத்துள்ளன இந்த அறிவிலிகள்.

கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்று. அதில் அரசின் கட்டுப்பாடுகள் இருந்தே தீர வேண்டும். இப்போதுதான் அரசு சரியான முடிவையும் எடுத்துள்ளது.

இதற்கெல்லாம் தங்களால் கட்டுப்பட முடியாது எனக் கருதினால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்​கிக்​கொள்வதுதானே…

அதை விட்டுவிட்டு தேர்தலில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டும் அளவுக்கு இந்த கல்வி நிறுவன முதலாளிகள் சவால் விடுகிறார்கள் என்றால், இந்தப் பள்ளிகளை கட்டாயமாக அவர்களிடமிருந்து பறித்து அரசின் வசப்படுத்துவதுதான் ஒரே வழி. அரசு இந்த விஷயத்தில் துணிந்து களமிறங்கலாம். நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு ஏதுவாகவே உள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான கட்டணங்களை, அந்தந்தப் பள்ளிகளின் முன்பு பெரிதாக அச்சிட்டு ஒட்டச் செய்வதோடு, இவை சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய தனி குழு ஒன்றையும் அமைக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு நமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக துணை முதல்வர் ஸ்டாலினின் முனைப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதில் செய்த உதவிகளும் மெச்சத் தக்கவை.

கல்வித் துறையில் நடந்த பெரும் கொள்ளைக்கு தடைபோட்டிருக்கும் அரசு, தனியார் பள்ளி முதலாளிகள் சிலரின் வெத்து வேட்டு அரசியல் மிரட்டல்களுக்குப் பணியாமல், அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால் நிஜமாகவே தலைமுறை தாண்டியும் நன்றி சொல்வார்கள் தமிழ் மக்கள்!

-வினோ

என்வழி
19 thoughts on “கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

 1. ss

  ரொம்ப நல்ல விஷயமுங்க.

  வீம்பு செய்யும் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் .. எவ்வளவோ விஷயங்களை அரசு ஏற்று நடத்தும் போது பள்ளிகளை ஏன் அரசுடைமையாக்க கூடாது..

  பள்ளி கல்வி அமைச்சரின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே நன்றாக இருந்து வருகிறது. அவரது தந்தை மரணத்திற்கு பிறகு, வெளி நாட்டில் இருந்த வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தார். அப்போதே எனக்கு அவர் மீது ஒரு நம்பிக்கை வந்தது. வெட்டி அரசியல் பேச்சு இல்லாமல் கிடைத்த துறையை செம்மையாக செயல் படுத்தும் அவருக்கு வாழ்த்துக்கள்.. மென் மேலும் பல நல்ல விஷயங்களை அவர் செயல் படுத்துவார் என நம்புவோம். துணை முதல்வர் அவருக்கு துணையாக இருக்கட்டும்.

 2. srini

  போலிச் சாமியார்கள் கூட கிட்டே நெருங்க முடியாது. அத்தனை அயோக்கியத்தனமாக கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள் இந்தக் கயவர்கள்——–௧௦௦% vino

 3. Raja

  திமுக ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாக் சொல்லிக் கொள்ள்லாம். இலவசத்தை கொடுப்பதை விட இது போல நல்ல திட்டங்களை செயல் படுத்துமானல் திமுக மக்கள் மதிப்பை பெறும்.

 4. Senthil

  Govt can take over and it will be nice in terms of fee?
  Do they able to provide the same management?
  My guess is that all the scholl will show result like government school.
  Standard of education may go down.

  It’s better to force private school companies to obey government order instead of taking control over and spoiling the standard of future geneartion.

 5. Ravi

  இதுதான் தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது… நல்லதையும் தட்டி கொடுத்து அல்லதை தட்டி கேட்டு பத்திரிக்கை தர்மம் கடைபிடிக்கும் பண்பு என்னைக் கவர்கிறது…

 6. Nice

  இந்த கட்டண நிர்ணயத்தை ஒரு அறிவிப்பாக மட்டும் நிறுத்திவிடாமல் எல்லா தனியார் பள்ளிகளும் பின்பட்ருகின்றனவா என்று சோதனை மேற்கொண்டால் அது இந்த அரசின் சாதனையாக இருக்கும்.

 7. basheer

  கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவனுக்காவது மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும்.சமூகத்தில் அவர்களுக்கு எப்போதும் எந்த அங்கீகாரமும் கிடைத்ததில்லை.ஆனால் கல்வி சேவை செய்வதாக கூறிக்கொள்ளும் இந்த காவாலி நாய்களுக்கு அதுபோன்ற குற்ற
  உணர்ச்சியும் கிடையாது.சமூகத்தில் இந்த இழிபிறவிகளுக்கு கிடைக்கும் கௌரவமும் கொஞ்சநஞ்சமல்ல.இறால் பண்ணை வைத்து நஷ்டமடைந்த ஒருவர் (இவருடைய தொழில் வட்டிக்கு பணம் கொடுப்பது.) என்னிடம் கூறியது.”குத்தாலத்தில் ஸ்கூல் ஒன்னு நல்ல விலைக்கு வந்தது,வாங்கி போட்டு தொலைஞ்சிருக்கலாம்.இந்த நாசமா போன தொழில்ல காலை வச்சு மாட்டிகிட்டேன்”. எப்படி இருக்கு கதை? சீர்காழியில் ஒரு தனியார் பள்ளி.ஆஹா! இவங்க தொழில்நுட்ப விஷயம் வெளிய தெரிஞ்சா தமிழ்நாடு பூரா உள்ள கொள்ளைகூட்டமும் இங்கே வந்து டியூசனுக்கு கியூவில நிக்கும்.கல்வியும் மருத்துவமும் எல்லோருக்கும் எளிதாய் கிடைக்கும்வரை இந்த
  நாடு உருப்பட போவதில்லை.

 8. r.v.saravanan

  பசங்க என்ற படத்தில் ஒரு வசனம் வரும்… ‘டொனேஷன், டெர்ம் பீஸ், ட்யூஷன், அதிலும் ஸ்பெஷல் ட்யூஷன்… என புடுங்கறான் புடுங்கறான் புடுங்கிகிட்டே இருக்கான் புடுங்கி’

  இந்த வசனத்திற்கு நான் தியட்டரில் கை வலிக்கும் வரை தட்டினேன்
  இந்த கட்டண நிர்ணயம் விசயத்தில் நீங்கள் சொல்வது போல் பள்ளி
  முதலாளிகளுக்கு பணியாமல் அரசு கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்படி நடந்தால் மக்களுக்கு இது ஒரு வரப்ரசாதம்

 9. r.v.saravanan

  நாங்கள் கல்விச்சேவை செய்கிறோம் என்று கூறிக் கொண்டுதான் இவர்கள் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தங்கள் வியாபார முகத்தைக் காட்டுகிறார்கள்.

  சரியான வார்த்தை வினோ

 10. Mariappan

  அரசை பாராட்டுகிறேன் . அதே நேரம் பிரைவேட் ENG காலேஜ் கட்டணத்தையும் கிடுக்கி பிடி போட்டால் நல்லது. பகுத்தறிவு பேசும் கட்சி இதனை நாள் சும்மா இருந்து விட்டு தேர்தல் நெருங்கும்போது பேர்வாங்க இதை செய்வது உள்நோக்க்கதுடந்தன்.

 11. MSK

  ” படிப்பு சொல்லி கொடுப்பது என்பது ரொம்ப பெரிய சேவை. ஆனா அத வச்சி காசு சம்பாதிக்கணும்னு நினைச்சா, பேசாம ஒரு வட்டி கடை போட்ரு. பள்ளி கூடம் நடதுறேங்கரே பேருல ஏழை மக்கள்ட கொள்ள அடிக்காத. அதுக்கு வட்டிகடையே மேல்.”
  மேற்கண்ட வசனம், ஒரு படத்தில் ராஜ்கிரண், தனியார் பள்ளி நடத்தும் குஷ்பூ விடம் கூறுவதாக அமைக்கபட்டிருக்கும். எனக்கு மிகவும் பிடித்த வசனம் அது. பணம் சம்பாதிக்கும் குறிகோளோடு பள்ளி/கல்லூரி நடத்தும் இன்றைய பண முதலைகளுக்கு எதிரான சரியான வசனம்.

 12. MSK

  //பிரி கேஜிக்கும் எல்கேஜிக்கும் கூட கம்ப்யூட்டர் கட்டணம், நூலகக் கட்டணம், ஸ்போர்ட்ஸ் கட்டணம், நீச்சல் கட்டணம்//
  மிகவும் உண்மை. எனது தோழி மகனின் எல்கேஜி fees particulars பார்த்து அரண்டு விட்டேன். மொத்த fees Rs.28100/- உடுப்பு மற்றும் காலணியுடன் (இதில் highlight ஆன செய்தி என்னவென்றால் அந்த நான்கு வயது பையனுக்கு நூலக கட்டணம் வருடத்திற்கு அறுநூறு ரூபாய். எங்கே போய் முட்டி கொள்வது ??). பள்ளி வாகன கட்டணம் இதில் சேராது. போனாலும் போகாவிட்டாலும் அதை மாதம் தோறும் கட்ட வேண்டும். இத்தனைக்கும் அது மிக பிரபலமான பள்ளி ஒன்றும் கிடையாது. என் தோழி, அவர் மகனை அதில் சேர்த்த ஒரே காரணம், அவர் வீட்டின் அருகில் உள்ளது என்பது தான்.

 13. ss

  செந்தில்,

  சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்வு முடிவுகளை பார்த்ததில்லையா?

  அரசு பள்ளிகள் எல்லாம் மோசம் என்று பொத்தாம் பொதுவாக கூறகூடாது. அரசு பள்ளிகளில் கட்டிடம் மற்ற வசதிகள் குறைவுதான். தரம் மிக குறைவு என்று சொல்லகூடாது. சொல்லபோனால், பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவர்கள் வாழ்கையில் முன்னேறுவதற்கு அரசு பள்ளிகள் தான் உறுதுணையாக இருந்து வருகிறது. கல்வி அறிவு இல்லாத பெற்றோர்களுக்கு பிறந்த குலைந்தகைளை வைத்தே வெற்றி பெற்று காட்டும் ஆசிரியர்கள், ஓரளவு கல்வியறிவு பெற்ற குழந்தைகளை எவ்வளவு சிறப்பாக படிக்க வைக்க முடியும்.

  முரண்டு பிடிக்கும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக அரசுடைமையாக்க படவேண்டும். அவர்கள் முரண்டு பிடிப்பதே பணம் சம்பாதிக்கதான். பணம் குறிக்கோளாக கொண்ட அந்த பள்ளியின் கல்விதரம் கேள்விக்குறிதான்.

  அரசுக்கு வேண்டுகோள்: தயவு செய்து முரண்டு பிடிக்கும் பள்ளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குங்கள் அல்லது அந்த பள்ளிகளை அரசுடைமை ஆக்குங்கள்.

  பெற்றோர்கள் அரசுக்கு இந்த கருத்தை எடுத்து செல்லவேண்டும்

 14. குமரன்

  மிக நல்ல முடிவு. ஆனால் காசு வாங்கிக் கொண்டு முடிவை நீர்த்துப் போகச்செய்யும் திறமை கொண்டவர்கள் அரசியல்வாதிகள் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

  கல்வியை இலவசமாக்கிய காமராஜர் வலி நடக்க யாரும் இல்லை.

 15. வீரராகவன்

  ஒரு விஷயம் அனைவருமே மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே அந்த பள்ளியில் படித்தால்தான் தன் பிள்ளை நல்லா வருவான் என்று படாதபாடுபட்டு (இரவு முழுவதும் வெளியில் பிச்சைக்காரனைப் போல் நின்று/ அல்லது ஏகப்பட்ட பணம் தர தயார் என்று சொல்லி கெஞ்சுவது) சேர்த்துவிட்டு அதன் பிறகு கொள்ளை அடிக்கிறார்களே என்று கூப்பாடு போடுவது. ஏன் வேறு பள்ளியே இல்லையா? உங்களுக்கு தரமான கல்வியும் வேண்டும். தன் பிள்ளை கராத்தே, யோகா, நடனம், பாட்டு என எல்லாவற்றையும் கற்க வேண்டும். திறமையான ஆசிரியர் வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைகள் வேண்டும். ஆனால் கட்டணம் மட்டும் குறைத்து வாங்க வேண்டுமா? ஒன்று தெரியுமா? அரசு ஒவ்வொரு அரசு பள்ளி மாணவனுக்கும் ரூபாய் ஆயிரத்து நானூறு வருடத்திற்கு செலவழிக்கிறது. சில தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்தது வெறும் எண்ணூறும் அதற்கும் கம்மியாகத்தான். மூன்று வருடங்களுக்கு இதை வாங்கி என்ன செய்ய முடியும்?
  சிலர் நினைப்பது போல் அரசுடைமையாக்கினால் மற்ற அரசு பள்ளிகளின் தரம் போல தாழ்ந்து போகும். பெற்றோர்களுக்கு இப்போது மகிழ்ச்சியாக இருப்பது பின்னர் வேதனையில்தான் முடியும். ஒவ்வொரு வகுப்பறை கட்டுவதற்கும் குறைந்தது இரண்டு லட்சமாவது தேவை என்பது கட்டிடத் தொழிலாளிக்கு கூட புரியும். காற்றிலேயே கட்டிடம் எழுப்புபவர்களுக்கு இந்த வேதனை புரியாது. அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்ததை அனைவரும் அறிவர். குறைந்தபட்ச ஆண்டுதொகை ஆயிரத்தை விடக் குறைவு. இதில் பள்ளி நடத்துவதோ ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ இயலாத காரியம்.
  அரசு கேட்ட எல்லா விவரங்களையும் பள்ளிகள் கொடுத்தன. ஆனால் அவற்றை அப்படியே ஒதுக்கிவிட்டு சகட்டு மேனிக்கு தொகை குறைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏன் குறைப்பு என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. தயவு செய்து பள்ளி நிர்வாகம் பக்கம் உள்ள நியாயங்களையும் பாருங்கள்.

 16. Ilangkannan

  THE PRIVATE SECTOR IS NO GOOD FOR MANAGING EDUCATION PROPERLY, THROW IT OUT. MAKE ALL EDUCATIONAL INSTITUTIONS GOVERNMENT RUN. Bring in a system of selection in schools, colleges, and higher institutions, the system of selection through competitive examinations. 50% must be on pure merit basis (merit whether student is poor or well to do) , and the other 50% on merit with birth in so called lower castes. Make eduction in all these institutions free for all poor people, and introduce a slab system of fees for the others, liked to income tax payers and non taxed people but treat all agricultural families with good income as paying students. DO not use income certificates, decide on the basis of one or two witnesses and appearance of the students and a visit to their houses. Theis is somewhat a hard task, but this is 100 times better than the cruel system of privatised education. Do not recruit teachers on caste basis, but only merit basis, or else there cannot be good transfer of knowledge. Pay them well.

 17. a.eswaran

  தனியார் பள்ளிகளின் கட்டனக்கொள்ளைக்கு கடிவாளம் போட்ட தமிழகரசுக்கும்,மாண்புமிகு உதவி முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி கூற தமிழக மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.மேலும் சமச்சீர்கல்வி கொண்டுவந்து அமுல் படுத்தியது தமிழகரசின் மீது மக்களின் மதிப்பு கூடியுள்ளது.அதே சமயம் சமச்சீர் கல்விக்காகவும்,தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்கக்கோரி பல ஆண்டுகளாகப்போராடி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தினரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

  ஆ.ஈசுவரன், திருப்பூர்.

 18. Pasu

  Dear Vino,

  I have been reading this blog for long time. It is interesting to see lot of articles related with public interest in this fans website. It would be great if you can post the link of government fees for each school. I appreciate your work. Keep it up.

  Pasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *