BREAKING NEWS
Search

கல்லூரியில் ஆசிரியராக இனி ஸ்லெட் / நெட் தேர்வெழுதணும்!

கல்லூரி ஆசிரியராக இனி ஸ்லெட் / நெட் தேர்ச்சி அவசியம்… அப்படீன்னா என்ன?

logougcல்லூரி ஆசிரியர் பணிக்கு சேர வேண்டுமானால் முன்பெல்லாம் முதுகலைப் படித்திருந்தால் போதும் என்றிருந்தது. பின்னர் அதுவே, 1993-ம் ஆண்டுக்குள் எம் பில் முடித்திருந்தால் அல்லது 2002 க்குள் பிஎச்டி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றார்கள். பின்னர் பிஎச் டி முடித்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்பட்டது.

இப்போது இந்த படிப்புகள் எல்லாம் இருக்கட்டும்… முதலில் ஸ்லெட் (SLET- State Level Elegibility Test) அல்லது நெட் (NET – National Elegibility Test) போன்ற தகுதித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழுடன் வந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என விதிகளை மாற்றிவிட்டார்கள்.

இனி கல்லூரி ஆசிரியராகும் நோக்கில் மேல்படிப்பு படிப்பவர்கள் எம்பில், பிஎச்டி என பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் முன், ஸ்லெட் அல்லது நெட் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றுவிடுவது உத்தமம்.

சரி… அது என்ன நெட் / ஸ்லெட்?

NET என்பது தேசிய அளவில் பல்கலைக் கழக மானியக் குழுவால் (UGC) நடத்தப்படுவது. அறிவியல், கலை, வரலாறு, பொருளியல் என 77 க்கும் மேற்பட்ட பாடங்களில் நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால் நடைமுறையில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாநில அளவில் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். இன்னொன்று சில மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் இந்தத் தேர்வை எழுத விரும்பலாம்.

எனவே இவர்களின் வசதிக்காக மாநில அரசுகளே கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ள யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதுதான் SLET.

குறிப்பிட்ட மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ முகமையாக (Nodal Agency) இருந்து இந்தத் தேர்வுகளை நடத்தும்.

தேர்வுக்கான பாடங்கள்: Commerce, Economics, English, Hindi, History, Journalism and Mass Communication, Music, Philosophy, Political, Science, Psychology, Public Administration, Social Work, Sociology, Tamil, Botany, Chemistry, Computer Science, Electronics, Geography, Geology, Home Science, Library Science, Mathematics, Microbiology, Physical Education, Physics, Statistics, Zoology, Education, Law and Management என மொத்தம் 77 பாடங்கள்.

தேர்வு மையங்கள்: NET தேர்வுக்கு நாடுமுழுவதும் 66 மையங்கள். SLET தேர்வுக்கு மாநிலத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தேர்வெழுதும் வசதி உள்ளது.

NET தேர்வுக்கான அறிவிக்கையை பல்கலைக் கழக மானியக் குழு நவம்பர் மாதம் அறிவிக்கும். டிசம்பரில் தேர்வுகள் நடக்கும்.

தகுதி (NET & SLET-க்குப் பொதுவானது): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து மேற்கண்ட ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை / முது அறிவியல் பட்டம், குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன். தாழ்த்தப்பட்ட / பழங்குடி வகுப்பினர் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தாலே போதும்.

இறுதியாண்டு தேர்வு எழுதக் காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

வயது: குறைந்தபட்சம் 22 வயது. அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தமிழகத்தில் SLET…bharathiaruniversity

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற முகமையாக SLET தேர்வை நடத்துவது கோவை பாரதியார் பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தரப்பட்டது. ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. விரைவில் முடிவுகள் வெளியாக உள்ளன.

தேர்வு முறை (NET & SLET):

பகுதி 1 – முதல் தாள் – 100 மதிப்பெண்கள் (காலை 9.30 – 10.45 அதாவது 1.1/4 மணி நேரம்)

பகுதி -1 – இரண்டாம் தாள் – 100 மதிப்பெண்கள் ( முற்பகல் 11 – 12.15 வரை. அதாவது 1.1/4 மணி நேரம்)

பகுதி -2 – மூன்றாம் தாள் – 200 மதிப்பெண்கள் (பிற்பகல் 1.30 – 4.00 அதாவது 2.30 மணி நேரம்)

NET தேர்வில் மொழிப் பாடம் தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

SLET தேர்வில் மொழிப் பாடம் தவிர மற்றவற்றுக்கு தமிழ் / ஆங்கிலத்தில் பதிலளிக்கும் விருப்ப வசதி உண்டு.

விண்ணப்பங்கள், பாடத் திட்டம் மற்றும் மாதிரிக் கேள்விகளை தேர்வு நடத்தும் பல்கலைக் கழகத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் விபரங்களுக்கு நாளிதழ்களை தொடர்ந்து கவனிக்கவும். பல்கலைக்கழகத்தின் அறிவிக்கைகள் வெளியாகும்போது அதன்படி விண்ணப்பிக்கவும்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *