BREAKING NEWS
Search

கலைப்புலி தாணு மகன் திருமணத்தில் ரஜினி! – சிறப்புப் படங்கள்

கலைப்புலி தாணு மகன் திருமணத்தில் ரஜினி! – சிறப்புப் படங்கள்

மிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு. முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பிரமாண்ட போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தி, கவனத்தை ஈர்த்தவர்.

கலைப்புலி தாணு – கலாவதி தம்பதியரின் மகன் பார்த்தசாரதி என்கிற கலா பிரபுவுக்கும், வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என்.ராஜேந்திரன்- சாந்த லட்சுமி மகள் இரா. சரண்யாவுக்கும் இன்று திருமணம் நடக்கிறது.

முன்னதாக நேற்று புதன்கிழமை மாலை இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண அரங்கில் நடந்தது.

திரையுலக, அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

ரஜினி தம்பதியரை கலைப்புலி தாணு உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது விழாவுக்கு வந்த விஜயகாந்த் ரஜினிக்கு வணக்கம் வைக்க, அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார் ரஜினி.

பின்னர் இருவரும் இணைந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க, புகைப்படக்கார்ரகளுக்கு பெரும் உற்சாகம்!

என்வழி உங்களுக்காகத் தரும் பிரத்யேகப் படங்கள்….


-என்வழி ஸ்பெஷல்




11 thoughts on “கலைப்புலி தாணு மகன் திருமணத்தில் ரஜினி! – சிறப்புப் படங்கள்

  1. KICHA

    @ RISHI.
    அவருக்கு மட்டும் பப்ளிசிட்டி ஆசை இருக்காதா?

  2. kamatchi nathan

    rishi says:
    November 25, 2010 at 8:57 am

    why T. rajendhar is attacking rajini always? is there any insights to it?
    அவர் தலைவரை வைத்து படம் எடுக்கலாம் என்று கேட்டு இருப்பார் .தலைவர் no சொல்லிருப்பார் .அந்த காண்டு தான் (ஒரு வேளை தலைவரிடம் வீராசாமி கதையை சொல்லியிருப்பார் )

    ______________

    இதற்கு ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக் உள்ளது. நாளைய கேள்வி பதில் பகுதியில் பாருங்கள்!

    -வினோ

  3. M.MARIAPPAN

    தலைவர் மிகவும் அழகாகவும் இளமையாகவும் உள்ளார் .இந்த படங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி MR .வினோ . மேலும் தலைவர் எந்திரன் படத்தை கலைப்புலி தாணுவிடம் கொடுத்து இருந்தால் தமிழ் நாட்டில் மட்டும் கண்டிப்பாக 100 திரையரங்குகளில் 100 நாட்கள் காட்டி ஒரு புதிய சாதனையை செய்திருப்பார் . சன் டிவி க்கு கொடுத்து நல்ல வசூல் பார்த்து விட்டு படம் வந்ததே தெரியாமல் செய்து விட்டார்கள் , நன்றி கெட்டவர்கள் .மேலும் வினோ இந்த படத்தை SILVARJUBLEE ஒட்டி விழா எதுவும் எடுப்பார்களா ? இது சம்பந்தமாக தகவல் எதுவும் தெரிந்தால் தெரிவிக்கவும் . மிக்க நன்றி MR வினோ என்றும் தலைவர் வழியில்

  4. KICHA

    //இதற்கு ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக்
    உள்ளது . நாளைய கேள்வி பதில்
    பகுதியில் பாருங்கள்!
    -வினோ//

    ஆஹா, இது வேறயா? சீக்கிரம் சொல்லுங்க

  5. Muthu

    கலைப்புலி தாணு புதல்வன் திருமண விழாவிற்கு என் இனிய நல்வாழ்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *