BREAKING NEWS
Search

“கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்?” – பார்வதி அம்மாள் வேதனை

“கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்?” – பார்வதி அம்மாள் வேதனை

வல்வெட்டித் துறை: “சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?” என்று வேதனையுடன் பார்வதி அம்மாள் கேட்டார்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவுக்குப் போய், சிகிச்சைக்காக உரிய விசா பெற்று சென்னை வந்து, விமானத்தைவிட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் மலேசியா போய், ஒரு மாதம் கழித்து தன் சொந்த மண்ணுக்கு நொந்த மனதுடனும் மோசமடைந்த உடல் நிலையுடன் வந்து சேர்ந்துள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் எம்பியும், பிரபாகரனின் உறவினருமான எம்கே சிவாஜிலிங்கம் அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்.

வல்வை மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் எ மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் தமிழ்நெட் செய்தியாளர் விசாரித்ததற்கு, “முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். ஓரளவு சாப்பிடவும் ஆரம்பித்துள்ளார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.

பார்வதி அம்மாளிடம் பேசியபோது, “நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?” என்று வேதனையுடன் கேட்டார்.

காலைத் தொட்டு வணங்கும் சிங்கள செய்தியாளர்கள்!

இதற்கிடையே, வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்து பார்வதி அம்மாளை பார்த்துவிட்டுச் செல்கின்றனர் கொழும்பிலுள்ள சிங்கள செய்தியாளர்கள் பலரும். அவர்கள் பார்வதி அம்மாவின் காலைத்தொட்டு வணங்கி, நலம் விசாரித்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது என்றும் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

படங்கள்-செய்தி: தமிழ்நெட்
9 thoughts on ““கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்?” – பார்வதி அம்மாள் வேதனை

 1. Chozhan

  அம்மா, எங்கள் தமிழினத்தின் ஒரே தலைவனை பெற்ற உங்கள் காலைத்தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைக்காமல் செய்த தமிழினத்துரோகி கருணாநிதிக்கு நல்ல சாவே வராது என்பது நிச்சயம். அந்த வகையில் சிங்களனையும் மிஞ்சிவிட்டார் கருணா.

 2. mullaimainthan

  உனது மகன் கையால் சுதந்திர தமிழீழக்குடியரசின் கொடி ஏற்றப்படுவதை கண்டு நீ வாழ்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை அன்னையே

 3. sankar

  sir
  i want to ask 1 thing , eventhough kalaingar did wrong thing , but prabhakaran brothers and sister are in denmark and canada, why they wont care for them , medical facilities are good in those places than in chennai. why they did go there , is it because of climate or other reason

 4. sakthivel

  அன்னையே இன்னுமா கருங்காலிகளை நம்புகிறீர்கள்;

  உங்களின் வரவு தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சியே தடுத்திருக்கிறது இந்த அரசியல் கிழமேதை…

  தமிழின துரோகியின் தயவில் வீரத்தாய்க்கு வைத்தியமா…

 5. Sudha

  maha veeranai intha mannukkum thamil samugaththittkum nee thanthathu than kuttramai poi vittathu antha thamil eeeena thalaivarukku.

  pathavikkai Soniyavin munthaniyai pidithu thiriyum avarukku…. unn perumai enke theiryap pokiratu.

  கொழும்பிலுள்ள சிங்கள செய்தியாளர்கள் காலைத்தொட்டு வணங்கி, நலம் விசாரித்துவிட்டு கண்ணீருடன் திரும்பி sellum perumai unakku kidaithullathu endral… avargalukku unn perumai/ arumai therikirathu amma…. ithu than unn magan ethir parppathu….

  எங்கள் தமிழினத்தின் ஒரே தலைவனை பெற்ற neengal innum pallandu vala iraivanai iranjukiren.

 6. குமரன்

  வேறென்ன? சொக்கத் தங்கம் அன்னை சோனியா காந்தியின் கடைக்கண் பார்வை தன மீது விழுந்து அத்னான் பலனாக தனது மகள் கனிமொழிக்கு மத்தியில் ஒரு மந்திரி பதவி வாங்கி விட வேடும். தனது மூன்றாவது மகன் தமிழரசுக்கு சென்னை அண்ணா நகரில் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் எம் எல் ஏ ஆக்கிவிட வேண்டுமே அதற்காகத்தான். பார்வதி அம்மையாரைப் போல இருந்த ஒரே மகனையும் தனது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்க சிலந்ஜர் ஒன்றும் ஏமாளி இல்லை.

 7. radha

  அம்மா, எங்கள் தமிழினத்தின் ஒரே தலைவனை பெற்ற உங்கள் காலைத்தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைக்காமல் செய்த தமிழினத்துரோகி கருங்காலி கருணாநிதிக்கு நல்ல சாவே வராது என்பது நிச்சயம்.

 8. eelam tamilan

  தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு துரோகி – பேராசிரியர் ராமசாமி

  தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

  தமிழ் மிரர் இணையதளத்துக்கு பினாங் மாநிலத்திலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே பேராசிரியர் ராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

  முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  தமிழகத்தில் நடிகரும்,இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர்,நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தமிழ் மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.

  தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை, இலங்கைத்தமிழர்களுக்கு மாற்றம் ஏற்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *