BREAKING NEWS
Search

கலாம்… நம்பிக்கையை விதைக்கும் விஞ்ஞான விவசாயி!

தேசத்தின் கவுரவம் கலாம்!

உ பி மாநிலம் லக்னோவின் மில்லெனியம் பள்ளி மாணவர்களுக்கு அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

வகுப்பில் அப்போது ஒரு ஆசிரியை புவியியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர். அவர், தேசத்தின் பெருமையாகக் கருதப்படுபவர்… இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் அப்துல்கலாம்!

உள்ளே நுழைந்தவர், வகுப்பைத் தொந்தரவு செய்யாமல், ஒரு பெஞ்சில் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்தார். பக்கத்திலிருந்து இரு மாணவர்கள் ஆச்சர்யத்தின் உச்சியில் நின்றவர்களாய் அவரையே பார்க்க, தனக்கே உரிய புன்னகையுடன், பாடத்தைக் கவனியுங்கள் என்று கூறிவிட்டு, தானும் கவனிக்க ஆரம்பித்தார். ஆசிரியை கேட்ட கேள்விகளுக்கு ஒரு மாணவனின் உற்சாகத்தோடு பதில் சொன்னார். மற்ற மாணவர்கள் சரியாக பதில் சொன்னபோது கைதட்டிப் பாராட்டினார். கலாம் பதில் சொன்னபோது, மொத்த மாணவர்களும் கைத்தட்டினர்.

15 நிமிடங்கள் வகுப்பிலிருந்தவர், அந்த ஆசிரியயைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு இப்படிச் சொன்னார்:

“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும். ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும். சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்… அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை மதியுங்கள்,” என்றபோது, அவர் கூறியதை ஒப்புக் கொள்வது போல மாணவர்கள் பெரும் உற்சாகத்தோடு கைத்தட்டினர்.

அவரது வருகை மொத்த பள்ளியின் இயல்பையே புரட்டிப் போட்டுவிட்டதாய் உணர்கிறோம் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.

அதுதான் டாக்டர் அப்துல்கலாமின் சிறப்பு. அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு அழகான பாதையை அமைத்துத் தந்துவிட்டு வருகிறார்.

மாணவர்களுக்கு மிகப் பிடித்தமான ஒரே தலைவர் டாக்டர் கலாம்தான் என்று சொல்லும் அளவுக்கு மாணவர்கள் மத்தியிலேயே எப்போதும் இருந்து வருகிறார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்நாள் முழுவதையும் மாணவர்களின் கல்விக்காக, அவர்களின் முன்னேற்றுத்துக்காகவே செலவிட்டு வருகிறார் இந்த 79 வயது பிரம்மச்சாரி!

எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்களில் முதன்மையானவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்த ‘பாரத ரத்னா’ டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம்.

பொக்ரான் அணு குண்டு வெடிப்புச் சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவர். அன்றைக்கு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் கலாம். அதனால் பொக்ரான் சோதனைகளில் அவரது பணிகள் வெளியில் தெரியாமல் வைக்கப்பட்டன.

இந்தியாவின் முதல் சுய தொழில்நுட்ப செயற்கைக்கோளான எஸ்எல்வியை வடிவமைத்த பெருமையும் இவருக்கே சொந்தம்.

2002 முதல் 2007 வரை இந்தியாவின் மகா எளிமையான குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் கலாம். வெட்டி செலவு, பந்தாவில் நம்பிக்கையில்லாத இந்த மனிதர், குடியரசுத் தலைவரான தன்னைப் பார்க்க வந்தவர்களைச் சந்திக்க மறுத்ததில்லை.

உலகம் முழுவதும் 1 கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியுள்ள இந்த மாமேதையை எப்படிக் கவுரவிப்பது?

அவரது மனதுக்கு உகந்த மாணவர்களின் தினமாக அவர் பிறந்த நாளை (அக்டோபர் 15, டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினம்!) அறிவிக்க வேண்டும். அதுவே சரியான கவுரவமாக இருக்கும் என்பது பலரது கருத்து. இதை வலியுறுத்தி ஏராளமானோர் இணையம், மின்னஞ்சல் மூலம் ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கு முன்னதாக, இந்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டி, கலாமின் பிறந்த தினத்தை இந்திய மாணவர்கள் தினமாக முதலில் அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு பிரிவினரும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்த விரும்புபவர்கள் www.kalam4students.com என்ற இணையத்தில் அதற்கான படிவங்களைப் பெறலாம்.

“எந்த நாடு தனது  உயரிய பண்பாளர்களையும், அரிய கலைஞர்களையும் காலத்தே மதிக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டில் மீண்டும் அந்த உயர் பண்பாளர்கள் பிறக்காமலே போவார்கள்,” என்கிறது மகாபாரதம். ஏற்கெனவே பாரத ரத்னா விருதினை கலாமுக்கு அளித்துள்ளது இந்தியா. ஆனால் பரந்த சிந்தனையும் உயர்ந்த லட்சியமும் கொண்ட அவரது புகழ் பாரத ரத்னாவுக்கும் அப்பாற்பட்டது.

உரிய நேரத்தில் உயரிய பெருமையினை டாக்டர் கலாமுக்கு இந்தியா அளிக்க வேண்டும்… சர்வதேச அளவில் அதை நிலை நிறுத்தவும் முயல வேண்டும். செய்வார்களா?

-என்வழி
7 thoughts on “கலாம்… நம்பிக்கையை விதைக்கும் விஞ்ஞான விவசாயி!

 1. santhosh

  “எந்த நாடு தனது நாட்டின் உயரிய பண்பாளர்களையும், அரிய கலைஞர்களையும் காலத்தே மதிக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டில் மீண்டும் அந்த உயர் பண்பாளர்கள் பிறக்காமலே போவார்கள்,” என்கிறது மகாபாரதம். காமராஜருக்கு செய்த தவறு கலாமிற்கு நேர கூடாது…..

  கலாமின் பிறந்த தினத்தை இந்திய மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்.

 2. Paul

  Great man and I could not find words to explain when I met him at Newark airport and spent 5 mins. He was sitting in the package claim area and I went and introduced myself. He just inquired about where I live currently and my profession. Then I told him that I am from Tamil Nadu and my native place also. After that he told me “My native place is Rameswaram Sir”. Can you guys believe? I almost fell down on his feet ignoring all the cops and well wishers around him. Sir, first of all why did you call me Sir? I do not deserve to be called like that by you. Also you do not need to tell that you are from Rameswaram. By hearing Rameswaram, your name would come to every Indians mind. Then there were lots of rush to get an autograph. I rushed to the package claim area and grabbed 5 volumes of “Artamulla Indumatham copies” and rushed towards him to get his autograph. He asked do I like kannadasan and signed all the copies.

  On a side note, I have to give gift to couple of my friends on some special occasion and when I asked them do they need any consumes or electronic items or a book signed by our Kalam. Man, they just grabbed the books and ignored the rest.

  BTW, I always wanted to get autograph from 3 people. Kapil, Kalam and Super Star. I got it from all except from our Super star 🙁

 3. தணிகாசலம்

  //“எந்த நாடு தனது நாட்டின் உயரிய பண்பாளர்களையும், அரிய கலைஞர்களையும் காலத்தே மதிக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டில் மீண்டும் அந்த உயர் பண்பாளர்கள் பிறக்காமலே போவார்கள்,” என்கிறது மகாபாரதம்.// மேற்கண்ட கூற்று மகாபாரதத்தில் எங்கே கூறப்படுகிறது என்பதைத் தயவுசெய்து கூறுவீர்களா?

 4. tamilan

  சூப்பர் paul ,உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *